இங்கே துலாவு

புதன், 14 அக்டோபர், 2015

நமக்காக யார் குரல் கொடுப்பார்!


புதுக்கோட்டையில் நடந்த வளைப்பதிவர் திருவிழாவில் நான் கலந்துகொண்டேன். இனைய கல்விக்களகத்தின் அறிவிப்புகளைக்கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன். பார்வையற்றோருக்கு தொழில்னுட்பந்தான் சுய சாற்பை கொடுக்கும். நாம் பெரும்பாலும் பெரிய நகரங்களில் வசிக்கிறோம். அங்கு நம்மை ஒரு குருகிய வட்டத்திற்குள் சுருக்கிக்கொண்டு வாழ்கிறோம். கள்ளூரிப்படிப்பால் சிலருக்கு பார்வையற்றவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது.ானால், இன்று நம்மைப்பற்றிய விழிப்புணர்வுகள் அதிகம் வந்திருக்கிறதா என்றால் கேழ்விக்குறியாகத்தான் இருக்கிறது. புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நாம் தனியே நடந்து வருவதையே வியப்பாகப்பார்க்கிறார்கள். அப்படி என்றால் நமக்கான தொழில்நுட்பம் பற்றிய புரிதல் பார்வை உள்ளோருக்கு எந்த நிலையில் இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்று இல்லை. இன்று நம் தோழர்கள் கல்விக்கூடங்களில் ஆசிரியராய் இருப்பதால்; இலய சமுதாயத்தினரிடம் சிறிது விழிப்புணர்வு இருக்கிறது. கோவையைச்சேர்ந்த வளைப்பதிவர் ராஜ்குமார், jaws மற்றும் kurzweil மென்பொருட்கள் பற்றி கூறினார். அவரது ஆசிரியர் இம்மென்பொருட்களை கையாலுவது பற்றி அவர் தெரிந்து வைத்திருந்தமையே இதற்கு காரணம். ஆனால், இன்றுவரை நம்மை நம்பிக்கையின் சின்னமாக சித்தரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி நாம் நம்பிக்கையுடன் நடக்க உதவும் தொழில்னுட்பத்தை மேம்படுத்த நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். நிதி உதவி எள்ளாமில்லை. நமக்கான தொழில்னுட்பங்கல் பற்றி வளைப்பூக்களில் எழுதுவோம். வட இந்தியாவில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தொழில்னுட்பத்தை பற்றிய தகவல்கள் அதிகம் எழுதப்படுகிறது. நம் தேவைகளுக்கு அவற்றையே நாம் நாடுகிறோம்.
நம்மில் சிலர் இது போன்ற விடயங்களை எழுதிவருகிறார்கள். ஆனால், அவற்றை பிரபலப்படுத்துவதில்லை. திரட்டிகளில் சேர்த்து அவற்றை பிரபலப்படுத்தினால் அது அனைவருக்கும் தெரியவரும்.  google தேடல்கலில் முடிவுகளாக அதிகம் கிடைப்பது வளைப்பூக்களில் எழுதப்பட்ட செய்திகளே. நாம் வளைப்பூவில் எழுதினால் பார்வையுள்ளவர்களும் அவற்றைப்பற்றி படித்து தெரிந்துகொள்வார்கள். இனைய கல்விக்களகம் 100000 தமில் மின்னூல்களை வெளியிடப்போவதாக சொல்கிறது. அவற்றை நாம் வாசிக்கும் வகையில் வடிவமைக்கும்படி கோரிக்கைகள் வைக்க வேண்டும். ptf  தமிழ் கோப்புக்களை படிக்கு மாறு திரைவாசிப்பான்களை உறுவாக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை நாம் அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான வழிதான் இந்த google forme. இதில் உங்கள் கறுத்துக்களை பதிவு செய்தால் அவர்களிடமே அந்த கருத்து சென்று சேர்ந்துவிடும்.
அதற்கான சுட்டி கீழே!
http://www.paarvaiyatravan.com/2015/10/alosanai.html
நம்மிடமிருக்கும் தொழில்னுட்ப வள்ளுனர்கள் இனய கல்விக்களகத்தின் தலைவரை சந்திக்க முயர்ச்சிகள் செய்யலாம். இத்தகைய நல்ல விடையங்களை பார்வையற்றோருக்காக இயங்கும் நிறுவனங்களை விட மின்னஞ்சல் குழுக்கள் சிறப்பாக செய்யும் என்பது என் நம்பிக்கை.
 கூடியளவு விரைந்து இச்சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்தால் சிறப்பாய் இருக்கும். தொழில்னுட்ப வளர்ச்சியில் நமக்கான பங்கை செழுத்த நல்ல நேரம் உதித்திருக்கிறது. நாம் பார்வையுள்ளவர்களோடு இனைந்து இயங்குவதால் நம் இலக்குகளை விரைந்து எட்ட முடியும். நம்மை பற்றிய விழிப்புணர்வும். நமக்கான தொழில்னுட்பம் பற்றிய விழிப்புணர்வும் சமூகத்தில் ஏற்படும். அப்புரம் மரக்காமல் அந்த சுட்டியில் சென்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

4 கருத்துகள்:

  1. தற்போதுதான் உங்கள் தளத்தின் சுட்டியை "பார்வையற்றவர்கள் கணினி பயன்படுத்துவது எப்படி?" http://tirupatimahesh.blogspot.com/2015/11/blog-post_13.html என்ற பதிவில் பின்னூட்டமாக கொடுத்து வருகிறேன். சில நிமிடங்கள் மட்டுமே புதுக்கோட்டையில் நாம் சந்தித்தாலும் நம் சந்திப்பை நினைவில் கொண்டு அதை உங்கள் பதிவில் எழுதியிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இந்த மென்பொருட்களை குறித்து எழுத வேண்டுமென்று ஆசை. எழுதுவதில் விட்ட நீண்ட இடைவெளியால் அப்படியே தொய்வில் கிடக்கிறது.

    சென்னை மந்தைவெளியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஒரு வங்கி அதிகாரியை தமிழா கட்டற்ற மென்பொருள் உருவாக்கப் பட்டறையில் ஒருமுறை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் தன்னைப் போன்ற தன்னார்வர்களின் முயற்சியால் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பு செய்திருக்கிறார். அவர் தனக்குத் தெரிந்த ஒரு மென்பொருள் பொறியாளரின் (இளைஞன்) உதவியில் Android மொபைலில் தமிழ் கட்டுரைகளை வாசிக்கும் செயலியை உருவாக்கும் முயற்சியில் இருந்தார். சோதனை முறையில் முழுமையாடையாத அந்த மென்பொருளின் இயக்கத்தைப் பார்த்தே அசந்து விட்டேன். eSpeak என்ற திறமூல மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என நினைக்கிறேன். அந்த செயலி மிகக் குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்ளும். இணைய இணைப்பும் தேவையில்லை. மிகத் துல்லியமாக துரிதமாக இயங்கும். இந்தியாவில் பல உயர்தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவு செய்தும் போதிய பலன் தராதது வருத்தமளிப்பதாக வேதனையுடன் குறிப்பிட்டார். ஆங்காங்கு நடக்கும் தரமான ஆய்வுகளும் அந்தந்த பல்கலைக் கழகங்களிலேயே ஒரு வேலிக்குள் முடங்கிக் கிடப்பதைக் குறித்து அவர் இல்லத்தில் விவாதித்தோம். ஐந்தாறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்த சந்திப்பை ஆவணப்படுத்த தவறிவிட்டேன்.

    இந்த சுட்டியில் இந்த மென்பொருள் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் கிடைக்கிறதா எனப் பாருங்கள்.
    http://cis-india.org/accessibility/blog/report-on-espeak-tamil-computing-with-nvda-training-workshop
    இதுபோன்ற சமூக மென்பொருள் உருவாக்க திட்டங்களில் நிறைய பங்களிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது, ஆனால் அதற்கான நேரம், தளம் இன்னும் கூடிவரவில்லை. ஆயினும் எங்களால் ஆன பங்களிப்பை மானுட நலனுக்காக இயன்றளவு செய்வோம், தோள் கொடுப்போம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று பார்த்தேன்! மகேசின் பதிவையும் படித்தேன் அருமையாக எழுதியுள்ளார். இன்னும் நிறைய எங்களுக்கான தொழில்னுட்பம் பற்றி எழுத வேண்டும்.

      நீக்கு
  2. முதல் பின்னூட்டத்தில் கொடுத்த சுட்டியில் படித்தபோது நான் சொன்ன வங்கி அதிகாரியைப் பற்றி கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வந்தேன். அவர் "வள்ளுவன் பார்வை" என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நீங்கள் ஏற்கனவே பதிவில் சொன்னபடியே இது உள்ளொளி மாற்றுத்திறனாளிகளின் நலம் பேனும் ஒரு மின்னஞ்சல் குழுமம், நிறுவனமல்ல.
    கூடுதல் தகவலுக்கு http://www.eyeway.org/?q=first-tamil-mailing-list-visually-impaired-valluvan-paarvai அனுகவும். அவரது மின்னஞ்சல் முகவரியும் அந்த தளத்தில் இருக்கிறது. [vengat.cbe@gmail.com]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லுவன் பார்வை மற்றும் இனையத்தென்றள் என இரு மின்னஞ்சல் குழுமங்கள் விழிச்சவால் உடயவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. நான் இரண்டிலுமே அங்கத்துவம் வகிக்கிறேன். இன்னும் சிரு குழுமங்களும் இயங்கி வருகின்றன. இது போன்ற மின்னஞ்சல் குழுமத்தினர் தான் பல இடங்களில் பார்வையற்றோருக்காக கருத்தறங்குகளை நடத்தி வருகின்றனர். இவற்றில் எனது பங்கும் கடுகளவு உண்டு. இம்முயர்ச்சியை இன்னும் பல இடங்களுக்கு எடுத்துச்செல்ல முயர்ச்சிகள் செய்து வருகிறோம்.

      நீக்கு