இங்கே துலாவு

திங்கள், 5 டிசம்பர், 2016

: எங்கள் விடுதியின் வரவேட்பு விழா பாடல்

கேட்டுக்கோ புது நியூசு;
சொல்லுரோம் நியூ ரூல்சு.
படிக்கிறோம் காலேஜு;
இருக்கனும் நாலேஜு.
5 ஏயமுக்கு எழும்பனும்;
10 பீயமுக்கு உரங்கனும்;
அதுக்கு எடயிலதான் வாழ்க்கய நாம ஓட்டனும்.

கணேசன் போட்ட பிள்ளையார் சுழி

வாழ்க்கையில் நடிப்பவன் மனிதன்; நடிப்பால் வாழ்பவன் கலைஞன். பாடல்கள் பாடுபடுத்திய தமிழ்த்திரையைத் தெளிவாய்ப் பேசவைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
1.10.1928-ல் விழுப்புரத்தில் சின்னய்யா, ராஜாமணி இணையருக்கு  மகனாக இவர் பிறந்தார்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பிரிவு உபச்சார விழா பாடல்:

 இனைந்திருந்த இனிமை நாட்கள் இனிமே வருமா?
பேண்டைவிட்டு  பெல்ட்டு பிரிந்தால் ஐயோ! தகுமா?
அரட்டையடித்த அழகிய நாட்கள் ஐயையோ! முடிகிறதே!

எங்கே செல்லும் இந்தப் பாதை

சாதனைகளை மட்டுமே சுமந்த விளையாட்டுச் சரித்திரத்தில் சர்ச்சை என்னும் கறை படியத் தொடங்கிவிட்டது.
எனது அணி வெல்லவேண்டும் என சாமிக்குக் காணிக்கைகள் செலுத்துவர். விளையாடுவதற்கு முன்பு அந்த சாமிக்குக்கூடத் தெரியாது

சனி, 3 டிசம்பர், 2016

விரைவான யுகம்

பல மைல் வேகம் செல்லும் பார ஊர்திகள்
விண்ணைக் கிழித்து விரைவாய்ப் பறக்கும் விமானங்கள்
இரும்புப் பாலத்தில் இமைப்பதற்குள் ஓடும்  ரயில்கள்
சனி கிரகத்தைச் சட்டென்று அடையும் விண்கலங்கள்
ஒளியை மிஞ்சும் ஏவுகணைகள்
நொடியில் செய்மதிகளை உயரத்தில் நிறுத்தும் உந்துகணைகள்
தண்ணீரிலும் இல்லை தாமதம்
காலாகாலத்தில் கரைசேர்கின்றன கப்பல்கள்
இது வெகுவிரைவில் எல்லாமும் நடக்கும் விஞ்ஞான யுகம்
இன்றும் வெகு தாமதமாய் தான் கிடைக்கின்றது
இங்கு நீதி நியாயம்.

OUT OF THE STATIUM:


  தேசங்களை ஒருங்கிணைக்கும்வண்ணம் உருவானதே உலகக்கிண்ணம். 2011-ன் முக்கிய நிகழ்வான கிரிக்கெட்  உலகக்கிண்ணத்தின் உச்சங்களை ஓராயிரம் பத்திரிக்கைகள் அலசி இருக்கும். சொச்சத்தை; நாங்கள் சொல்கிறோம்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

தேவதை நினைவுகள்:

 நீ தூரம் சென்ற பின்பும்;
துரத்துகிறது உனது நினைவுகள்.
சிதரிப்போன நான்;
சிரித்துப்பேச முயல்கின்றேன்!
இனிமையான நினைவுகளை மேளே தூவி;
அழ வைக்கிறது உனது நினைவு!
காயம்படாது இருக்க;
நினைக்கிறேன் உன்னை மரக்க.
உன்னை காட்டும் கண்ணாடி நானென்றாய்;
செள்ளும்போதே உடைத்துவிட்டு தான் சென்றாய்!
உனது சதியை பின்னர்தான் புரிந்து கொண்டேன்!
சிதரிய ஒவ்வொரு சில்லும்
உன்னை முழுமையாய் காட்டுதடி.
அதைப்பார்க்க நீ இல்லை;
நான் தான் பார்த்த படி தவிக்கிறேன்.
கண்ணீர் பசையால் சிதரிய செல்களை சேர்த்துவிடுவேன்,
அதில் மீண்டும் நீ தேவதையாய் தெரிவாய்!
கபுக்கென்றுவரும் கண்ணீரை இமைகளுக்குள்  மரைத்துவிட்டு
உனது திருமனத்தில்  வாழ்த்து சொல்லிவிட்டு;
இருளில் வீடுவந்து அழுவேன்;
ஏன்? எனக்கு கண்கள் இருக்கிறது என்ற வினாவிற்கு
உனது பிரிவு தான் விடை சொல்லியது.
என்ன செய்வது?
தேவதைகளிடம் வரங்கள் கேட்கலாம்;
ஆனால் அந்த தேவதையயே கேட்கலாமா?

லியோனியும் நானும்

தமிழகத்தில் பட்டிமன்றத்தை கிராமந்தோரும் கொண்டு சேர்த்ததில் லியோனிக்கு முக்கிய பங்குண்டு!
 தொலைக்காட்சிகள் எட்டிப்பார்க்க தொடங்கிய காலம், டேப்ரெக்காடர்களின் வருகை என தமிழகம் தொழில்னுட்ப யுகத்தில் காலடி வைக்கத்தொடங்கிய காலத்தில்,
ஒலினாடா வழியே எங்களை தனது பட்டிமன்றத்தால் கட்டிப்போட்டார் லியோனி.

வியாழன், 1 டிசம்பர், 2016

பார்வையற்றோருக்கான கிரிக்கேட் போட்டியின் விதிமுரைகள்

விழிச்சவால்  நபர்கள் எப்படி கிரிக்கேட் ஆடமுடியும்?
 என்ற வினா உங்களுக்குள் எழும்! கிரிக்கேட் ஆட்டத்தின் சில விதிமுரைகளை மாற்றி நீங்கள் விளையாடும் கிரிக்கேட்டின் தரத்துடனே விழிச்சவால் நபர்களும் விளையாடுகின்றனர்.
அப்போட்டியின் சட்டதிட்டங்கள் என்னன்ன? என்பதை எள்ளாம்  கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!

பார்வையற்றோருக்கான கிரிக்கேட் போட்டியின் வரளாறு

பார்வையற்றோர் பொம்மைகள் அல்ல! அவர்களும் விளையாடுவார்கள்.
 இன்று உலகமே விளையாடும் கிரிக்கேட்டை, பார்வையற்றோர்களும் 100 ஆண்டுகளாக ஆடிவருகின்றனர்.
அப்போட்டியின் வரளாற்றை சொல்லும் பதிவு இது! நானே எனது குரளில் பதிந்து இங்கு உங்களுக்காகத்தருகிறேன்.

திங்கள், 31 அக்டோபர், 2016

நான் இன்று நடுனிலையாலனாகிவிட்டேன்!

முரசொலி அரக்கட்டலை நடத்திய பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற பரிசு ரூ. 1500-உம் சான்றிதலும்  இன்று எனது கைகளை வந்தடைந்தது.
அம்மாவின் 66-ஆவது பிரந்தநாளின் போது நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் நான் வெற்றி பெற்றதால் ரூ. 6666-உம் சான்றிதலும் கேடயமும் கொடுத்தார்கள்! அது என்னிடம் பத்தரமா இருக்கு.
இப்போ எங்க அம்மாவும் அப்பாவும் மிகுந்த சந்தோசத்துல இருக்குராங்க! எங்க, என ஒரு வார்த்தய சேர்த்துருக்கேன் கவனமா படிங்க!
நாளைக்கே இந்த 2 கச்சியில;
 ஏதேனும் ஒரு கட்சியைச்சேர்ந்த பெரும்புள்ளி எங்க வீட்டுக்கு வந்தாருன்னா.
 எங்க அம்மா பீரோல சத்தமா தொரக்கும். அப்போ எங்க அப்பா அந்த சமிக்கைய புரிஞ்சுக்கிட்டு நம்ம பையன்னு சொல்லி நம்ம பெருமயள்ளாம் சொல்லத்தொடங்குவாரு; சரியான நேரத்துல எங்க அம்மா என்றியாகி சான்றிதலை அந்த பெரும்புள்ளிக்கிட்ட கொடுப்பாங்க! அப்போ எங்க அப்பா, நம்ம கட்சி நடத்தின போட்டியில பையன் பரிசெள்ளாம் வாங்கிருக்கான் எனச்சொன்னவுடன்; வந்தவர் பெரிதும் மகிழ்வார்.
இன்னொரு நால் அதில் இன்னொரு கச்சியச்சேர்ந்த பெரும்புள்ளி வருவார். மீண்டும் அதே நாடகம் நடத்தப்படும்.
நம்ம கச்சி நடத்துன போட்டில நம்ம பையன் பரிசெள்ளாம் வாங்கிருக்கான் எனச்சொன்னதும்; வந்தவரும் பூரித்துப்போவார்!
 இதை எள்ளாம் முன்கூட்டியே அறிந்ததால்தானோ ஜெயலலிதாவும், உதயனிதி ஸ்டாலினும் சிரித்தபடி இருக்கிறார்கள் எங்கள் பீரோலில்!
நீ எந்த கச்சினெள்ளாம் கேட்கக்கூடாது. என்னோட பதில் எப்படி வருமுன்னு தெரியுமுள்ள.
 ஏன்னா? புளிக்கு பிரந்தது பூனையா இருக்காதுள்ள.
 கீழே உள்ள வீடியொவில்  நான் பேச்சுப்போட்டியில் பேசிய உரை இருக்கிறது.
அதில் அக்மார் அதிமுக காரன் போல ஒரு அதிரடி இன்னிங்ஸ் ஆடிருக்கேன். கேட்டு உயீங்கள்.புதன், 26 அக்டோபர், 2016

பார்வையற்றோரின் பேருந்துப்பயனம்

நான் அமேரிக்கன் கள்ளூரியில் படித்துக்கொண்டிருந்த போது;
 நாங்கள் பெரியார்னிலையம் சென்று எங்கள் விடுதிக்கு செள்ளும் அழகர்கோவில் பேருந்தில் ஏறுவோம்.
 எங்களில் கொஞ்சம் பார்வை தெரிந்தவன் முத்துத்துரை, பேருந்தை பார்த்துச்சொள்ளும் பொருப்பை அவனே எடுத்துக்கொண்டான்.
 நல்ல படியா அவன் சொன்ன பேருந்தில் ஏரி எங்கள் விடுதியை 2 மாத காலமாய் சரியாக வந்தடைந்தோம். ஒருநாள்
அவன் ஏற்றிவிட்ட பேருந்து அழகர்கோவில் மார்க்கமாய் செள்ளாமால் அது வேறுமார்க்கமாய் செள்ளத்தொடங்கியது.
 விசாரித்ததில் அது அளங்கானல்லூர் செள்ளும்பேருந்து என்பது தெரியவர அடுத்த நிருத்தத்தில் இறங்கி பின் சரியான பேருந்தைப்பிடித்து ஏறிச்சென்றோம்.
 அவனே வாண்டடா வந்து  சாரிப்பா நான் ஒழுங்கா பாக்கல என சரனடைந்தான்.
அடுத்த நாள் மீண்டும் கடமயைச்செய்யப்  புரப்பட்டான்; ஒரு பேருந்தின் முன் உத்துப்பாக்கத்தொடங்கினான்.
பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் சாப்பிடச்சென்றுவிட்டார்.
நீண்ட நேரமாய் போடைப்பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஒருவழியா முதல் எழுத்து அ-வை கண்டுபிடித்துவிட்டான்! அடுத்த எழுத்து என்ன என்பதை கண்டுபிடிக்க கடும் முயர்ச்சி எடுத்துக்கொண்டிருந்தான்.
 சாப்பிட்டுவிட்டு வந்த ஓட்டுனர்
 தம்பி கொஞ்சம் தல்லிக்கப்பா வண்டி எடுக்கனும் என்றார்.
 அவரிடமே  இது அழகர்கோவில் போகுமாண்ணே எனக்கேட்டான். அவரும் ஆமாம் என்றார். கூட்டத்தில் இருந்த வெங்களமூர்த்தி இன்னைக்கு என்ன அழகர்கோவில் பஸ்சயேகானம் எனச்சொல்லிக்கொண்டிருந்தான். பின்னர் நாங்கள் அனைவரும் பேருந்தில் ஏரினோம்.
அப்போது தான் முத்துத்துரை என்னிடம் ஒரு ரகசியம் சொன்னான். அ-வப்பார்த்ததுமே அத அழகர்கோவில் பஸ்சுன்னு அறிவிச்சுடுவேன். அளங்கானல்லூர் பஸ்சும் இதே பிலாட்பாமுல நிக்குமுன்னு எனக்குத்தெரியாது என்றான்.
இத யாருக்கிட்டையும் சொல்லக்கூடாதுன்னும் சொன்னான்.
கடைசிவர அவனுக்கு கொடுத்த வாக்க க்காப்பாத்துவேன்.
இப்படி எங்கள் பேருந்து பயனங்களில் பல சுவாரசியங்கள் துன்பத்தை மரந்து சிரிக்கவைக்கும்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

கெமிஸ்றிக்காக!:

6 வயசு இருக்கும் போது நான் ஒரு பொண்ணக் காதலிச்சேன்! ஐயையோ! இல்ல! இல்ல!
கொஞ்சம் வாழ்க்கையை பார்வடு பன்னனும்.
அப்படியே கொண்டாந்து 6-ஆம் வகுப்புல நிறுத்துவோம்.
நான் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது, ஒரு  பொண்ண காதலிச்சேன்!
நீங்க யாரும்  அப்பவே ஒனக்கு காதல் வந்துருச்சான்னு கேட்கக்கூடாது? காதலுக்கு வெவஸ்த்தயே கிடையாது. அது எதயுமே பாக்குரதில்ல;
 அதுபாட்டுக்கு காலிங்பெள் அடிக்காம கதவத்தொரந்துக்கிட்டு மனசுக்குள்ள வந்திடும்!
சொன்னால்தான், சொன்னால்தான், காதலா? இந்த பாட்டுல காதல் எதையெள்ளாம் பாக்குரதில்லன்னு t.r. பட்டியல் போட்டிருப்பாரு, அத கேட்டுத்தெரிஞ்சுக்கங்க.
அதனால அது 6-ஆம் வகுப்புன்னும் பாக்காம வந்துருச்சு! இப்பெள்ளாம், தான், காதலிக்கிறவளுக்கு கனவனோ, அவருக்கு பொண்டாட்டி புள்ளங்க இருக்குதுங்கிறதயோ கூட பாக்குறதில்ல.
செரி விடுங்க, சன்முகத்துக்கு கருத்துச்சொல்ல நெரயா பேரு இருக்காங்க!
செரி என்னோட மேட்டருக்கு வாரேன். மொதலில் காதலுன்னுதானே சொன்ன ?இப்போ மேட்டருன்னு சொல்லுர? ஒங்க மையிண்டுவாய்ஸ் எனக்கு கேட்குது.
இது ஒரு குடும்பப்பாங்கான பதிவு என்பதை சொல்லிக்கொண்டு; தொடர்கிறேன்.
எங்க விடுதி  சாப்பாட சாப்புட ஒரு தனி முரை இருக்கு.
தப்பித்தவரி ஏனும் சாப்பாட்ட மோந்துபாத்துடக்கூடாது.
அப்புரம் நம்மால சாப்புடவே முடியாது. அங்கே வைக்கிற முட்டையும் கடுமையா வீசும். ஆனா முட்ட சாப்புடாதவங்களுக்கு பட்டானி தருவாங்க; அது செம்ம ருசியா இருக்கும்!
ஒரு நாள் வகுப்பில் பேசிக்கொண்டிருந்த போது சாப்பாடு பற்றிய பேச்செழுந்தது.
அப்போது அந்த புள்ளக்கிட்ட நீ முட்டயா பட்டானியா என கேட்டேன். அது பட்டானி என சொன்னதும்; பட்டானி சாப்பிடுபவர்கள் பெஞ்சிக்கு மாறினேன்.
 எனக்கும் முட்டயே பிடிக்காது என அவளிடம் பெருமையாய் சொன்னேன். முதலில் 5 பேராக இருந்த பட்டானி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சங்கொஞ்சமாய் கூடத்தொடங்கியது.
அதில் காதலிக்காக மாறியவர்களும் இருக்கலாம்!
முதலில்  தட்டுக்கு 2 கரண்டி பட்டானி வைத்தார்கள். பின்னர் அது ஒரு கரண்டியாக மாரத்தொடங்கியது.
நபர்களின் எண்ணிக்கை கூடிய போதும் கூட்டுக்காக ஊரவைக்கப்படும் பட்டானியின் அளவு கூடவில்லை.
இன்னும் நபர்கள் கூடவே அதில் தண்ணீரை ஊற்றி குழம்புபோல வைத்து கொடுத்தார்கள். வெங்காயங்களுக்கு நடுவே 2 3 பட்டானிகள் தான் கிடக்கும்.
 இப்போது பட்டானி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டியது. நிற்வாகம் இப்போது விழித்துக்கொண்டது! அவர்கள் பட்டானியின் அளவை கூட்ட தயாராய் இல்லை.
எங்கோ தவறு நடக்கிறது என்பதை ஆராயத்தொடங்கினர்.
விருந்துச்சாப்பாடு என்றாலே எங்களுக்கு மகிழ்ச்சிதான்! அதிலும் கரி விருந்து என்றால் சொல்லவா வேண்டும்? எங்கள் விடுதி சமயல்காரர்களுக்கு ஒரு விருதுகொடுக்கலாம். அவர்களால் மட்டரகமாக சமைக்கவும் முடியும்;
விருந்துச்சாப்பாடென்றால் அசத்தலாகவும் சமைக்கத்தெரியும்!
பட்டானி சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடுபவர்கள்! ஆனால் நாங்கள் விருந்து அன்று மட்டும் இடம்மாறி அமர்ந்து கரி, முட்டை, என வெளுத்துக்கட்டிவிடுவோம்.
அப்படிப்பட்ட விருந்து சமயத்தில் வாடன் ரைய்டைத்தொடங்கினார். பட்டானி வாங்கும் கோஸ்டி இன்று இடம்மாறி இருப்பதை கண்டுபிடித்தார்! அவர்களுக்கு அன்று கரி மறுக்கப்பட்டது.
அதில் நான் சிக்கவில்லை! நான் அப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருந்ததால் வாடனுக்கு நான் நினைவில் இல்லை.
அடுத்த நாள் சைவம் சாப்பிடுபவர்களின் பேர் எழுதப்பட்டது.
ஒவ்வொருவராய் கேட்டு வந்தார்கள். எனது முரை வந்தது.
சைவமா? அசைவமா? எனக்கேட்டார் வாடன்,
எனது ஆளு சைவமாச்சே! என்ன செய்யலாம் என ஒரு வினா மனதில் எழும்ப; அது மூலையை சென்றடையும் முன்னரே வாய் அசைவம் எனச்சொல்லிவிட்டது. கரிக்கொழம்பா, காதலியா என வரும்போது கரிக்கொழம்பு வென்றுவிட்டது!
வகுப்பில் நுழைந்ததும் மனதில் சிறு போராட்டம் எழுந்தது. அவளிடம் கரி சாப்பிட்டாதானே உடம்பு சும்மா கிண்ணுன்னு வரும் என திரியை கொழுத்திப்போட்டேன்!
அப்படி இல்ல சக்தி. நிலத்துலேயே பெரிய விளங்கு எதுவென கேட்டால்.
நான் யானை என்றேன். அது என்ன கரியா சாப்பிடுது? என்றால். நான் வியந்துபோனேன்! புடிச்சாலும்புடிச்சேன் புத்திசாலி பொன்னத்தான் புடுச்சுருக்கேன் என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்!
அடுத்து அவள் பேசத்தொடங்கினால்! சரிவிகித உணவு, வைட்டமீன் என நீண்ட உரை ஆற்றி முடிச்சா.
எதோ பேச்சுப்போட்டிக்கு மனப்பாடம்பன்னுனதுபோல. வணக்கத்தையும் நன்றியையும் கட்பன்னிட்டு அப்படியே ஒப்பிச்சு முடிச்சா!
யாரு சொல்லிக்கொடுத்ததுன்னு தெரியல. பாய்ண்டு அத்தனையுமே செம்ம அருவையா இருந்துச்சு; அந்த புல்ல கொரலுல கேட்டதால என்னவோ எனக்கு எள்ளாம் அருமையா இருந்துச்சு!
அந்த பேச்சக்கேட்டதுமே மனசு, கரியா? காதலியா? என சிறு தடுமாற்றம் கண்டது. ஆனாள் அடுத்த நொடியே கரிதான் முக்கியம் என மனசு பிக்ஸ்சாயிடுச்சு!
அந்த ஞாயிற்றுக்கிழம வாட்டர்கேன் கிரிக்கேட்டுல சதமடிச்சுட்டு; ஒடம்புக்கு கொஞ்சம் இதமா இருக்குமேன்னு; தண்ணிங்குடிக்க பைப்பு  பக்கம் போனேன். அப்போது பக்கத்தில் இருந்த ஸ்டோன்பெஞ்சியிலிருந்து ஒரு குரல்.
ஏம்மா இந்த 2 கரித்துண்ட மட்டும் கொண்டுக்கிட்டு என்ன பாக்கவந்தியாக்கும்? அதற்கு அவுங்க அம்மா: அர டிப்பன் பாக்சு கரி இருக்கேடி.
இது கரியா அம்புட்டும் எளும்பு. நாட்டுக்கோழி கரி அப்படி தாண்டி இருக்கும்.
எந்த கோழிய அடுச்ச? மரத்துலே அடையுமே அதத்தான? ஆமா.
பக்கத்துவீட்டுக்காரன் அதுமேளே ஒரு கண்ணா இருந்தான்! நல்லவேல நீ அடிச்சுட்ட.
அடுத்த வாரம் ஆட்டுக்கரி கொண்டுவா!
நீ சாப்புட்டியாம்மா? மொத பஸ்ச புடிக்கத்துக்காண்டி கஞ்சிகுடிக்காம உடியாந்தேன். எனக்கும் சேத்துதான் கட்டிக்கிட்டு வந்தேன்.
இப்போ சாப்பாடு இருக்குள்ள? இல்லடி, செரி நான் கடையில சாப்புட்டுக்கிறேன்.
சாரிமா, இன்னைக்கி கொழம்பு நல்லா இருந்துச்சா அதுனால நெரயா சாப்புட்டேன்!
இப்படி என்னவளின் பேச்சைக்கேட்டதும் கோபம் தலைக்கேரியது.
சுவாலசியைவிட பாட்னிதான் சிறந்ததுன்னு எனக்கு பாடம் எடுத்துட்டு; இப்படி முழுக்கோழிய முழுசா முழுங்குரியே என வகுப்புக்கு வந்ததும் கேட்கனும்முன்னு நெனச்சேன்.
உடனே அந்த கோபம் மாறியது. அந்த புள்ளைக்காக வகுப்புள  பல்முனைப்போட்டி நடந்துக்கிட்டு இருக்கு;
இப்போதான் எனக்கும் அந்த புள்ளைக்கும் கெமிஸ்றி ஒர்க்கவுட்டாக தொடங்கிருக்கு; அத நாமே ஏன் கெடுத்துக்கனும் என நினைத்து,
அந்த கெமிஸ்றிக்காக எனது சூடு, சொரன, என எள்ளாத்தையும்; காத்துள விட்டுவிட்டேன்!