இங்கே துலாவு

வெள்ளி, 26 ஜூன், 2015

பார்வையற்றோருக்கான விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் தொடர்:

   பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகள்:
பார்வையற்றோருக்கான விளையாட்டு போட்டிகள் பற்றிய
 எனது பகிர்வு பற்றிய அறிமுகம்.
சிறுவயதிலிருந்து விளையாட்டு என்றாலே எனக்கு கொல்லை பிரியம்.
 படிப்பு எள்ளாம் அப்புரம் தான். யுவராஜாய், சச்சினாய், என்னை நினைத்துக்கொண்டு விளையாடுவேன்; எனது
லட்சியம் இந்திய கிரிக்கேட் அணியில் விளையாடுவதே. பார்வையற்றோருக்கான கிரிக்கேட்டில் மண்டல போட்டிகள் வரை தேர்வாகி எனது குரிக்கொளில் முக்காள் பங்கை எட்டிவிட்டேன்.
கால்பந்தாட்டத்திலும் தமிழகத்தை பிரதினிதித்துவப்படுத்தி விளையாடி உள்ளேன்;
சதுரங்கத்திலும் மானில போட்டிகளில் விளையாடியுள்ளேன்.
கைப்பந்தாட்டம், தடகலப்போட்டிகளிலும் தேசிய அளவு வரை சென்றுள்ளேன்.
 பார்வையற்றோருக்கான விளையாட்டு பற்றிய ஒரு ஆவணப்படுத்துதல் இது வரை இல்லை என்றே
கூருவேன். எனது அனுபவங்களை வைத்துக்கொண்டு பார்வையற்றோர் விளையாட்டு பற்றி எழுதப்போகிறேன். பல விதமான போட்டிகள் பார்வையற்றோருக்கும் உண்டு; அவற்றை பற்றிய என்னால்
முடிந்த அலசலை தர முயச்சிப்பேன்.

1 கருத்து:

  1. உங்களின் இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு