இங்கே துலாவு

வியாழன், 6 டிசம்பர், 2018

ஆர்வக்கோளாறு

இந்திய பார்வை யற்றோர் விளையாட்டு சங்கம் டெல்லியில் டிசம்பர் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களும் பார்வையற்றோருக்கான தடகளப்போட்டிகளை நடத்துகிறது.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

எதுக்கும் உதவாது

ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்ன; அப்படியே ஒரு ஃபிலாஸ்பேக்குக்குப்போவோம். எங்க ஊரிலே பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடு, கோழி என்பனவற்றுள்  ஏதேனும் ஒன்றையோ, அல்லது அனைத்தையுமோ வளர்த்துவந்தனர். வீட்டுக்கு ஒதுக்குப்புரமாக பெரிய குழி

திங்கள், 3 டிசம்பர், 2018

எங்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்

பார்வையற்ற குழந்தையை வளர்க்கும் பெற்றோருக்கு இருக்கிற ஒரே ஆசை நம்ம புள்ளக்கி எப்படியாவது கண்ணுதெரியனுங்கிறதுதான். அதனால் யார் எது சொன்னாலும் அதனை அவர்கள் செய்துபாக்கத்தொடங்கிவிடுவார்கள். பார்க்கிற எல்லோரும் மருத்துவரைப்போல எனது பெற்றோரிடம் பல ஆலோசனைகளை அள்ளித்தெலித்திருக்கிறார்கள். அதனைக்கேட்டு எனது

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

பேசப் போகிறேன்

டிசம்பர் 3 உலக முழுவதும் ஊனமுற்றோர் தினம். ஆனால்,  தமிழகத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் தினம்.
அதற்கு காரணம் டாக்டர் கலைஞர். அவர் எங்கள் பெயரை மட்டும் மாற்றவில்லை; பல பார்வைமாற்றுத்திறனாளிகளின் வாழ்வையே மாற்றினார்.
அதுகுறித்தும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் அடையாளமான விரல்மொழியர் மின்னிதழ் குறித்தும்,
பெரியார் திடல் மணியம்மை அரங்கில் நடைபெறவிருக்கும்; விரல்மொழியர் கலைஞர் சிறப்பிதழ் அச்சு மற்றும் பிரேயில் நூல் வெளியீட்டு விழாவில்,

பேசுவதற்காய், நான் எனது தம்பியுடன் சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இச்சிறப்பிதழை கனிமொழி அவர்கள் வெளியிட சுப வீரபாண்டியன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். எங்களுக்கான இப்பெரும் மேடையை ஏற்பாடு செய்து கொடுத்த திராவிடம் 2.o குழுவினருக்கு எங்கள் விரல் மொழியர் மின்னிதழ் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நேரம் இருக்கும் நண்பர்கள் விழாவிற்கு வாங்க.
அப்புறம் என்ன, ஒரு செல்ஃபிய கிளிக்கினால் சரியா போச்சு!

எல்லோரும் சொல்கிறார்கள்

புத்தகம் படிக்க ஆர்வமிருக்கும்,
வாசித்துக்காட்ட ஆளிருக்காது.

சனி, 1 டிசம்பர், 2018

ஹார்மோனின் சேட்டை

முகநூலில் நான் ஆண்களின் பதிவைப் படிக்கும்போது:
எழுத்து நடை நன்றாக இருக்கிறதா,
 சிறப்பாய் உத்தியைக் கையாண்டுள்ளாரா,
 பதிவர் இடதுசாரியா வலதுசாரியா;