பக்கங்கள்

இங்கே துலாவு

சனி, 31 அக்டோபர், 2015

பார்வையற்றோருக்காக ஒரு வலைப்பூ

விங்ஞானத்தின் உதவியால் இஞ்ஞாலத்தை அலக்கத்துணிந்து விட்டோம்.

பார்வையற்றவர்களின் உலகை இனையத்தில் பதிவு செய்யும் முயர்ச்சி இது. விரல்மொழியர் என்ற வலைப்பூ பார்வையற்றோர் குறித்த அனைத்து தகவல்களையும் ஒருங்கே திரட்டி ஒரே இடத்தில் தரப்போகிறது. விரல்மொழியர் என்றால் என்ன பொருள்? பார்வையற்றவர்கள் தொடுதலின் வழியேதான் தங்கள் உலகை உணர்கின்றனர். பார்வையற்றோர் படிக்கும் முறை விரல்களை மையமாகக்கொண்டு; தொட்டு உணர்தலில் புரிந்துகொள்வதாய் அமைந்துள்ளது. எங்கள் விரல்களின் மூலம் பல விடயங்களை உலகிற்கு சொல்லுகிறோம். அவ்வாறு விரல்கள் மூலம் மொழிவதால் நாங்கள் விரல்மொழியர்களாகி விட்டோம்.

இன்று கணினி, கைபேசிவழியேவும், தொடர்பாடலை ஏற்படுத்துவதும் நம் விரல்கள் தாமே! இன்று அனைவருமே விரல்மொழியர்கள் ஆகிவிட்டோம்! இந்த அருமையான சொல்லாடலை முதலில் மொழிந்தவர்ிரா.பாலகனெசன். இவர், விருதுநகர் ஆண்கள்மேள்னிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். 2014 அக்டோபர் 3-ஆம் நாள் இதே பேரில் முகனூல் பக்கத்தை தொடங்கினார். பார்வையற்றோர் குறித்த செய்திகளை பத்திரிக்கை மற்றும் பார்வையற்றோர்கள் சேர்ந்து நடத்தும் மின்னஞ்சல் குழுமங்கள் வழி கிடைக்கும் செய்திகளையும் இப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார். யோகேஸ், இவர் தென்காசி அஞ்சலகத்தில் பணிபுரிகிறார், பொன்.குமரவேல், இவர் ஆசிரிய பட்ட படிப்பு பயின்று வருகிறார், பொன்.சக்திவேல், இவர் முதுகளை தமிழ் இலக்கியம் பயின்று வருகிறார், ஆகியோர் பாலகனேசன் அவர்களின் அன்புத்தொல்லையால் அவருடன் கைகோர்த்து நடத்த தொடங்கினர். பிரகு ஒரு வலைப்பூ தொடங்கலாம் என்ற என்னம் தோன்றியது. அதனை உடனே தொடங்கி விட்டனர். இப்பூவை பார்வையற்றோருக்கு பயன்படும் இனைய தலங்கள், பார்வையற்ற படைப்பாலிகளின் தலங்கள், பார்வையற்ற படைப்பாலிகளின் ஆக்கங்கள், பத்திரிக்கை செய்திகள் சேற்ந்து அலங்கரிக்கப்போகிறது.

இந்த வலைதலத்தை நடத்தும் அனைவருமே பார்வையற்றவர்கள்.

இப்பூவில் நீங்கள் கண்டு வியந்த பார்வையற்றவர் பற்றியும் எழுதலாம். நீங்கள் உங்கள் வலைப்பூவில் எழுதி சுட்டியை அனுப்பினாளும் செரி அல்லது மின்னஞ்சல் வழி எங்களுக்கு அனுப்பினாலும் பதிவிடுவோம். அதற்கான மின்னஞ்சல் முகவரி viralmozhiyar14@gmail.com. இதைப்பற்றி பாலகனேசன் அவர்கள் சொல்லும் போது, புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நாம் நிரையப்பேரை எட்ட முடியும். நம்மாள் அதை தான் செய்ய இயலாதே என வருத்தத்துடன் தன் கருத்தை எடுத்து வைத்தார். பார்வையற்றோருக்கான ஆவனப்படுத்தல் நம் தமிழ் மொழியில் கட்டாயம் வேண்டும். அதற்கான முயர்ச்சி தான் இந்த விரல்மொழியர் வளைப்பூ. இப்போதுதான் பூக்கத்தொடங்கி இருக்கிறது. உங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும் நாங்கள் அன்புடன் நாடி இருக்கிறோம். தொடங்குதல் எளிது ஆனால் தொடர்ந்து இதை கொண்டுபோக முயர்ச்சிப்போம். நீங்களும் அந்த வளைப்பூவை சென்று பாருங்கள்.

அதற்கான சுட்டி கீழேவிரல்மொழியர்

திங்கள், 19 அக்டோபர், 2015

பார்வையற்றோர் வசிக்கும் விடுதியில் நடந்த காதலர்தின கொண்டாட்டம் பாகம்2

காதலர்தினத்தன்று நடத்திய போட்டியில் பரிசு பெற்றவர்களைப்பற்றியும் உங்களுக்கு தெரிய வேண்டுமல்லவா! அதை இந்த ஆடியோவில் கேழுங்கள். காதலித்து திருமனம் செய்த ஒருவரை எங்கள் விடுதியிலேயே வளை வீசித்தேடினேன். அ

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

பார்வையற்றோர் வசிக்கும் விடுதியில் நடந்த காதலர்தின கொண்டாட்டம்

பார்வையற்றோர் வசிக்கும் விடுதி; மிகவும் வசிகரமானது. வெளியிலிருந்து எங்களை யாராவது பார்க்க வரும் போது நாங்கள் ஒரு ஒழுங்குக்கு உற்பட்டு அமைதியாய் இருப்போம். அவர்கள் சென்ற பிரகு தீயாய் இருப்போம். 2013-இல் நான் மதுரையில் உள்ள iab விடுதியில் தங்கி இருந்தபோது காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு க

வெள்ளி, 16 அக்டோபர், 2015

நான் ரசித்த அழகு!

வானவில் அழகை வர்ணித்தான்;
நான் அமைதியாய் இருந்தேன்.
பௌர்னமி அழகை பாராட்டினான்;
நான் மௌனமாய் இருந்தேன்.

வியாழன், 15 அக்டோபர், 2015

நிழலுலக நிஜங்கள்

சினிமாவின் உன்மை கதானாயகர்கலின் கதையை சொல்லும் வீடியோ இது. இதை வீடியோ எனச்சொல்வதைவிட ஆடியோ எனச்சொல்வதே சரியாய் இருக்கும். நேஸ்னல்ஜியோகிராபியில் சண்டைக்காட்சியில் நடிக்கும் களைஞர்கலின் வாழ்க்கை பற்றிய ஆவனப்படத்தைப்பார்த்தேன். அதிலிருந்து செய்திகளை எடுத்துக்கொண்டு எனது குரலில், என் நடையில் கட்டுரையாக அமைத்து பதிந்து யூடூப்பில் தரவேற்றியுள்ளேன். இதை கேட்டுவிட்டு நேரமிருப்பின் உங்கள் கருத்துக்களைச்சொல்லுங்கள்.



புதன், 14 அக்டோபர், 2015

நமக்காக யார் குரல் கொடுப்பார்!


