ஆவணப்படுத்தும் நோக்கில் 'இதுவரை நான் மின்னுலாக்கிய அச்சுப் புத்தகங்களின் பட்டியலை பகிர்கிறேன்.
இங்கே துலாவு
சனி, 29 மார்ச், 2025
திங்கள், 21 ஆகஸ்ட், 2023
அன்றுதான் பார்வையற்றோருக்கு புத்தக தினம்
சொற்களின் வழியேதான் ஒரு பார்வையற்றவர் இந்த உலகத்தை அறிந்துகொள்கிறார். அதற்கு, வார்த்தைகளின் வாகனமான நூல்கள் பெரிதும் உதவுகின்றன.
"காவிரி ஆற்றில் பாம்பு போல் நீரலைகள் புரளுகின்றன, நீரானது யானை போல் நகர்ந்து வருகிறது" என்றெல்லாம் )அம்மா வந்தாள்( நாவலில் தீ ஜானகி ராமன் வருணிக்கிறார். அவர் கண்களால் கண்டதை, வார்த்தைகளின் வழியே ஒரு பார்வையற்றவர், நூல் வாயிலாக அதனைத் தரிசிக்கிறார்.
ஒரு பார்வையுள்ளவரோடு நான் ஆற்றிற்குச் சென்றால், ஆறு வந்துவிட்டது என்று சொல்வதோடு அவர் நிறுத்திக் கொள்வார். ஆனால், ஒரு நூலானது அங்குள்ள காட்சிகளைத் தெளிவாக வர்ணிக்கும். அதனால்தான் புத்தக வாசிப்பு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு அறிவை பெருக்குவதோடு, இந்த உலகைக் கண்டுணரவும் வழிவகை செய்கிறது. இப்படி பெரும் பயன் தரும் புத்தக வாசிப்பு, அவர்களுக்கு எளிதில் கிட்டுவதில்லை.
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் மிகச் சில நூல்கள் பிரேயிலில் வந்தாலே பேரதிசயம். இன்று ஒரு சதவீதம் நூல்கள் ஒளி நூலாக வருகின்றன என வைத்துக்கொள்ளலாம். ஐந்து சதவீத நூல்கள் மின்னூலாகத் தோராயமாக வருகின்றன என வைத்துக் கொள்வோம். சுமார் 90% நூல்கள் பார்வையற்றோர் சுயமாகப் படிக்கும் வகையில் வருவதில்லை என்பது மிகப்பெரிய அறிவு புறக்கணிப்பு.
இத்தகைய புறக்கணிப்புகள் இருந்தாலும் பார்வை மாற்றுத் திறனாளிகள் நூல்களை வாங்கவே முயல்கின்றனர். அந்த நூல் வாங்கும் படலமுங்கூட மிகத் துயர் மிகுந்ததாகவே
செவ்வாய், 13 டிசம்பர், 2022
நான் வாசித்த புத்தகங்கள்
ஆண்டுதோரும் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியலை இப்பதிவில் பார்க்கலாம். 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் முகணூலில் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தேன். அது பலருக்கும் பயன்பட்டதாக கூறினர். இணைய உலகினர்கள் இலகுவாக அறியும்
செவ்வாய், 23 ஏப்ரல், 2019
கண் தெரியாத இசைஞன்
வியாழன், 13 ஆகஸ்ட், 2015
எட்டா கனிகளும் கிட்டாத ருசிகளும்:
தமிழ் நமக்கு சோருபோடும்;
குழம்பு ஊத்தும் என புழம்பிக்கொண்டிருக்கும் தமிழர்களே!
வயிற்றுப்பசியை தீற்கவும் அறிவு பசியை தீற்கவும் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
நான் இன்று வயிற்று பசிபற்றி பேச வரவில்லை.
அறிவு பசி பற்றி வினவ வந்திருக்கிறேன்.
பார்வையற்றோர் என்று 3 கோடி பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.
பள்ளிகலிலும், கள்ளூரிகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும், இன்னும் பல இடங்களிலும் நீங்கள் கண்டு கடந்து
