இங்கே துலாவு

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

கெமிஸ்றிக்காக!:

6 வயசு இருக்கும் போது நான் ஒரு பொண்ணக் காதலிச்சேன்! ஐயையோ! இல்ல! இல்ல!
கொஞ்சம் வாழ்க்கையை பார்வடு பன்னனும்.
அப்படியே கொண்டாந்து 6-ஆம் வகுப்புல நிறுத்துவோம்.
நான் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது, ஒரு  பொண்ண காதலிச்சேன்!
நீங்க யாரும்  அப்பவே ஒனக்கு காதல் வந்துருச்சான்னு கேட்கக்கூடாது? காதலுக்கு வெவஸ்த்தயே கிடையாது. அது எதயுமே பாக்குரதில்ல;
 அதுபாட்டுக்கு காலிங்பெள் அடிக்காம கதவத்தொரந்துக்கிட்டு மனசுக்குள்ள வந்திடும்!
சொன்னால்தான், சொன்னால்தான், காதலா? இந்த பாட்டுல காதல் எதையெள்ளாம் பாக்குரதில்லன்னு t.r. பட்டியல் போட்டிருப்பாரு, அத கேட்டுத்தெரிஞ்சுக்கங்க.
அதனால அது 6-ஆம் வகுப்புன்னும் பாக்காம வந்துருச்சு! இப்பெள்ளாம், தான், காதலிக்கிறவளுக்கு கனவனோ, அவருக்கு பொண்டாட்டி புள்ளங்க இருக்குதுங்கிறதயோ கூட பாக்குறதில்ல.
செரி விடுங்க, சன்முகத்துக்கு கருத்துச்சொல்ல நெரயா பேரு இருக்காங்க!
செரி என்னோட மேட்டருக்கு வாரேன். மொதலில் காதலுன்னுதானே சொன்ன ?இப்போ மேட்டருன்னு சொல்லுர? ஒங்க மையிண்டுவாய்ஸ் எனக்கு கேட்குது.
இது ஒரு குடும்பப்பாங்கான பதிவு என்பதை சொல்லிக்கொண்டு; தொடர்கிறேன்.
எங்க விடுதி  சாப்பாட சாப்புட ஒரு தனி முரை இருக்கு.
தப்பித்தவரி ஏனும் சாப்பாட்ட மோந்துபாத்துடக்கூடாது.
அப்புரம் நம்மால சாப்புடவே முடியாது. அங்கே வைக்கிற முட்டையும் கடுமையா வீசும். ஆனா முட்ட சாப்புடாதவங்களுக்கு பட்டானி தருவாங்க; அது செம்ம ருசியா இருக்கும்!
ஒரு நாள் வகுப்பில் பேசிக்கொண்டிருந்த போது சாப்பாடு பற்றிய பேச்செழுந்தது.
அப்போது அந்த புள்ளக்கிட்ட நீ முட்டயா பட்டானியா என கேட்டேன். அது பட்டானி என சொன்னதும்; பட்டானி சாப்பிடுபவர்கள் பெஞ்சிக்கு மாறினேன்.
 எனக்கும் முட்டயே பிடிக்காது என அவளிடம் பெருமையாய் சொன்னேன். முதலில் 5 பேராக இருந்த பட்டானி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சங்கொஞ்சமாய் கூடத்தொடங்கியது.
அதில் காதலிக்காக மாறியவர்களும் இருக்கலாம்!
முதலில்  தட்டுக்கு 2 கரண்டி பட்டானி வைத்தார்கள். பின்னர் அது ஒரு கரண்டியாக மாரத்தொடங்கியது.
நபர்களின் எண்ணிக்கை கூடிய போதும் கூட்டுக்காக ஊரவைக்கப்படும் பட்டானியின் அளவு கூடவில்லை.
இன்னும் நபர்கள் கூடவே அதில் தண்ணீரை ஊற்றி குழம்புபோல வைத்து கொடுத்தார்கள். வெங்காயங்களுக்கு நடுவே 2 3 பட்டானிகள் தான் கிடக்கும்.
 இப்போது பட்டானி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டியது. நிற்வாகம் இப்போது விழித்துக்கொண்டது! அவர்கள் பட்டானியின் அளவை கூட்ட தயாராய் இல்லை.
எங்கோ தவறு நடக்கிறது என்பதை ஆராயத்தொடங்கினர்.
விருந்துச்சாப்பாடு என்றாலே எங்களுக்கு மகிழ்ச்சிதான்! அதிலும் கரி விருந்து என்றால் சொல்லவா வேண்டும்? எங்கள் விடுதி சமயல்காரர்களுக்கு ஒரு விருதுகொடுக்கலாம். அவர்களால் மட்டரகமாக சமைக்கவும் முடியும்;
விருந்துச்சாப்பாடென்றால் அசத்தலாகவும் சமைக்கத்தெரியும்!
பட்டானி சாப்பிடுபவர்கள் சைவம் சாப்பிடுபவர்கள்! ஆனால் நாங்கள் விருந்து அன்று மட்டும் இடம்மாறி அமர்ந்து கரி, முட்டை, என வெளுத்துக்கட்டிவிடுவோம்.
அப்படிப்பட்ட விருந்து சமயத்தில் வாடன் ரைய்டைத்தொடங்கினார். பட்டானி வாங்கும் கோஸ்டி இன்று இடம்மாறி இருப்பதை கண்டுபிடித்தார்! அவர்களுக்கு அன்று கரி மறுக்கப்பட்டது.
அதில் நான் சிக்கவில்லை! நான் அப்போதுதான் பள்ளியில் சேர்ந்திருந்ததால் வாடனுக்கு நான் நினைவில் இல்லை.
அடுத்த நாள் சைவம் சாப்பிடுபவர்களின் பேர் எழுதப்பட்டது.
ஒவ்வொருவராய் கேட்டு வந்தார்கள். எனது முரை வந்தது.
சைவமா? அசைவமா? எனக்கேட்டார் வாடன்,
எனது ஆளு சைவமாச்சே! என்ன செய்யலாம் என ஒரு வினா மனதில் எழும்ப; அது மூலையை சென்றடையும் முன்னரே வாய் அசைவம் எனச்சொல்லிவிட்டது. கரிக்கொழம்பா, காதலியா என வரும்போது கரிக்கொழம்பு வென்றுவிட்டது!
வகுப்பில் நுழைந்ததும் மனதில் சிறு போராட்டம் எழுந்தது. அவளிடம் கரி சாப்பிட்டாதானே உடம்பு சும்மா கிண்ணுன்னு வரும் என திரியை கொழுத்திப்போட்டேன்!
அப்படி இல்ல சக்தி. நிலத்துலேயே பெரிய விளங்கு எதுவென கேட்டால்.
நான் யானை என்றேன். அது என்ன கரியா சாப்பிடுது? என்றால். நான் வியந்துபோனேன்! புடிச்சாலும்புடிச்சேன் புத்திசாலி பொன்னத்தான் புடுச்சுருக்கேன் என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்!
அடுத்து அவள் பேசத்தொடங்கினால்! சரிவிகித உணவு, வைட்டமீன் என நீண்ட உரை ஆற்றி முடிச்சா.
எதோ பேச்சுப்போட்டிக்கு மனப்பாடம்பன்னுனதுபோல. வணக்கத்தையும் நன்றியையும் கட்பன்னிட்டு அப்படியே ஒப்பிச்சு முடிச்சா!
யாரு சொல்லிக்கொடுத்ததுன்னு தெரியல. பாய்ண்டு அத்தனையுமே செம்ம அருவையா இருந்துச்சு; அந்த புல்ல கொரலுல கேட்டதால என்னவோ எனக்கு எள்ளாம் அருமையா இருந்துச்சு!
அந்த பேச்சக்கேட்டதுமே மனசு, கரியா? காதலியா? என சிறு தடுமாற்றம் கண்டது. ஆனாள் அடுத்த நொடியே கரிதான் முக்கியம் என மனசு பிக்ஸ்சாயிடுச்சு!
அந்த ஞாயிற்றுக்கிழம வாட்டர்கேன் கிரிக்கேட்டுல சதமடிச்சுட்டு; ஒடம்புக்கு கொஞ்சம் இதமா இருக்குமேன்னு; தண்ணிங்குடிக்க பைப்பு  பக்கம் போனேன். அப்போது பக்கத்தில் இருந்த ஸ்டோன்பெஞ்சியிலிருந்து ஒரு குரல்.
ஏம்மா இந்த 2 கரித்துண்ட மட்டும் கொண்டுக்கிட்டு என்ன பாக்கவந்தியாக்கும்? அதற்கு அவுங்க அம்மா: அர டிப்பன் பாக்சு கரி இருக்கேடி.
இது கரியா அம்புட்டும் எளும்பு. நாட்டுக்கோழி கரி அப்படி தாண்டி இருக்கும்.
எந்த கோழிய அடுச்ச? மரத்துலே அடையுமே அதத்தான? ஆமா.
பக்கத்துவீட்டுக்காரன் அதுமேளே ஒரு கண்ணா இருந்தான்! நல்லவேல நீ அடிச்சுட்ட.
அடுத்த வாரம் ஆட்டுக்கரி கொண்டுவா!
நீ சாப்புட்டியாம்மா? மொத பஸ்ச புடிக்கத்துக்காண்டி கஞ்சிகுடிக்காம உடியாந்தேன். எனக்கும் சேத்துதான் கட்டிக்கிட்டு வந்தேன்.
இப்போ சாப்பாடு இருக்குள்ள? இல்லடி, செரி நான் கடையில சாப்புட்டுக்கிறேன்.
சாரிமா, இன்னைக்கி கொழம்பு நல்லா இருந்துச்சா அதுனால நெரயா சாப்புட்டேன்!
இப்படி என்னவளின் பேச்சைக்கேட்டதும் கோபம் தலைக்கேரியது.
சுவாலசியைவிட பாட்னிதான் சிறந்ததுன்னு எனக்கு பாடம் எடுத்துட்டு; இப்படி முழுக்கோழிய முழுசா முழுங்குரியே என வகுப்புக்கு வந்ததும் கேட்கனும்முன்னு நெனச்சேன்.
உடனே அந்த கோபம் மாறியது. அந்த புள்ளைக்காக வகுப்புள  பல்முனைப்போட்டி நடந்துக்கிட்டு இருக்கு;
இப்போதான் எனக்கும் அந்த புள்ளைக்கும் கெமிஸ்றி ஒர்க்கவுட்டாக தொடங்கிருக்கு; அத நாமே ஏன் கெடுத்துக்கனும் என நினைத்து,
அந்த கெமிஸ்றிக்காக எனது சூடு, சொரன, என எள்ளாத்தையும்; காத்துள விட்டுவிட்டேன்!