புதுக்கோட்டையில் நடந்த வளைப்பதிவர் திருவிழாவில் நான் கலந்துகொண்டேன். இனைய கல்விக்களகத்தின் அறிவிப்புகளைக்கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன். பார்வையற்றோருக்கு தொழில்னுட்பந்தான் சுய சாற்பை கொடுக்கும். நாம் பெரும்பாலும் பெரிய நகரங்களில் வசிக்கிறோம். அங்கு நம்மை ஒரு குருகிய வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டு வாழ்கிறோம். கள்ளூரிப்படிப்பால் சிலருக்கு பார்வையற்றவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது.ானால், இன்று நம்மைப்பற்றிய விழிப்புணர்வுகள் அதிகம் வந்திருக்கிறதா என்றால் கேழ்விக்குறியாகத்தான் இருக்கிறது. புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நாம் தனியே நடந்து வருவதையே வியப்பாகப்பார்க்கிறார்கள். அப்படி என்றால் நமக்கான தொழில்நுட்பம் பற்றிய புரிதல் பார்வை உள்ளோருக்கு எந்த நிலையில் இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்று இல்லை. இன்று நம் தோழர்கள் கல்விக்கூடங்களில் ஆசிரியராய் இருப்பதால்; இலய சமுதாயத்தினரிடம் சிறிது விழிப்புணர்வு இருக்கிறது. கோவையைச்சேர்ந்த வளைப்பதிவர் ராஜ்குமார், jaws மற்றும் kurzweil மென்பொருட்கள் பற்றி கூறினார். அவரது ஆசிரியர் இம்மென்பொருட்களை கையாலுவது பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தமையே இதற்கு காரணம். ஆனால், இன்றுவரை நம்மை நம்பிக்கையின் சின்னமாக சித்தரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி நாம் நம்பிக்கையுடன் நடக்க உதவும் தொழில்னுட்பத்தை மேம்படுத்த நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். நிதி உதவி எள்ளாமில்லை. நமக்கான தொழில்னுட்பங்கல் பற்றி வளைப்பூக்களில் எழுதுவோம். வட இந்தியாவில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தொழில்னுட்பத்தை பற்றிய தகவல்கள் அதிகம் எழுதப்படுகிறது. நம் தேவைகளுக்கு அவற்றையே நாம் நாடுகிறோம்.
நம்மில் சிலர் இது போன்ற விடயங்களை எழுதிவருகிறார்கள். ஆனால், அவற்றை பிரபலப்படுத்துவதில்லை. திரட்டிகளில் சேர்த்து அவற்றை பிரபலப்படுத்தினால் அது அனைவருக்கும் தெரியவரும்.  google தேடல்கலில் முடிவுகளாக அதிகம் கிடைப்பது வளைப்பூக்களில் எழுதப்பட்ட செய்திகளே. நாம் வளைப்பூவில் எழுதினால் பார்வையுள்ளவர்களும் அவற்றைப்பற்றி படித்து தெரிந்துகொள்வார்கள். இனைய கல்விக்களகம் 100000 தமில் மின்னூல்களை வெளியிடப்போவதாக சொல்கிறது. அவற்றை நாம் வாசிக்கும் வகையில் வடிவமைக்கும்படி கோரிக்கைகள் வைக்க வேண்டும். ptf  தமிழ் கோப்புக்களை படிக்கு மாறு திரைவாசிப்பான்களை உறுவாக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை நாம் அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான வழிதான் இந்த google forme. இதில் உங்கள் கறுத்துக்களை பதிவு செய்தால் அவர்களிடமே அந்த கருத்து சென்று சேர்ந்துவிடும்.
அதற்கான சுட்டி கீழே!
http://www.paarvaiyatravan.com/2015/10/alosanai.html
நம்மிடமிருக்கும் தொழில்னுட்ப வள்ளுனர்கள் இனய கல்விக்களகத்தின் தலைவரை சந்திக்க முயர்ச்சிகள் செய்யலாம். இத்தகைய நல்ல விடையங்களை பார்வையற்றோருக்காக இயங்கும் நிறுவனங்களை விட மின்னஞ்சல் குழுக்கள் சிறப்பாக செய்யும் என்பது என் நம்பிக்கை.
 கூடியளவு விரைந்து இச்சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்தால் சிறப்பாய் இருக்கும். தொழில்னுட்ப வளர்ச்சியில் நமக்கான பங்கை செழுத்த நல்ல நேரம் உதித்திருக்கிறது. நாம் பார்வையுள்ளவர்களோடு இனைந்து இயங்குவதால் நம் இலக்குகளை விரைந்து எட்ட முடியும். நம்மை பற்றிய விழிப்புணர்வும். நமக்கான தொழில்னுட்பம் பற்றிய விழிப்புணர்வும் சமூகத்தில் ஏற்படும். அப்புரம் மரக்காமல் அந்த சுட்டியில் சென்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

தொழில்னுட்ப வளர்ச்சிக்கு வழிவகுப்போம் வாறுங்கள்!



நீச்சல்காரன் அவர்களுக்கு நன்றி

செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஏழு கழுத வயசு

என்னை தீண்டிச்சென்ற காற்றை
கண்டுபிடிக்க நினைத்தேன் முடியவில்லை.
கையில் பட்ட காலை கிரனத்தை
கைகொள்ள நினைத்தேன் இயலவில்லை.
முடியாதென தெரிந்தும்
முனுமுனுக்கிறது உள்ளம் குழந்தையாய் மாற.
வேப்ப மரத்தில் தூறிகை கட்டி ஆடிக்கொண்டிருந்தேன்.
வருவோர் போவோர் பார்ட்துச் சிரிக்க;
அம்மா வந்து திட்டினால்
7 கழுத வயசாச்சு இப்ப
ஊஞ்சல் ஆடுரதப்பாரு?

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

எப்படி சொல்வது?:

 
எப்படி சொல்வது?
 ஆனால் சொல்லனும் போலத்தோனுது!
இதுவரை
 http://www.paarvaiyaatravan.blogspot.com
என்ற வளைப்பூ  முகவரியில் இயங்கிக்கொண்டிருந்த நான்;
இனி
 http://www.paarvaiyatravan.com


திங்கள், 17 ஆகஸ்ட், 2015

முதலடி!

  கிரிக்கேட் என்பது இந்தியாவின் மதமாக மாறிவிட்டது.
பொது மக்கள் அதில் சிறப்பாக விளையாடுபவர்களை;
கடவுளுக்கு நிகராக அல்லது கடவுலாக மதிக்கின்றனர்.
கட்சிக்காரர்கள் யாரேனும் சண்டைக்கு வருவார்கள் என்று தெரிந்தோ என்னவோ
 கிரிக்கேட் கடவுள் என்று முன்னொட்டுடன் தங்கள் நட்சத்திரங்களை சொல்கின்றனர்.
நரேந்திரமோடி முதல் பேட்டை ரௌடிவரை எள்ளோரும் கிரிக்கேட் வீரர்களுக்கு வாழ்த்தை தெரிவிக்கின்றனர்.
இத்தகய பின்புளந்தான் இன்று பலருக்கும்
 கிரிக்கேட் வீரர்களாக விஸ்வரூபம் எடுக்கும் கனவுகளை மனத்தில் விதைக்கின்றன!
அதனை நிரைவேற்ற முதலடியை பார்வையற்ற இலையவர்கள் நேற்று எடுத்து வைத்துள்ளனர்.
பார்வையற்றோருக்கான கிரிக்கேட் போட்டிகள்
 கடலூரில் 16-8-2015 அன்று நடைபெற்றது.
இப்போட்டி வளர்ந்துவரும் அணிகளுக்கான போட்டியாக நடைபெற்றது.
இத்தொடர் தொடர்ந்து 8 ஆண்டுகள்
 வெற்றிகரமாக யுகம் டெர்ஸ்ட்டால் நடத்தப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் லயோலா கள்ளூரி, ஈரோடு, தேனி, சேலம், ஆகிய 4 அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதிப்போட்டியில் தேனியும், ஈரோடும் மோதின.
முதலில் மட்டை வீசிய தேனி 10 ஓவரில் 106 ஓட்டங்களை எடுத்தது.
இதில் சூரியப்பிரகாஷ் 50 ஓட்டங்களை குவித்தார்.
பதிலளித்த ஈரோடு 8ோவர்களில் வெற்றி இலக்கை எட்டியது;
அதனால் அவ்வணிக்கு வெற்றிக்கனி கிட்டியது!
இவ்வணியில் பூபதி 55 ஓட்டங்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்!
ஒரு நீண்ட பயனத்திற்கான முதலடியை எடுத்து வைத்த எம் இளசுகளுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர் பயிர்ச்சியும் விடாமுயர்ச்சியும்
உங்கள் இலக்கைவிரைந்து அடைய இட்டுச்செல்லும்!

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

எட்டா கனிகளும் கிட்டாத ருசிகளும்:


 தமிழ் நமக்கு சோருபோடும்;
குழம்பு ஊத்தும் என புழம்பிக்கொண்டிருக்கும் தமிழர்களே!
வயிற்றுப்பசியை தீற்கவும் அறிவு பசியை தீற்கவும் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
நான் இன்று வயிற்று பசிபற்றி பேச வரவில்லை.
அறிவு பசி பற்றி வினவ வந்திருக்கிறேன்.
பார்வையற்றோர் என்று 3 கோடி பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.
பள்ளிகலிலும், கள்ளூரிகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும், இன்னும் பல இடங்களிலும் நீங்கள் கண்டு கடந்து

செவ்வாய், 21 ஜூலை, 2015

யாரோ எழுதிய காகிதம்:

வெள்ளைத்தாலாய் நான் பிரந்தேன்;
எழுதியதும் அவர்கள்;
மதிப்பெண் இட்டதும் அவர்கள்;
தேர்ச்சி என மகிழ்ந்தனர்;
தேரவில்லை என இகழ்ந்தனர்;
எள்ளாம் அழிந்து;
வெள்ளைத்தாலாய் இரந்தேன்.
எள்ளோருமே யாராலோ;
எழுதப்பட்ட காகிதங்கள்.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

பணக்கார கனவு:

தகதகவெனும் தங்கத்தட்டு;
அன்னார்ந்து பார்க்கவைக்கும்
     அடுக்குமாடி கட்டிடங்கள்;
எனக்கே

ஞாயிறு, 5 ஜூலை, 2015

வீழ்த்த முடியாத விக்கேட்டால் வீழ்ந்த தமிழகம்!

கடந்த 21-11-2014 22-11-2014 அன்று தமிழகம், கேரல அணிகளுக்கு இடையே பார்வையற்றோருக்கான t20 கிரிக்கேட் தொடர் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் பாலக்காடு விக்டோரியா அரசு
கள்ளூரி மைதானத்தில் நடைபெற்றது. பார்வையற்றோர் கிரிக்கேட் வரலாற்றில் இத்தொடர் ஒரு மயில்கல். இப்போட்டியின் ஓட்டவிபரங்கள் உடனுக்குடன் crichq என்ற இணையம் வழியாக
தரப்பட்டது! இவர்களே தொடர் நாய

வெள்ளி, 3 ஜூலை, 2015

கோழிக்குழம்புக்கு பின்னால்:

 எத்தனையோ முறை கோழிக்குழம்பு சாப்பிட்டு இருக்கிறேன் அப்போதெல்லாம் எனது மனம் ஒரு வினாவைகூட எழுப்பியதில்லை?
 நாம் காட்டும் அன்புக்கு
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்புகாட்டும் கோழி, ஆடு, போன்றவற்றை விழாக்கள் என்ற போர்வையிலும், க

வியாழன், 2 ஜூலை, 2015

பார்வையற்றோருக்கான விளையாட்டு குரித்த தொடர் பாகம்3:

 முதல் நகர்த்துதலுக்கு பின்னால்:
பார்வை இல்லை என்று தெரிந்த உடன் குழந்தைகளை ஒரு மூலையில் அமர்த்தி விடுகின்றனர்.
அதற்கு சுதந்திரமாய் நகர்வதற்கு அனுமதிகள் மரைமுகமாக மருக்கப்படுகின்றன.
 எழுந்து நடந்தால் ஏதேனும் ஒன்றை தல்லி விட்டு
 உடைத்து விடுவமோ என்ற வினா அவர்களை கட்டுப்படுத்துகிறது.
 எதேனும் தல்லி விட்டாலோ சும்மா அ

புதன், 1 ஜூலை, 2015

ஏன் இங்கு ஈரப்பதம்:

அடிக்கும் மழையில்,
அரைமுழுதும் ஏனங்கள்;
ஓட்டை குடிசையில்;
ஒழுகும் நீரை பிடிக்க.
தண்ணீர் எதுவும்;
தரையில் சிந்தவில்லை;
இருந்தும் தரையில் ஈரப்பதம்;
ஏழைகளின் ஏக்க கண்ணீரால்!

ஞாயிறு, 28 ஜூன், 2015

பார்வையற்றோருக்கான விளையாட்டு பற்றிய தொடர் பாகம்-2


நாங்களும் விளையாடுவோம்!:
பலருக்கும் பார்வையற்றோர் விளையாடுகிறார்கள் என்று சொன்னால் வியக்கிறார்கள்;
 அல்லது நம்ப மருக்கிறார்கள்;
 இல்லா விட்டால் சிறு குழந்தைகள் விளையாடும் மைதானங்களின்
அதாவது சிரு இடத்தில் விலையாடுவார்களோ என்ற என்னம் தான் அவர்களிடையே ஏற்படுகிறது. நடக்கும் போது தடுமாரும் இவர்களால் தடம் மாராமல் ஓட முடியுமா? என்ற வினாவும்
எழும். இத்தகைய ஐயம் மாரவேண்டுமென்றால் பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகளை பார்த்தி

சனி, 27 ஜூன், 2015

பார்வையற்றொர் விளையாட்டு குறித்த தொடர் முதல் பாகம்:

பார்வையற்றோருக்கான விளையாட்டுக்கள்;
கண்ணாமூச்சி விளையாடி உள்ளீர்களா?
 உங்களுக்கு அது 5 நிமிட விளையாட்டு;
 இவர்களுக்கு நீண்டகால வாழ்க்கை.
 இருலில் தான் நட்சத்திரங்கள்ள் மின்னும் என்பதாலோ!
 நட்சத்திரங்களாய் மார முயர்ச்சிக்கும்
 கூட்டம் ஒன்று மெல்ல வெல்ல நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
 அவர்கள் விளையாட்டாய் நடை

வெள்ளி, 26 ஜூன், 2015

பார்வையற்றோருக்கான விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் தொடர்:

   பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகள்:
பார்வையற்றோருக்கான விளையாட்டு போட்டிகள் பற்றிய
 எனது பகிர்வு பற்றிய அறிமுகம்.
சிறுவயதிலிருந்து விளையாட்டு என்றாலே எனக்கு கொல்லை பிரியம்.
 படிப்பு எள்ளாம் அப்புரம் தான். யுவராஜாய், சச்சினாய், என்னை நினைத்துக்கொண்டு விளையாடுவேன்; எனது
லட்சியம் இந்திய கிரிக்கேட் அணியில் விளையாடுவதே. பார்வையற்றோருக்கான கிரிக்கேட்டில் மண்டல போட்டிகள் வரை தேர்வாகி எனது குரிக்கொளில் முக்காள் பங்கை எட்டிவிட்டேன்.
கால்பந்தாட்டத்திலும் தமிழகத்தை பிரதினிதித்துவப்படுத்தி விளையாடி உள்ளேன்;
சதுரங்கத்திலும் மானில போட்டிகளில் விளையாடியுள்ளேன்.
கைப்பந்தாட்டம், தடகலப்போட்டிகளிலும் தேசிய அளவு வரை சென்றுள்ளேன்.
 பார்வையற்றோருக்கான விளையாட்டு பற்றிய ஒரு ஆவணப்படுத்துதல் இது வரை இல்லை என்றே
கூருவேன். எனது அனுபவங்களை வைத்துக்கொண்டு பார்வையற்றோர் விளையாட்டு பற்றி எழுதப்போகிறேன். பல விதமான போட்டிகள் பார்வையற்றோருக்கும் உண்டு; அவற்றை பற்றிய என்னால்
முடிந்த அலசலை தர முயச்சிப்பேன்.