இங்கே துலாவு

ஞாயிறு, 5 ஜூலை, 2015

வீழ்த்த முடியாத விக்கேட்டால் வீழ்ந்த தமிழகம்!

கடந்த 21-11-2014 22-11-2014 அன்று தமிழகம், கேரல அணிகளுக்கு இடையே பார்வையற்றோருக்கான t20 கிரிக்கேட் தொடர் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் பாலக்காடு விக்டோரியா அரசு
கள்ளூரி மைதானத்தில் நடைபெற்றது. பார்வையற்றோர் கிரிக்கேட் வரலாற்றில் இத்தொடர் ஒரு மயில்கல். இப்போட்டியின் ஓட்டவிபரங்கள் உடனுக்குடன் crichq என்ற இணையம் வழியாக
தரப்பட்டது! இவர்களே தொடர் நாய
கனுக்கு ஒரு டேப்லடையும் பரிசாக கொடுத்தனர்.
முதல் போட்டி:
21-11-2014 அன்று காலையில் தொடங்கியது. நானயசுழச்சியில் வென்ற தமிழக அணித்தலைவர் தினகரன் கலத்தடுப்பை தேர்ந்தெடுத்தார். மட்டை வீசத்தொடங்கிய கேரலம் வேகப்பந்துக்கு ஈடுகொடுக்க
முடியாமல் விக்கேட்டுகளை இழக்கத்தொடங்கியது. 16 ஓட்டங்களுக்கே 7 விக்கேட்டுகளை இழந்த கேரலம் கடைசியில் 52 ஓட்டங்களுக்கு சகல விக்கேட்டுகளையும் பரி கொடுத்தது.
வெங்கடேஸ்முனிகரன் மற்றும் தினகரன் தலா 3 விக்கேட்டுகளை கை பற்றினர். பின்னர் கலம்புகுந்த தமிழகம் 8 ஓவர்களில் 4 விக்கேட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
சரத்குமார் 3 பவுண்டரிகளுடன் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தினகரன் 13 ஓட்டங்களுடன் களத்தில் நின்று வெற்றிக்கு வழிவகுத்தார்.
இப்போட்டி முடிவில் ஆடுகலம் பற்றிய தன்மை இரு அணிக்கும் தெரிய வந்தது. முற்றிலும் வேக பந்துக்கு சாதகமான ஆடுகலம். முழு பார்வையற்றவர்கள் துடுப்பெடுத்தாடவே முடியாது.
உருண்டு வரும் பந்து 4 முதல் 5 அடி வரை மேளெலும்பும் தன்மை கொண்டதாக இருந்தது. களத்தடுப்புக்கு எவ்வித தடையும் இல்லாதவாறு புல் தரையாக இருந்தது. முதல் போட்டியின்
ஆட்ட நாயகனாக தினகரன் தெரிவானார்.
இரண்டாவது போட்டி:
22-11-2014 காலை நானயசுழல்ச்சியில் வென்ற தமிழகம் மீண்டும் கலத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. தொடக்கத்தில் முதல் போட்டியைவிட கேரலம் பெரிதும் தடுமாரியது. 9 ஓட்டங்களுக்கு
6 விக்கேட்டுகளை இழந்தது; 18 ஓட்டங்களுக்கு 7 விக்கேட்டுகளை இழந்து தடுமாரிய போது; கை கொடுத்தனர் மநீசும் அஜேசும். தொடக்க வீரராக கலம்புகுந்த அஜேஸ் ஒரு புரம்
நிலைத்து நின்றார். வெங்கடேஸ்முனிகரன் தினகரன் பந்துகளை தானே எதிர்கொண்டார். பின் இந்திய அணிக்காக விளையாடிய மனீஸ் இனைந்துகொள்ள 120 ஓட்ட இணைபாட்டம் புரிந்தனர்.
மனீஸ் 48 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். மறு முனையில் அஜேஸ் 75 ஓட்டமெடுத்து ஆட்டமிலக்காமல் கலத்தில் இருந்தார். 19 ஓவரில் கேரலா அனைத்து விக்கேட்டுகளையும் இழந்து
156 ஓட்டங்களை பெற்றது. இரண்டாவதாக கலம்புகுந்த தமிழகம் சீரான இடைவெலியில் விக்கேட்டுகளை இழக்கத்தொடங்கியது. தொடக்க ஆட்டகாரரான சரத்குமார் மட்டும் நம்பிக்கை
தரும் வகையில் ஆடினார். வேகமாய் வந்த பந்து அவர் காலை பதம் பாக்க ரிட்டேட் முரையில் வெலியேரினார். 50 ஓட்டங்கலுக்கு 2 விக்கேட்டாக இருந்த அணியின் நிலை சரத்தின்
இழப்பிற்கு பிரகு மலமலவென விக்கேட்டுகள் சரிந்தன. 84 ஓட்டங்களுக்கு 8 விக்கேட்டாக மாரியது மீண்டும் சரத் கலமிரங்கினார் அவருக்கு யாரும் உருதுனையாக இல்லாததாள்
100 ஓட்டங்களுக்கு தமிழகம் அனைத்து விக்கேட்டுகளையும் இழந்து தோற்றது. முழு பார்வையற்ற பந்து வீச்சாலரான வேனு கோபால் 4 விக்கேட்டுகளை வீழ்த்தினார். சரத்குமார்
36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார். 75 ஓட்டங்களை குவித்த அஜேஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மூன்றாவது போட்டி:
22 மத்தியம் தொடங்கியது. நேரமின்ன்மை காரணமாக 15 ஓவர்களாக மட்டுபடுத்த பட்டு போட்டி தொடங்கியது. நானயசுழல்ச்சியில் வென்ற கேரல அணித்தலைவர் சிபூ ஆபிரகாம் கலத்தடுப்பை
தேர்ந்தெடுத்தார். மட்டை வீசத்தொடங்கிய தமிழகம் 15 ஓவர்களில் 158 ஓட்டங்களை குவித்தது. வெங்கடேஸ் முனிகரன் 36 ஓட்டங்களையும், தினகரன் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
159 ஓட்டங்களை எட்டினால் வெற்றி என ஆடத்தொடங்கிய கேரலா 1 விக்கேட்டை மட்டுமிழந்து வெற்றி இலக்கை எட்டியது. அஜேஸ் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களை குவித்தார். இப்போட்டியில்
தமிழக பந்து வீச்சாலர்கலால் விக்கேட்டுகளை கை பற்ற முடியவில்லை. அஜேசின் விக்கெட்டை கை பற்றினாலே வெற்றி தமிழக வசமாயிருக்கும். அந்த ஒரு விக்கேட்டை மட்டும்
தமிழகவீரர்களால் கை பற்றவே முடியாமல் போய்விட்டது அதனால் வெற்றி அவர்கள் வசம் போய்விட்டது.
ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அஜேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சில தகவல்கல்:
மனீஸ் ஒரு சிறந்த கலத்தடுப்பாலர். இந்திய அணி ுலகக்கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தவர். இறுதி போட்டியில் பதினைந்திற்கும் மேற்பட்ட 4 ஓட்டங்களை தடுத்து இந்தியா
உலகக்கிண்ணம் வெல்ல உதவியுள்ளார். இவருக்கு கேரல அரசு அரசு பணி வளங்கி கௌரவித்துள்ளது. அஜேஸ் இவர் இந்திய அணிக்கு தேர்வானாலும் பாஸ்போட் பிரச்சனையால் தென்னாப்பிரிக்கா
சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெர இயலவில்லை. தமிழக அணியில் ஆடும் வெங்கடேச்முனிகரன் ஒரு இலங்கை தமிழர்.
தமிழக அணியின் தோழ்விக்கான காரணங்கள்:
முதல் வெற்றி கொடுத்த உர்ச்சாகம் அதிக நம்பிக்கையை கொடுத்தாலும் அடுத்த போட்டி பற்றி சிந்திக்க தூண்டவில்லை.
தமிழக அணியில் புதிதாய் விலையாடும் வீரர்கள் இருந்ததால் ஒரு வித பயமிருந்தது. அருன்11-ஆம் வகுப்பு, வெங்கடேஸ்முனிகரன் 12-ஆம் வகுப்பு போன்ற இளம் வீரர்கள் துடுப்பாட்டத்தில்
தடுமாரினர். தடுப்பாட்டத்திற்கு பெயர் பெற்ற செல்வம் தனது முதல் தொடரில் விளையாடுவதால் தடுமாரினார். நம்பிக்கை ஆட்டக்காரர் சரத்தின் காயம் தோழ்விக்கு முக்கியக்காரணம்.
2 ஓட்டங்கள் பெறவேண்டிய இடங்களில் ஒரு ஓட்டம் மட்டும் பெற்றது அணியின் ஓட்டத்தை வெகுவாக குறைத்தது. சிறந்த விக்கேட்காப்பாலரான அருன் சிறந்த கலத்தடுப்பாலரும்
கூட; இவரை கலத்தடுப்பில் நிருத்தினால் விக்கேட் காப்பு தொய்வடையும், விக்கேட் காப்பில் நிருத்தினால் கலத்தடுப்பு தொய்வடையும். மிக முக்கியமான காரணம் அஜேஸ்,
அந்த விக்கேட்டை மட்டும் கைபற்றி இருந்தால் தொடர் தமிழக வசமாகி இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக