இங்கே துலாவு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

எப்படி சொல்வது?:

 
எப்படி சொல்வது?
 ஆனால் சொல்லனும் போலத்தோனுது!
இதுவரை
 http://www.paarvaiyaatravan.blogspot.com
என்ற வளைப்பூ  முகவரியில் இயங்கிக்கொண்டிருந்த நான்;
இனி
 http://www.paarvaiyatravan.com


திங்கள், 17 ஆகஸ்ட், 2015

முதலடி!

  கிரிக்கேட் என்பது இந்தியாவின் மதமாக மாறிவிட்டது.
பொது மக்கள் அதில் சிறப்பாக விளையாடுபவர்களை;
கடவுளுக்கு நிகராக அல்லது கடவுலாக மதிக்கின்றனர்.
கட்சிக்காரர்கள் யாரேனும் சண்டைக்கு வருவார்கள் என்று தெரிந்தோ என்னவோ
 கிரிக்கேட் கடவுள் என்று முன்னொட்டுடன் தங்கள் நட்சத்திரங்களை சொல்கின்றனர்.
நரேந்திரமோடி முதல் பேட்டை ரௌடிவரை எள்ளோரும் கிரிக்கேட் வீரர்களுக்கு வாழ்த்தை தெரிவிக்கின்றனர்.
இத்தகய பின்புளந்தான் இன்று பலருக்கும்
 கிரிக்கேட் வீரர்களாக விஸ்வரூபம் எடுக்கும் கனவுகளை மனத்தில் விதைக்கின்றன!
அதனை நிரைவேற்ற முதலடியை பார்வையற்ற இலையவர்கள் நேற்று எடுத்து வைத்துள்ளனர்.
பார்வையற்றோருக்கான கிரிக்கேட் போட்டிகள்
 கடலூரில் 16-8-2015 அன்று நடைபெற்றது.
இப்போட்டி வளர்ந்துவரும் அணிகளுக்கான போட்டியாக நடைபெற்றது.
இத்தொடர் தொடர்ந்து 8 ஆண்டுகள்
 வெற்றிகரமாக யுகம் டெர்ஸ்ட்டால் நடத்தப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் லயோலா கள்ளூரி, ஈரோடு, தேனி, சேலம், ஆகிய 4 அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதிப்போட்டியில் தேனியும், ஈரோடும் மோதின.
முதலில் மட்டை வீசிய தேனி 10 ஓவரில் 106 ஓட்டங்களை எடுத்தது.
இதில் சூரியப்பிரகாஷ் 50 ஓட்டங்களை குவித்தார்.
பதிலளித்த ஈரோடு 8ோவர்களில் வெற்றி இலக்கை எட்டியது;
அதனால் அவ்வணிக்கு வெற்றிக்கனி கிட்டியது!
இவ்வணியில் பூபதி 55 ஓட்டங்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்!
ஒரு நீண்ட பயனத்திற்கான முதலடியை எடுத்து வைத்த எம் இளசுகளுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர் பயிர்ச்சியும் விடாமுயர்ச்சியும்
உங்கள் இலக்கைவிரைந்து அடைய இட்டுச்செல்லும்!

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

எட்டா கனிகளும் கிட்டாத ருசிகளும்:


 தமிழ் நமக்கு சோருபோடும்;
குழம்பு ஊத்தும் என புழம்பிக்கொண்டிருக்கும் தமிழர்களே!
வயிற்றுப்பசியை தீற்கவும் அறிவு பசியை தீற்கவும் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
நான் இன்று வயிற்று பசிபற்றி பேச வரவில்லை.
அறிவு பசி பற்றி வினவ வந்திருக்கிறேன்.
பார்வையற்றோர் என்று 3 கோடி பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.
பள்ளிகலிலும், கள்ளூரிகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும், இன்னும் பல இடங்களிலும் நீங்கள் கண்டு கடந்து