இங்கே துலாவு

செவ்வாய், 26 டிசம்பர், 2017

என் வாழ்வில் 2017

2017-லில் நான் ஏரி அடிச்சிருக்கனா இல்ல அது என்ன ஏரி மிதிச்சிருக்கான்னு பாக்கிற நேரமிது!
மேச ராசி அன்பர்களே: சனி எட்டாம் வீட்டில் இருப்பதால் நீங்க எந்த வீட்டிலும் நிம்மதியாக இருக்கமுடியாது. என்ற
சோசியர்களின் எச்சரிக்கைகளோடே இந்தாண்டு தொடங்கியது. அந்த சோசியர்களுக்குத்தெரியாது அது எள்ளா ஆண்டும் எங்கள் வீட்டிலே இருப்பது.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

காதல் அட்றாசிட்டிகள்

எங்கள் விடுதியில் காதலிக்க அனுமதி இல்லை என்றாலும்;
காதலோ யார் அனுமதியையும் கேட்காமல் வந்துகொண்டுதான் இருந்தது. அங்கு பலரும் அதன் மாய கரங்களால் ஆட்டு விக்கப்பட்டுக் கொண்டிருந்தோம்.
கால ஓட்டத்தில் காட்சிகள் மாறின. ஆனால், நினைவுகளோ நிலைத்துவிட்டன.
 6-ஆம் வகுப்புப் படிக்கும் போதெள்ளாம் எங்கள் வகுப்பில் அமைதியாகத்
தான் இருப்பேன்.
நொண்டிச்சாமி, வேலுச்சாமி, பாண்டிமல்லையன், காலிரத்தினம் என
பயல்கள் பட்டாலம், அந்த பொன்னோட மனதில் முட்டி மோதி இடம்பிடிக்க

திங்கள், 2 அக்டோபர், 2017

ப்ஆர்வையற்றோருக்கான பாடல்கள்:

விடுதியில் நான், துரை சார், போன்ற பலரும் பார்வையற்றோருக்கான பாடல்கள் என பல பாடல்களை வகைப்படுத்தினோம். அப்படி நாங்கள் வகைப்படுத்திய சில பாடல்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் பார்வையற்றோரின் வாழ்வியலோடு சில வரிகள் ஒத்துப்போகும் அப்படிப்பட்ட சில பாடல் வரிகளை இங்கே காண்போம்! இங்கு சில பாடல்கள் மட்டுமே தொட்டுக்காட்டப்படுகிறது. *இங்கே ஒரு பார்வையற்ற காதலனுக்கு ஒரு வித்தியாசமான ஆசை

வியாழன், 21 செப்டம்பர், 2017

இன்றிரவே நான் துயரமான வரிகளை எழுதக்கூடும்

இன்றிரவே நான் துயரமான வரிகளை எழுதக்கூடும்.
மாலையிலிருந்து மனசு சரியில்லை;
நண்பர்களிடம் பேசப்பிடிக்கவில்லை.
சூரியன் மறைந்தது;
 ஆகாயம்,
 நட்சத்திரங்களால் நிறைந்தது.
இரவிலாவது வருமென
எதிர்பார்த்தேன்!
இன்னும் வரவில்லை.
ஆந்தை அலறியது
குடுகுடுப்பை சொன்னான்
நல்ல காலம் பிறக்குது என.
காலையிலாவது வருமென கண்மூடினேன்.
காகம் கரைந்தது;
நிலமும் தெளிந்தது;
மலர்கள் அழகாய் மலர்தது;
கதிரும் கிழக்கே எழுந்தது.
கல்லூரி செல்ல,
பணிக்கு செல்ல
மனிதர்கள்,
பரபரப்பாய் இயங்கத்தொடங்கினர்;
நானோ,
அதை நினைத்து எங்க தொடங்கினேன்.
கைபேசியை கையோடு வைத்துக்கொண்டேன்
அறிவிப்பு ஒலி வரும்போதெல்லாம்
ஆர்வமாய் பார்த்துக்கொண்டேன்.
இன்னும் வரவில்லை உன்னிடமிருந்து ஒரு வணக்கம்.
வகுப்பறையில் பேசாது;
வாட்சாப்பில் பேசி வளர்க்கத்தொடங்கினோம் காதலை.
நேற்றிலிருந்து உன்னில் ஒரு மாற்றம்;
நான் யாருடன் பேசியது குற்றம்?
இப்போதுதான் காதலின் முதல் படியில் ஏறத்தொடங்கி இருக்கிறேன்
 இறக்கிவிட்டு  சென்றுவிடாதே.
மாலைக்குள் வணக்கம் அனுப்பி
என் வாழ்வை வசந்தமாக்கு!
இல்லையெனில்,
இன்றிரவே நான் துயரமான வரிகளை எழுதக்கூடும்.