இங்கே துலாவு

வியாழன், 21 செப்டம்பர், 2017

இன்றிரவே நான் துயரமான வரிகளை எழுதக்கூடும்

இன்றிரவே நான் துயரமான வரிகளை எழுதக்கூடும்.
மாலையிலிருந்து மனசு சரியில்லை;
நண்பர்களிடம் பேசப்பிடிக்கவில்லை.
சூரியன் மறைந்தது;
 ஆகாயம்,
 நட்சத்திரங்களால் நிறைந்தது.
இரவிலாவது வருமென
எதிர்பார்த்தேன்!
இன்னும் வரவில்லை.
ஆந்தை அலறியது
குடுகுடுப்பை சொன்னான்
நல்ல காலம் பிறக்குது என.
காலையிலாவது வருமென கண்மூடினேன்.
காகம் கரைந்தது;
நிலமும் தெளிந்தது;
மலர்கள் அழகாய் மலர்தது;
கதிரும் கிழக்கே எழுந்தது.
கல்லூரி செல்ல,
பணிக்கு செல்ல
மனிதர்கள்,
பரபரப்பாய் இயங்கத்தொடங்கினர்;
நானோ,
அதை நினைத்து எங்க தொடங்கினேன்.
கைபேசியை கையோடு வைத்துக்கொண்டேன்
அறிவிப்பு ஒலி வரும்போதெல்லாம்
ஆர்வமாய் பார்த்துக்கொண்டேன்.
இன்னும் வரவில்லை உன்னிடமிருந்து ஒரு வணக்கம்.
வகுப்பறையில் பேசாது;
வாட்சாப்பில் பேசி வளர்க்கத்தொடங்கினோம் காதலை.
நேற்றிலிருந்து உன்னில் ஒரு மாற்றம்;
நான் யாருடன் பேசியது குற்றம்?
இப்போதுதான் காதலின் முதல் படியில் ஏறத்தொடங்கி இருக்கிறேன்
 இறக்கிவிட்டு  சென்றுவிடாதே.
மாலைக்குள் வணக்கம் அனுப்பி
என் வாழ்வை வசந்தமாக்கு!
இல்லையெனில்,
இன்றிரவே நான் துயரமான வரிகளை எழுதக்கூடும்.