இங்கே துலாவு

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

பார்வையற்றோர் வசிக்கும் விடுதியில் நடந்த காதலர்தின கொண்டாட்டம்

பார்வையற்றோர் வசிக்கும் விடுதி; மிகவும் வசிகரமானது. வெளியிலிருந்து எங்களை யாராவது பார்க்க வரும் போது நாங்கள் ஒரு ஒழுங்குக்கு உற்பட்டு அமைதியாய் இருப்போம். அவர்கள் சென்ற பிரகு தீயாய் இருப்போம். 2013-இல் நான் மதுரையில் உள்ள iab விடுதியில் தங்கி இருந்தபோது காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு க

விதைப்போட்டி நடத்தினேன். அதனோடு அவர்களிடம் ஒரு வினாவயும் முன் வைத்தேன். அதில் சிறப்பாக பதில் சொல்பவர்களுக்கு பரிசும் கொடுத்தேன். நான் விடுதியில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரையும் நேரடியாக சந்தித்து கருத்துக்களைக்கேட்டேன்! அதை ஒலிப்பதிவு செய்து வைத்தேன். அதை யூடூப்பில் தரவேற்றியுள்ளேன். அது ஆடியோ வடிவில் இருக்கிறது. நான் அவர்களை பேட்டி கண்டு பதில்களை வாங்கிய விதத்தையும். மாணவர்களின் ஆரவாரத்தையும் இப்பதிவில் நீங்கள் அவதானிக்களாம். அன்று விடுதியே அதிர்ந்தது. அதன் காரணமாக விடுதி வாடனிடம் திட்டு வாங்க வேண்டி இருந்தது. உயர்மட்ட குழு விசாரனை நடத்தவும் தீர்மானித்தனர். இந்த ஆண்டோடு கள்ளூரிப்படிப்பை முடிக்கப்போவதால் விட்டு விடலாம் என முடிவு செய்தார்களோ தெரியவில்லை. நிர்வாகத்தினருக்கு இன்னொரு எரிச்சலும் இருந்தது; காதலர் தினத்த இப்படி ஆரவாரமா கொண்டாடுகின்றார்களே! என்ற வவுத்தெரிச்சல்தான்! அத்தனை சிக்களுக்கும் இடயில் கொண்டாடிய காதலர் தினம் இன்று மனது மரக்காத பொக்கிசமாய் இருக்கிறது. எம்பா? ஒரு பொண்ணோட காதலர்தினத்த கொண்டாடுனவந்தான் பொக்கிசமான நினைவுகள், மனது மரக்காத தருனங்கல், என்றெள்ளாம் சொல்லனும்! நீ போயி இப்படி சொல்லுரியே? என நீங்கள் முனுமுனுப்பது எனக்கு கேட்கிறது! என்ன செய்ரது? இருக்குரவன் அல்லி முடுஞ்சுக்கிறான்; இல்லாதவன் எதயாச்சும் சொல்ல வேண்டியதா இருக்கு! இது மிக நீண்ட ஆடியோ; 2 நிமிடங்கள் பிப்ரவரி 14 அன்று உலகில் நடந்த நிகழ்வுகளை கோடைப்பண்பலையில் பதிவு செய்துள்ளேன். அதை தொடர்ந்து எனது ஆட்டம் தொடங்கும். செரி இந்த ஆடியோ பதிவை கேட்டுவிட்டு கருத்தை சொல்லுங்கள்! அப்படி யாரும் சொல்லலென்னா ஒருநாளைக்கு 3 வேளைக்கு மேள சாப்பிட மாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக