இங்கே துலாவு

வெள்ளி, 30 நவம்பர், 2018

பார்வையற்றோருக்கான கால்பந்தாட்ட போட்டி

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் இரண்டாம் தேதி கேரளாவில் பார்வையற்றோருக்கான கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், பார்வை மாற்று திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பெங்களூரில் நடந்த பார்வையற்றோருக்கான கால்பந்து போட்டியில் வாகை சூடிய கேரள அணியும், அவர்களை எதிர்த்து தமிழ்நாடு-கர்நாடக வீரர்கள் ஒன்றிணைந்த அணியும் விளையாட உள்ளது.
டிசம்பர் 1 அன்று பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் கலந்து கொள்வதற்காக நான், கோல்காப்பாளர் அருமை தம்பி வசந்த், பார்வையற்றோர் தொடர்பான விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் உடையவரும், இளைய வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு  வழிகாட்டி; சிறந்த வீரர்களாய் வார்த்தெடுக்கும் பணியை செய்து வரும் என் வகுப்புத் தோழன் வெங்கலமூர்த்தி என மூவரும்; மதுரையில் இருந்து கேரளா நோக்கி புறப்பட்டு விட்டோம்.

புதிய வீரர்களுடனும், நிறுவனங்களுடனும் நாம் தொடர்பை ஏற்படுத்தும் போது; அவர்களிடமிருந்து விளையாட்டு தொடர்பான நுநுக்கங்களைக் கற்றுக்கொண்டு நம் விளையாட்டுத் திறனை மேம்படுத்த இயலும். அதுமட்டுமல்லாது, எங்கெங்கே போட்டிகள் நடைபெருகின்றன என்ற தகவலையும் பெற்று, தமிழக வீரர்களை பங்கேற்க செய்ய இயலும். இதன் மூலம் தமிழ்நாட்டில் பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்கலாம்.

இப்பயணத்தை  சாத்தியமாக்கியவர்கள் தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்க தோழர்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து,  எங்களை  சிறப்பாய் வழிநடத்தும் சரவணராம் சாருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வசந்த் ஒரு செல்பிய கிலுக்குப்பா. வெங்கல மூர்த்தி ஆம்பள பயலுகளோடல்லாம் செல்பி எடுக்க வேண்டி இருக்குதே, என வருத்தப்படுவந்னு தெரியும். எங்களுக்காக இன்னைக்கி மட்டும், எங்க கூட நின்னு போஸ்கொடு.
நாளை சேரநன்னாட்டிளம் பெண்களுடந் செல்பி எடுத்துக்களாம்.

தேர்வு முடிந்துவிட்டது

புத்தகங்களை விட்டெரி;
கைக்கு எட்டாதவாறு பேனாக்களை வை;
வினாத்தாளை கிழித்தெரி;