இங்கே துலாவு

சனி, 31 அக்டோபர், 2015

பார்வையற்றோருக்காக ஒரு வலைப்பூ

விங்ஞானத்தின் உதவியால் இஞ்ஞாலத்தை அலக்கத்துணிந்து விட்டோம்.

பார்வையற்றவர்களின் உலகை இனையத்தில் பதிவு செய்யும் முயர்ச்சி இது. விரல்மொழியர் என்ற வலைப்பூ பார்வையற்றோர் குறித்த அனைத்து தகவல்களையும் ஒருங்கே திரட்டி ஒரே இடத்தில் தரப்போகிறது. விரல்மொழியர் என்றால் என்ன பொருள்? பார்வையற்றவர்கள் தொடுதலின் வழியேதான் தங்கள் உலகை உணர்கின்றனர். பார்வையற்றோர் படிக்கும் முறை விரல்களை மையமாகக்கொண்டு; தொட்டு உணர்தலில் புரிந்துகொள்வதாய் அமைந்துள்ளது. எங்கள் விரல்களின் மூலம் பல விடயங்களை உலகிற்கு சொல்லுகிறோம். அவ்வாறு விரல்கள் மூலம் மொழிவதால் நாங்கள் விரல்மொழியர்களாகி விட்டோம்.

இன்று கணினி, கைபேசிவழியேவும், தொடர்பாடலை ஏற்படுத்துவதும் நம் விரல்கள் தாமே! இன்று அனைவருமே விரல்மொழியர்கள் ஆகிவிட்டோம்! இந்த அருமையான சொல்லாடலை முதலில் மொழிந்தவர்ிரா.பாலகனெசன். இவர், விருதுநகர் ஆண்கள்மேள்னிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். 2014 அக்டோபர் 3-ஆம் நாள் இதே பேரில் முகனூல் பக்கத்தை தொடங்கினார். பார்வையற்றோர் குறித்த செய்திகளை பத்திரிக்கை மற்றும் பார்வையற்றோர்கள் சேர்ந்து நடத்தும் மின்னஞ்சல் குழுமங்கள் வழி கிடைக்கும் செய்திகளையும் இப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார். யோகேஸ், இவர் தென்காசி அஞ்சலகத்தில் பணிபுரிகிறார், பொன்.குமரவேல், இவர் ஆசிரிய பட்ட படிப்பு பயின்று வருகிறார், பொன்.சக்திவேல், இவர் முதுகளை தமிழ் இலக்கியம் பயின்று வருகிறார், ஆகியோர் பாலகனேசன் அவர்களின் அன்புத்தொல்லையால் அவருடன் கைகோர்த்து நடத்த தொடங்கினர். பிரகு ஒரு வலைப்பூ தொடங்கலாம் என்ற என்னம் தோன்றியது. அதனை உடனே தொடங்கி விட்டனர். இப்பூவை பார்வையற்றோருக்கு பயன்படும் இனைய தலங்கள், பார்வையற்ற படைப்பாலிகளின் தலங்கள், பார்வையற்ற படைப்பாலிகளின் ஆக்கங்கள், பத்திரிக்கை செய்திகள் சேற்ந்து அலங்கரிக்கப்போகிறது.

இந்த வலைதலத்தை நடத்தும் அனைவருமே பார்வையற்றவர்கள்.

இப்பூவில் நீங்கள் கண்டு வியந்த பார்வையற்றவர் பற்றியும் எழுதலாம். நீங்கள் உங்கள் வலைப்பூவில் எழுதி சுட்டியை அனுப்பினாளும் செரி அல்லது மின்னஞ்சல் வழி எங்களுக்கு அனுப்பினாலும் பதிவிடுவோம். அதற்கான மின்னஞ்சல் முகவரி viralmozhiyar14@gmail.com. இதைப்பற்றி பாலகனேசன் அவர்கள் சொல்லும் போது, புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நாம் நிரையப்பேரை எட்ட முடியும். நம்மாள் அதை தான் செய்ய இயலாதே என வருத்தத்துடன் தன் கருத்தை எடுத்து வைத்தார். பார்வையற்றோருக்கான ஆவனப்படுத்தல் நம் தமிழ் மொழியில் கட்டாயம் வேண்டும். அதற்கான முயர்ச்சி தான் இந்த விரல்மொழியர் வளைப்பூ. இப்போதுதான் பூக்கத்தொடங்கி இருக்கிறது. உங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும் நாங்கள் அன்புடன் நாடி இருக்கிறோம். தொடங்குதல் எளிது ஆனால் தொடர்ந்து இதை கொண்டுபோக முயர்ச்சிப்போம். நீங்களும் அந்த வளைப்பூவை சென்று பாருங்கள்.

அதற்கான சுட்டி கீழேவிரல்மொழியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக