இங்கே துலாவு

வியாழன், 2 ஜூலை, 2015

பார்வையற்றோருக்கான விளையாட்டு குரித்த தொடர் பாகம்3:

 முதல் நகர்த்துதலுக்கு பின்னால்:
பார்வை இல்லை என்று தெரிந்த உடன் குழந்தைகளை ஒரு மூலையில் அமர்த்தி விடுகின்றனர்.
அதற்கு சுதந்திரமாய் நகர்வதற்கு அனுமதிகள் மரைமுகமாக மருக்கப்படுகின்றன.
 எழுந்து நடந்தால் ஏதேனும் ஒன்றை தல்லி விட்டு
 உடைத்து விடுவமோ என்ற வினா அவர்களை கட்டுப்படுத்துகிறது.
 எதேனும் தல்லி விட்டாலோ சும்மா அ
ப்படி இருக்கமாட்டே! என்ற வசவுகள் வேறு.
 வீட்டை விட விடுதிகள் அல்லது பள்ளிகள் சுதந்திரமாய் நடக்க வாய்ப்பளிக்கின்றன.
முழுப்பார்வையற்ற சிலர் அடுத்த அடி எடுத்துவைக்கக்கூட தயங்குவர் அவர்களது பின்னனிகளை ஆராய்ந்தால் இது போன்ற கதை இருக்கும்.
   காற்றில் அனைந்த தீபம்:
பிரவியிலேயே பார்வை இல்லாதவர்கள்;
தன்னை தங்களுக்கே தெரியாமல்  சூழலுக்கு ஏற்றார் போல் தகவமைத்து விடுகின்றனர்.
இடையில் பார்வை இல்லாமல் போனால் அவர்கள் மிகுந்த சிறமத்திற்கு ஆலாகுகின்றனர். வெற்றிசெல்வம் என்ற சிறுவனுக்கு தொடக்கப்பள்ளி படிக்கும் போது பார்வை முழுதும் போய்விட்டது. அப்போது எப்படி இருந்தது எனக்கேட்டேன். எனக்கு ஒன்னும் புரியல தட்ட எடுத்து கொஞ்ச நாள் தாலம் போட்டுக்கிட்டு இருந்தேன் அப்புரம் பசங்களோட சேர்ந்து விளையாடத்தொடங்கிட்டேன் என்றார்.
[சிரமமான விடையங்களை இப்போது நினைத்தால் சிரிப்பு வரும்;
சிரித்த தருனங்களை நினைத்தால் நமக்கு அழுகை வரும்.]
இன்று அவற்றை மரந்த வெற்றி;
 தமிழக துடுப்பாட்ட வீரர்.
 செந்நீர் சிந்திப்பெற்றோம் வெற்றி:
வேகமாக ஓடி விளையாடத்தொடங்கும் போது அத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும்.
 சுவர்களில் இடித்தோ இன்னொருவரின் மீது மோதியோ அடிபட்டு;
ரத்தம் சிந்தி விளையாட்டின் முதல் படியில் காலை எடுத்துவைப்போம்.
 பிரகு மோதுதலும் அடிபடுதலும் வாழ்க்கையில் ஒன்றர கலந்த நிகழ்வாகி விடும்.
 வெலி இடங்களுக்கு செல்லும் போது மின் கம்பங்களிலோ நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்களிலோ இடித்து வளியை தாங்கிக்கொள்ள இதுவே முன்நொத்திகை. இப்படிதான் விளையாட்டின் படி நிலை தொடங்குகிறது.
  பார்வையற்றோருக்கான பள்ளிகளில் விளையாட்டு:
அரசு பள்ளிகளில் விளையாட்டுக்கான இடங்களும்; மருத்துவம் பெருவதற்கான வசதிகளும்
 அரவே இல்லை.
நான் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியில் படித்தேன்.
 நாங்கள் விளையாட மைதானங்கள் இல்லை இருக்கும் கொஞ்ச இடத்தில் விளையாடுவோம். திடிரென மண்டை உடைந்துவிடும். மிகப்பெரிய காயங்களுக்குதான் மருத்துவமனைக்கு செல்வோம். அப்படி இல்லை என்றால் காப்பித்தூல், மஞ்சல் பொடி, பான்ஸ்பௌடர், இவற்றில் ஏதேனும் ஒன்றை காயம் பட்ட இடத்தில் அல்லி அமுக்கிவிட்டு படுக்கவைத்து விடுவார்கள். இது போன்ற நிகழ்வுகள் பற்றி பின்னால் விரிவாய் அலசுவோம்.
 ஏகரும் ஏகளைவர்கள்:
பார்வையற்றோருக்கான விளையாட்டின் விதிமுரைகளை; ஏதேனும் தொடரில் பங்கு பெற்ற பிரகே தெரிந்துகொள்கிறோம். நாங்கள் அறிந்ததை பிர மாணவர்களுக்கு கற்றுத்தருகிறோம்.
 சில போட்டிகளுக்கு விதிமுரைகள் தெரியாமல் தாங்களே விதிகளை உருவாக்கி விளையாண்டு பார்த்து போட்டிக்கு செல்வது நகையாகத்தான் இருக்கும். அதிலும் வெற்றிவாகை சூடிய கதைகள் பல உள்ளந. சில போட்டிகளுக்கு போட்டி ஏற்பாட்டாலர்களை தவிர யாருக்கும் விதிமுரைகள் தெரியாது. இது போன்ற நிளை இனி தோன்றகூடாதென்பதற்கே இத்தொடரை நான் எழுதுகிறேன்.
      தொடரும்,,,,,,

1 கருத்து: