இங்கே துலாவு

வெள்ளி, 31 மே, 2019

தமிழகத்தில் பார்வையற்றோருக்கான விளையாட்டின் போக்கும் எதிர்காலமும்:

பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடே விளையாட்டு. அது விளையாடுபவருக்கு மட்டுமல்லாது காண்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத்தரும் இயல்புடையது. அதனால்தான் தொல்காப்பியர்
         “செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
         அல்லல் நீத்த உவகை நான்கே“[1]
 என உவகை பிறக்கும் நிலைக்கலன்களுள் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிடுகிறார். இன்று விளையாட்டு தொழிலாக வளர்ச்சியடைந்திருக்கிறது. விளையாட்டிற்கு உடற்தகுதியும், பார்வைத்திறனும் முதன்மையானவை. எனவே, பார்வையற்றவர்கள் விளையாடமாட்டார்கள் என்ற முடிவிற்குப் பலரும் வந்துவிடுகின்றனர்.

வியாழன், 16 மே, 2019

சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாள்

இன்று சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாள்.
உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். எனவே, கணினி திறன்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை, அவர்களும் கையாளும் வகையில் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே மாதத்தின் மூன்றாவது வியாழனை சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வருகின்றனர்.
இத்தினத்தில் மென்பொருள் தயாரிப்பாளர்கள், மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் இடையே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், சில பன்னாட்டு கணிநி நிறுவனங்கள் இந்நாளில் 15 நிமிடங்களுக்கு மவுசை பயன்படுத்தாமல் கணினியில் அனைத்து வேலைகளையும் செய்ய பனிக்கின்றன.
இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முதல்முறையாக இந்நாள் பற்றி தமிழ் இணையவெளியில் பதிவு செய்தது நான் தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் வரலாறு முக்கியம். அணுகல்தன்மை குறித்து ஒரு நாள் விரிவாக எழுதுகிறேன்.
#சர்வதேச_அணுகல்தன்மை_விழிப்புணர்வு_நாள்
#Global_Accessibility_Awareness_Day

ஞாயிறு, 12 மே, 2019

சொல்லிவிடாதே


பனிக்கட்டியாய்  உறைந்தேன்
உன்  பார்வை படும்போது

இறகுகள்  வருடும்  சுகம்
உன்  நிழல்கள்  படும்போது

வெள்ளி, 10 மே, 2019

அந்தோ பரிதாபம்


 அணிகளின் அறிவிப்பு; சுடரேந்திய சுற்றுப்பயணம். வீரர்களின் பதக்கம் வெல்லும் லட்சியக் கனவு பளிக்கப்போகிறது. ஆம்; ஒலிம்பிக்ஸ் தொடங்கப்போகிறது.

வியாழன், 9 மே, 2019

IPL கலாட்டா


   கபில் தேவும் Z குழுமத் தலைவரும் இணைந்து ICL-யை வெற்றிகரமாக நடத்திக் காட்ட, பொறாமையால் இந்திய கிரிக்கெட் சபை இந்த அமைப்புக்கு தடை விதிக்க, ICC உட்பட அனைத்து கிரிக்கெட் சபைகளும் இதற்கு தலையசைக்க IPL-

புதன், 8 மே, 2019

உள்ளே இருக்கிறேன்


அகழிகள் சுற்றி அமைத்திருந்தேன் அதில்
ஆயிரம் முதலைகள் விட்டிருந்தேன்
அதையும் தாண்டி வருவாயென்று
மின்சார வேலியும் அமைத்திருந்தேன்

செவ்வாய், 7 மே, 2019

எழுமா இமயம்?


   பிரதேசமெங்கும் பிரார்த்தனைகள்; அணித்தலைவர்களின் ஆறுதல்கள். எந்த நாடு ஆடினாலும் ஏந்தியிருந்தனர் பதாகைகளை, இவர் நலம் பெறவேண்டுமென்று. அமெரிக்காவிலிருந்து இவர் திரும்பிய பிறகுதான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

திங்கள், 6 மே, 2019

தீர்க்கமான தீர்மானம்


உடைகள்  ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டேன்
குடிப்பதற்கு தண்ணீர்
நெற்றியிலே திருநீர்

வழிச்செலவுக்குப்  பணம் கொடுத்தார்கள்
வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்
இதுதான் எங்கள் முதல் பயணம்

ஞாயிறு, 5 மே, 2019

என்ன தான் நடந்துச்சு 2011-ல்


  2011-ல் நடந்த விளையாட்டு நிகழ்வுகளைத் தொகுத்துத் தருகிறது  இம்மாத ஆட்டக்களம்.
 --2011-ஐ அறிமுக வீரர்களின் ஆண்டு என்று கூறலாம். காயங்களால் வீரர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் நுழைந்து அசத்திவிட்டனர் அறிமுகவீரர்கள்.

சனி, 4 மே, 2019

நல்ல திட்டம்


சூரியன் உதித்தது,
இலையும் துளிர்த்தது,
எங்க துயரம் மாறல!

மாத்தி மாத்திக் குத்தஞ்சொல்லி
அவங்க சண்டையும் தீரல.

சனி, 27 ஏப்ரல், 2019

பாடாய் படுத்துது

காரி துப்பினாலும்;
கடுங்கோபம் கொண்டு திட்டினாலும்;
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும்;

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

கண் தெரியாத இசைஞன்

இன்று சர்வதேச புத்தக தினம். அதனால் இன்று ஏதேனும் ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்து விடுவது என முடிவு செய்தேன். எனவே நீண்டநாளாக படிக்க நினைத்த ரசிய நாவலான கண் தெரியாத இசைஞன் என்ற நாவலை படிக்கத் தொடங்கினேன். இந்நாவலின் கதை கடந்த கால எனது வாழ்க்கை

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆனால், நீங்கள்?

இந்த பொதுத்தேர்தலிலும்;
எந்தப் பெரிய கட்சியும்;
மாற்றுத்திறனாளிகளுக்கு சீட் கொடுக்கவில்லை!

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

வியாழன், 11 ஏப்ரல், 2019

நான்காவது தேசிய வாகையர் பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டப் போட்டி

பார்வையற்றோருக்கான தேசிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டியை இந்திய பார்வையற்றோர் கால்பந்தாட்ட சம்மேளனம் பெங்களூரில் 12-4-2019 தொடங்கி 15-4-2019 வரை நடத்துகிறது. இந்தியா முழுமையிலிருந்து 16 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. அதில் கலந்து கொள்வதற்காக, எங்க ஊரில் இருந்து பெங்களூர் நோக்கி பயணத்தை தொடங்கியாயிற்று. இத்தருணத்தில் ஒரு முன் கதை சுருக்கத்தை பார்ப்போம். 2010 டெல்லிக்கு தமிழக கால்பந்தாட்ட அணி விளையாட செல்கிறது. அப்போது அவர்களுக்கு பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டம் குறித்து எதுவும் தெரியாது. அங்கு விளையாடும் சிறந்த அணிகளின் ஆட்டத்தை உற்றுநோக்கி கால்பந்தாட்ட நுணுக்கத்தை கற்றுக்கொண்டு தமிழகம் திரும்புகிறார்கள். 2012 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. போட்டிகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கும் மேலாக கடும் பயிற்சியுடன் அணி தயாராகிறது. அதிகாலை 3 மணி தொடங்கி காலை ஆறு முப்பது வரையிலும், மாலை 3 மணி தொடங்கி ஏழு மணி வரையிலும் நாள்தோறும் மாணவர்களுக்கு சரவண ராமன் சார் பயிற்சி கொடுத்தார். அந்த ஆண்டு கால்பந்தாட்ட தோடு, கபடி, பளு தூக்குதல் போன்ற போட்டிகளையும் நடத்தினர். 12 அணிகள் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டன. அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர் ஒவ்வொரு குழுவிலும் 6 அணிகள் இடம் பெற்றிருந்தன. தமிழக அணி இடம்பெற்றிருந்த பிரிவில் தான் நடப்புச் சாம்பியன் களும் இடம்பிடித்திருந்தனர். அக்குழுவில் அனைவரையும் வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு தெரிவானோம். துரதிஷ்டவசமாக அரை இறுதியில் தோல்வியைத் தழுவிநோம். ஆனால் கபடியிலும் பளுதூக்குதலில் உம் முதல் இடத்தை பிடித்தோம். இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் சரவண ராமன் சார். அத்தொடரில் தான் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சியாளர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன் . இன்னொரு சமயம் பார்வையற்றவர்களுக்கு விளையாட்டு பயிற்சியாளர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பது குறித்து முகநூலில் எழுதுகிறேன் . அதன் பிறகு நாங்கள் படித்த இடத்தில் விளையாட்டிற்கு சரியான ஒத்துழைப்பு இல்லை. அதனால் மேற்கொண்டு அணியாக செயல்பட முடியவில்லை. 2017 வரை தேசிய போட்டிகளில் தமிழக கால்பந்தாட்ட அணி எதிலும் கலந்து கொள்ளவில்லை. 2018 ஆம் ஆண்டு சரவணராமன் சாரின் கீழ் ஒரு குடையாக ஒன்றிணைந்து, தமிழக பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் tavsa தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கால்பந்தாட்ட அணி உயிர்பெற தொடங்கியிருக்கிறது. முன்பைவிட பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டம் வேகமடைய தொடங்கியிருக்கிறது. இளையவர்கள் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். கடந்த பெப்ரவரி மாதம் தேசிய அளவிலான பயிற்சி முகாம் கொச்சியில் நடைபெற்றது. அதற்கு சென்றிருந்த தமிழக இளம் வீரர் பாண்டியராஜநின் திறமையைக் கண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் இந்திய பயிற்சியாளர்களும் வெகுவாக பாராட்டினர். இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்திய அணியில் விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் உற்சாகமான இது போன்ற சொற்களை நெஞ்சில் சுமந்து நம்பிக்கையோடு போட்டியை எதிர்கொள்ள செல்கிறோம். கட்டாயம் களத்தில் எதிரணிகளுக்கு நாங்கள் சவால் அளிப்போம். குறுகிய காலத்திற்குள் நேஷனல் சாம்பியன்களாக எழுந்து நிற்போம்.

வியாழன், 31 ஜனவரி, 2019

சிறுவாட்டுக் காசு

பார்வையற்றோருக்கான நாகேஷ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில், இந்தியாவின் நம்பரொன் அணியான ஆந்திராவிற்கும், ஐந்தாம் இடத்தை பெற்றிருக்கும் தமிழக அணிக்குமிடையிலான காலிறுதிப் போட்டி, பிப்ரவரி 2 சனிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக விசாகப்பட்டினத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியாச்சு.
இந்த நேரத்துல ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுங்க.
எனது ஒன்பதாம் வகுப்பில் இருந்து மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினேன். போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்காக வீட்டில் அனுமதி கேட்பேன். இங்கே அனுமதி என்பது, போட்டிகளுக்குச்  செல்வதற்காக பணம் கேட்பதையே குறிக்கும்.  உடனடியாக அப்பா: கையில சுத்தமா காசு இல்ல. அடுத்தவாட்டி போய்க்கலாம், என்பார். சிறிது நேரம் கழித்து அம்மா பக்கத்து வீட்டுக்கு செந்று, கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து: "இந்தாடா  எரநூரு ரூபா. பாமாகிட்ட கெஞ்சி கூத்தாடி கடன் வாங்கிட்டு வந்தே"  எனச் சொல்லி அப்பா முன்னாடி என் கையில் கொடுப்பாங்க. ஆனா எனக்கு நல்லாவே தெரியும், அது அப்பாவுக்கு தெரியாம சேர்த்து வச்ச சிறுவாட்டு காசுன்னு. இதே உத்தியை தான் எங்கள் ஊரில் பல பெண்களும் கடைபிடித்தனர்.
"இங்கெரெடி மாரியம்மா! ஏ மைய பள்ளிக்கூடத்துல மருதக்கிடூருக்கு கூட்டிப் போராகலாம். நூரூவா வேணுமுன்னு கேட்டு, மொகத்த  தூக்கி வச்சுக்கிட்டு ஒக்காந்திருந்தாந். செரின்னு நூரூவா கொடுத்துவிட்டேன். அந்த ஆளுகிட்ட, ஒனக்கிட்ட தான் கடவாங்குனதா சொல்லிருக்கேன். வந்து கேட்டா ஆமான்னு சொல்லிரு."
இப்படி சிறுவாட்டு காசு  வழியாகத்தான்,  அம்மாக்கள் தங்கள் மகன்களின் கனவுகளையும்,  ஆசைகளையும் நிறைவேற்றினர்.

திங்கள், 21 ஜனவரி, 2019

என்னை எனக்கே தெரியாது


மதுரையில் படிக்கும்வரை எந்நேரமும் மைதானத்தில்தான் கிடப்பேன். மதுரையை விட்டு வந்த பிறகு, tournament இல் மட்டும் தான் மைதானங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்முறை ஒரு வாரம் தொடர்ச்சியாக மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

என்னசெய்வதாய் உத்தேசம்

நம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில்
எப்படி இருக்கீங்க அண்ணா?
என வாஞ்சையுடன் விசாரித்தாய்...
உன் குழந்தை
சாக்லேட் கேட்டு அடம்பிடித்து
அழுது கொண்டிருந்தது...
நீ தங்கையாக மாறிக்கொண்டு;
என்னை அண்ணனாக மாற்றிவிட்டாய்...
நலம் விசாரிப்புகளில்
துருத்திக்கொண்டு தெரியும்
என்மீதான;
மாறாத உன் காதலை
என்ன செய்வதாய் உத்தேசம்???