இங்கே துலாவு

வெள்ளி, 27 நவம்பர், 2020

அராஜக தேவதை

என் கையில் இருக்கும் போதெல்லாம் ரிமோட் அவகரிக்கப்படுகிறது;

பார்த்து பார்த்து பதுக்கி வைத்த இடங்களிலிருந்து

பணம் களவாடப்படுகிறது;

வைஃபை வழி என் மொபைல் டேட்டாக்கள் உறிஞ்சப்படுகின்றன;


என் வாட்ஸப் மெசேஜ்கள் உளவு பார்க்கப்படுகின்றன;

இத்தனை அராஜகங்களைச் செய்யும் தேவதையை

இப்புவித் தளத்தில்

தங்கை என்று அழைக்கிறேன்.