இங்கே துலாவு

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

உடையும் வின்பம்+

பெண்களுடன் பேசுவது பெருங்குற்றம். என்று சொல்லும் பள்ளியில் படித்தவன் நான். தப்பித்தவறி ஒரு பிள்ளை பேசிவிட்டால், அது ஒன்னோட அளுதானே? என்று பையன்கள் கலாய்த்துவிடுவார்கள்.
ஒரு பையனிடம் ஒரு பிள்ளை பேசுகிறதென்றால் காதல் என்றுதான் நாங்கள் நம்பினோம். நான், வேறு நல்ல பையன் என்று பெயரெடுத்திருந்ததால், பெண்களுடன் பேசுவதை தவிர்த்தே
வந்தேன். கேப்ரங்ஹால், மங்கையர்க்கரசி, பள்ளிகளிலிருந்தும், லேடிட்டோ கல்லூரியிலிருந்தும் பிள்ளைகள் எங்களது நிருவனத்திற்கு வாசித்துக்காட்ட வருவார்கள். நாளை
வாசித்துக்காட்ட வருகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததுமே நாங்கள் வானத்தில் பரப்போம். அந்த புள்ளங்ககிட்டே புக்கக்கொண்டுபோய் கொடுத்து கொரஞ்ச நேரம் வாசிக்கச்
சொல்லிட்டு. நீண்ட நேரம் கதை பேசனும் என்று கிழம்பும் கூட்டத்தில் நானும் ஒருவனாக கிழம்புவேன். பார்வை விண்ணை அலந்தாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடு
தான்! என்பது போல், பிள்ளைகள் கூட்டத்திற்குள் சென்றதுமே; வார்த்தைகல் வர மருத்துவிடும். பின் கொண்டுபோன புத்தகத்தை முழுமையாக படித்துவிட்டுத் திரும்பிவிடுவேன்.
இது நமக்கு ஒத்துவராது என்று அந்த கூட்டத்தைவிட்டும் விழகிவிட்டேன். பயகலோட கும்மியடித்துக் கொண்டிருந்த எனக்கும் முதுகளை வகுப்பு ஒரு பெரிய டுவிஸ்ட் வைத்திருந்தது.
அந்த வகுப்பில்நான் ஒருவன் மட்டுமே ஆண் பிரதினிதி. புது இடம்வேறு ஒன்றும் தெரியாது. பொண்ணுக கிட்டே எப்படி உதவி கேட்கிறதுங்கிற தயக்கம். ஆனால், என்னை நல்லாவே
பாத்துகிச்சுங்க! எங்கு எப்படி போகனும் என்பதை எள்ளாம் கூட்டிச் சென்று காட்டி எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துச்சுங்க. கல்யாணம், காதணி விழா, திருவிழா, போன்றவைகளுக்கு
எனது குடும்பத்தினரோடோ, மிகவும் நெருக்கமான நன்பர்களோடோ மட்டுமே செல்வேன். வேறு நபர்களோடு செல்வதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். ஏனெனில், கூட்டங்களுக்குள்
செல்லும்போது நாம் அவர்களுக்குச் சுமையாகத் தெரியக்கூடும். ஆனால், என் வகுப்பு பிள்ளைகளோடு, எள்ளாவற்றிற்கும் சென்றிருக்கிறேன்! எனது வகுப்பு பொண்ணின் கல்யாணத்திற்கு;
எங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் கிழம்பினர். இந்த கிப்ட கொடுத்திருங்க என்று பிள்ளைகளிடம் கொடுத்தேன். நீங்க வர்லயாண்ணெ என்று கேட்டுச்சுங்க. முடிஞ்சா வருரேன்
என்றேன். கூட்டிக்கிட்டுப்போக யாரு இல்லன்னுதானே வரலங்கிறீங்க. நாங்க கூட்டிக்கிட்டு ப்போக மாட்டோமா? என கேட்ட பிள்ளங்க நாளக்கி கெழம்பி வாரீங்க வரளேன்னா வீட்டுக்கே
வந்து கூட்டிக்கிட்டு போவோம் என்று சொல்லுச்சுங்க. 5 பொண்ணுங்களோட ஊரு எங்க ஊரத்தாண்டி தான் இருக்கு. அதுனால அதுக வீட்டுக்கே வரவுங்கூடும் என்பதால் கிழம்பிச்சென்றேன்.
ஆண் நன்பர்களோடு செல்லும்ப்போது ஏற்படும் இனக்கத்தை அப்பில்லைகளோடு செல்லும்போதும் உணர்ந்தேன். பின் பல பயனங்கள் என் வகுப்புத்தோழிகளோடு சென்றேன்.அவை எள்ளாம்
மிகவும் நெகிழ்ச்சியான தருனங்களாய் நிழலாடுகின்றன. பெண் என்றதுமே காதலி என்ற வின்பம் மட்டுமே என் மனதில் எழும். ஆனால், முதுகளை வகுப்புகள் தோழிகளையும், அவர்களது
தோழமை உணர்வுகளையும் எனக்கு அடையாலம் காட்டின! #முதுகளைநினைவுகள்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

சீரியல் கொடுமை

நேத்து கல்லூரியிலிருந்து விடுமுறைக்காக வீட்டுக்கு கிழம்பினேன். அப்போது வகுப்பிலிருந்த புள்ளங்கெல்லாம் போகாதிங்கன்னா என்றனர். இன்னக்கி வேண்டாம் நாளைக்கி
போங்கண்ணா என்றது ஒரு புள்ள. இன்னொரு புள்ள வகுப்பின் வாசல மறைச்சுக்கிட்டு நான் வழிய விடமுடியாது என்றது. இப்படி படிப்பு மேல பொறுப்பில்லாம வீட்டுக்கு கேலம்புறது
சரி இல்லன்னா என்று அக்கறையாய் கண்டித்தது ஒரு புள்ள. இப்படி அக்கறை என்னும் சக்கரையை வகுப்பில் உள்ள புள்ளங்கெல்லாம் என் மேலே கொட்ட; பெருமையில் வானத்தில்
பரக்கத்தொடங்கினேன்! ஒரு ௧௦ அடி மேலே சென்றிருப்பேன், அப்போது இன்னொரு புள்ள கேட்டது. ஏன்னா இப்பவே கட்டாயம் வீட்டுக்கு போயியாகனுமா? பிளிச்ன்னா நாலக்கிப்போங்களே.
அதற்கு நான் நாளை bus கூட்டமா இருக்கும் என்னால எடம் பிடிக்க முடியாது என எனது பிரச்சனையை சொன்னேன். அப்போது, புள்ளங்கெல்லாம் சோகமாய் சொன்னுச்சுங்க; நீங்க
செல்ல கொண்டுட்டுப்போய்ட்டா எப்படின்னா நாங்க ராஜா ராணி சிரியல் பார்க்கிறது? அதை கேட்டதும், பெருமையில் ஆகாயத்தில் பரந்த நான்; இடறி, பாதாளத்தில் விழுந்தேன்!
#எம்பில்அப்டேட்

வியாழன், 25 ஜனவரி, 2018

பா.ஜா.க. பாறைகள்

இரு தேசபக்தால் பேசிக்கிறாங்க, 1: மோடிய திட்டி பல வேப்சைடுலேளிருன்து லிங்க் எடுத்துப்போட்டு ஆதாரத்துடன் கட்டுரையை எழுதி பெச்பூக்குல போட்டுருக்காங்க. அதுக்கு
பதிலடி கொடுக்க காங்கிரசோட ஊழல்களா அம்பல படுத்துற வெப்சைட் லிங்கெல்லாம் திரட்டி ஒரு கட்டுரை எழுதலாமுன்னு இருக்கேன். 2: எதுக்கு இவ்வளவு கச்ட்டப்படுற? எனக்கு
அந்த போட்டோசாப் லிங்க் மட்டும் அனுப்பி வை!

புதன், 24 ஜனவரி, 2018

பார்வெட் மெசெஜ் பறிதாவங்கள்

எனது செல்லிடப்பேசி பழுதாகி ஒரு வாரமாக என்னால் பயன்படுத்த இயலவில்லை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்துபார்த்தேன். கடுமையான அலசலுக்குப்பின் அதை
கண்டுபிடித்துவிட்டேன். எங்க கிலாஸ் புள்ள ஒன்னு வாட்சாப்புல ஒரு மெசேஜ் அனுப்புச்சு. இது வினாயகரின் பெயர்கள் இதை 20 பேருக்கு பார்வேடு செஞ்சா வரும் ஞாயிறுக்குள்
நல்ல செய்திவரும். இல்லையென்றால் கெட்டது நடக்கும். நா பெரியார் கட்சி அத யாருக்கும் பார்வேடு செய்யல! ஆனா, சரியா ஞாயிறு அன்று செல் பழுதாகிப்போனது! இப்போ அந்தப்புள்ளைக்கி
செய்வினை வைக்கலாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நம்ம வாட்சாப்புக்கு அந்த ஒரு புள்ள மட்டுந்தான் மெசேஜ் அனுப்புது. அதுக்கும் ஆப்பு வச்சா; புள்ளைங்க மெசேஜ்
இல்லாம எனது வாட்சாப் வரண்ட பாலையாகிவிடும்! இப்படித்தான் ஒருமுரை, ஒரு காதல் வாசகத்தை அனுப்பி; இதை 10 பேருக்கு பார்வேடு செஞ்சா; ஒங்க காதலி இடமிருந்து நல்ல
செய்திவரும் என்று சொன்னாங்கெ. நானும் பார்வேடு செஞ்சேன். அதிசயமா நல்ல செய்தி வந்திருச்சு! அது என்ன செய்தின்னு கேக்க்ரீங்கலா? [நம்ம லவ்வ பிரேக்கப் செஞ்சிடலாம்]
என, ஏங் காதலி சொல்லிருச்சு! இத டைப்செஞ்சுக்கிட்டிருக்கும்போதே, வாட்சாப் நோட்டிப்பிகேசன் டோன் ஒலிக்கிது. என்னன்னு பார்ப்போம். அந்த புள்ளக்கிட்டேருந்துதான்
மெசெஜ் வந்துருக்கு. அத படிக்கலாமா வேண்டாமா? வேற ஏதாச்சும் அனுப்பி 100 பேருக்கு பார்வேடு செய்யச்சொன்னா? நா வேற இப்பதான் செல்ல சரிபன்னி வாங்கிருக்கேன்!

செவ்வாய், 23 ஜனவரி, 2018

நான் கேட்ட வினா

நா போய் ஒரு புள்ளைக்கிட்ட, [நான் உன்னை காதலிக்கிறேன்] என்று சொன்னேன். உடனே அந்தப் புள்ள, என்ன தயிரியம் உனக்கு? என்னோட ஸ்டேடஸ் தெரியுமா? உடனே நான் கேட்டேன்,
ஒன்னோட வாட்சாப் நம்பர்கொடு பாத்துட்டு சொல்லுறேன் என்றேன்.

திங்கள், 22 ஜனவரி, 2018

கலர்ஃபுல்

நான் m.a. படிக்கும்போது, பரிச்சை எழுத எனது மாமா மகளை கூட்டி போனேன். பரிச்சை ஹாலில் அந்தப்புள்ள எழுதும்போது, இதுக்கு என்ன கலரு யூஸ்பன்ன? இந்த பாயிண்டுக்கு
என்ன கலர் யூஸ்பன்ன? என்று பரிச்சை வினாவை விட அதிக வினாவை கேட்டது. எனக்கு பரிச்சை எழுதியவர்களெல்லாம், நான் சொன்னதை எழுதுவார்கள்; எழுதாமல் விடுவார்கள். ஆனால்,
இந்ந்தப்புள்ள பாத்து பாத்து டெக்கரேசன் செஞ்சது. அந்த நேரத்துல ஆனந்த கண்ணீரே வந்துரும்போல இருந்தது. பரிச்சப்பேப்பர திருத்திட்டு வாத்தியார் கேட்டார், என்ன
சக்தி விடைத்தாள் கலர்ஃபுள்ளா இருக்கு? என்னோட மாமா பொண்ணு தான் பரிச்ச எழுதித்தந்துச்சுய்யா. உடனே அவர், அப்போ அப்படித்தான் இருக்குமென்றார்.
 #மாமாபொண்ணுநினைப்புகள்

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

கைகோர்த்து நடப்பேன்

எனது அம்மாவும் அப்பாவும், பலருக்கு பொண்ணு/மாப்பிலை பார்த்து திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். எனது அப்பா சொன்னார், ஊருல உள்ளவங்களுக்கெள்ளாம் கல்யானம்
பன்னி வைக்கிறோம்; நம்ம பயலுகளுக்கு எப்படிப்போய் பொண்ணு கேட்க போரோமுன்னு தெரியலை?என வருந்தினார். ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களின் மனக்கவலையாக இது
இருக்கிறது. உடனே எ அம்மா சொன்னார், நீங்களே பொண்ணு பாத்துக்கிட்டு வந்துருங்க. நாங்க கல்யானத்த பன்னி வைச்சுருறோம், . அதற்கு நான், கண்ணு தெரியாத ஒரு பொண்ணத்
தான் கூட்டிக்கிட்டு வருவேன் சரியா? அதற்கு அவர்கள், ஒன்ன அங்க இங்க கூட்டிக்கிட்டு பொரமாதிரியும், ஒன்ன பாத்துக்கிறமாதிரியும் ஓங்கூட படிக்கிறதுல ஒரு நல்ல
பொண்ணா பாத்துக் கூட்டிக்கிட்டு வா என்றனர். அவர்களுக்குக் கூட ஒரு பார்வையற்ற பெண்ணை ஏத்துக்கொள்வதில் தயக்கமிருக்கிறது. அதுபோன்ற பல் மடங்கு தயக்கம் எனக்கு
பெண்கேட்டுப் போகும் வீட்டாரிடம் இருப்பது இயல்புதானே. செரி எனது பெற்றோரின் ஆசையை நிரைவேற்றுவோம் என நினைத்தாலும்; பார்வையற்றொரின் வாழ்வியலை புரிந்துகொண்டு
அதற்கு ஏற்றார் போல் பழகும், எனக்குப் பிடித்த பெண்ணை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. அதுவரை எனது கற்பனைக் காதலியுடன் கைகோர்த்து நடப்பேன்; கனவுகளிலும், கவிதைகளிலும்.

சனி, 20 ஜனவரி, 2018

பார்வையற்றவனின் துயரம்:

 நான் தனியே நடந்தேன்;
 இடரி விழுந்தேன்;
 காலயும் கையையும் சிராய்த்துவிட்டது.
 எழுந்து நடந்தேன்;
 கம்பியில் இடித்தேன்;
 நெற்றியில் பெரிதாய் காயம் பட்டது.
 காயங்களில் இரத்தம் சொட்ட உடல் வழித்தது தாங்கிக்கொண்டேன்.
 பேருந்தைக் கண்டடய;
 பொது இடத்தில் கழிப்பிடத்திற்கு சென்றுவர;
 புது இடத்திற்கு போய்வர;
அசையின்மெண்ட் எழுத;
 புத்தகம் படிக்க;
 பிறரிடம் உதவி கேட்கும்போது
 மனம் வளித்தது தாங்க முடியவில்லை.
 சார்ந்திருத்தல் என்பது பெரும் ரனம்
 அதை விங்ஞானம் ஒருநாள்
விரட்டிவிடும்!

வெள்ளி, 19 ஜனவரி, 2018

செயல்வழி கற்றல்

ஒருமுர எங்கள் வகுப்பை ஜின்னா சாரிடம் அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது வரலாறு தொடர்பாக ஒரு வினாவை ஒரு பையனிடம் கேட்டார். அதற்கு அவனுக்கு விடை தெரியவில்லை.
உடனே அவனைத் திட்டாது; என்னப்பா பாடம் எடுக்குரீங்க? என்று ஆசிரியர்களை கடிந்துகொண்டார். பாடமெடுக்கும்போது மாணவனுக்கு பிடிச்ச மாதிரி எடுக்கனு என்றார். வரலாற்று
இடங்கலெள்ளாம் வருரது போல ஒரு பாட்டு இருக்குது அது என்ன பாட்டுன்னு தெரியுமா என கேட்டார். ஆசிரியர்கள் யாரும் வாய் திரக்கவில்லை. உடனே இவனே நீ சொல்லுடா என்றார்.
அந்த இவன் நாந்தான் உடனே வரிகளைச்சொல்லத் தொடங்கினேன். முன்னழகு தஞ்சாவூரு பின்னழகு தாஜுமஹால் கட்டழகு மைசூர்மஹால் காலழகு குதுப்பினார். மச்சமேனி பாக்கும்போது
கட்சத்தீவுதான். நீ, மாநகரம், இல்ல தலைநகரம் அந்த கெஸ்மீர் முதல் கன்னியாகுமரி எல்லாம் உன்னோட. இது போல மாணவர்களுக்கு பிடிச்ச பாட்டெள்ளாம் சொன்னா அவன் எப்படி
மரப்பான் என்றார். நான் k.k.நகரில் வேலைப்பார்க்கும்போது, ஒரு பையனிடம், 5-இல் 3 போனால் எத்தனை எனக்கேட்டேன். அவன் விடை தெரியாமல் விழித்தான். அடுத்த நாள் அந்தப்பையன்,
மிட்டாய் வாங்கனும் காசு கொடுங்க சார் எனக்கேட்டான். நான் 2 ரூ. கொடுத்தேன். உடனே அவன் சொன்னான், ஒங்ககிட்ட 5 ரூ. கொடுத்து வச்சுருந்தேன் சார். இப்போ 2 ரூ.
வாங்கிட்டேன். என்னோட காசு இன்னும் 3 ரூ. ஒங்க கிட்ட இருக்குது சார் என்றான். இதை சொல்லிய அவர் பணமென்றவுடன் கணக்கை சரியாக பயன்படுத்துகிறான். கணக்குப்பாடமென்று
வரும்போது, இதே கணக்கு சிறமமாய் இருக்கிறது. நீங்களெள்ளாம் மாணவனுக்கு பிடித்தது போல பாடம் எடுங்கப்பா என்றார். ஜின்னா சாரிடம் சொல்ல கதைகள் ஏராலமிருந்தது.
பார்வையற்றோர் கல்விகுறித்து விரிந்த சிந்தனையை அவர்கொண்டிருந்தார். இதை அவரைச்சந்தித்த சில தருனங்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், மாணவர்கள் அதிகம் நன்கொடையாளர்களுக்கு
நன்றி சொல்லும் வரவேட்பு உரையையும், தலைமையுரையுமே கேட்கும் துர்பாக்கியத்தை பெற்றுவிட்டோம் என்பதில் வருந்துகிறோம்.
 #ஜின்னாசார்நினைவலைகள்

வியாழன், 18 ஜனவரி, 2018

பயணக்கொடுமை

பல ஊர் செல்லும் பேருந்துநிருத்தத்தில் நிற்கும்போது பெண்களின் குரலை கவனிப்பதுண்டு. அதில் இனிமையான குரலை ரசிக்கலாம் என்பது ஒரு நோக்கமாக இருந்தாலும் பெண்கள்
எந்தந்த ஊர் செல்லும் பேருந்துகள் வருகிறது என சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதுவும் ஒரே வகுப்பை சேர்ந்த பெண்களாய் இருந்தால் ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு கதையை
வேறு சொல்வார்கள். அதனால் எனது ஊர் செல்லும் பேருந்துகளில் சரியாக ஏறி பயன்பெற்றதுண்டு. நடந்து செல்லும்பொது என்னைப்பற்றி பின்னால் வருபவர்கள் பேசிக்கொள்வதை
கவனிக்கும் பழக்கம் எனக்குண்டு. அதில் பார்வையற்றவர்கள் எப்படி தனியே நடக்கின்றனர், என்பது பற்றி நானே வியக்கும் வகையில் புதுப்புது விளக்கங்களை சொல்லுவார்கள்.
அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு நூலாகவே எழுதலாம். அது இல்ல நான் சொல்ல வந்த மேட்டர். நான் நடந்து போகும்போது என் பின்னால் வரும் பெண்களை பற்றி சொல்கிறேன். என்னது?
உன் பின்னால் பெண்கள் வருகிறார்களா என நினைத்து வயிறேரிய வேண்டாம் ரோட்டில் நடக்கும்போது பின்னால் என்திளைகளும் வரும் எருமை மாடும் வரும். அந்த பெண்கள் இப்படி
பேசிக்கொள்வார்கள். கம்பி இருக்குது மோதப்போராங்கடி, அதற்கு பக்கத்திலிருக்கும் பெண் சொல்லும். ஆமாடி! கம்பி இருக்குது மோதப்போராங்கடி. அப்புறம் மெதுவான குரலில்
ஐயோ, பாவம், என்றெல்லாம் சொள்ளத்தொடங்குவார்கள். பெண்கள் துயரப்பட்டா என் மனது தாங்காது. நான் கம்பியில் மோதாமல் சென்றால் அவர்கள் துயருற மாட்டார்கள் என்று
சிறுது இடப்புறம் நகர்ந்து நடந்தேன். அப்போதுதான் அக்கம்பி எனது நடு நெற்றியில் மோதியது. அப்போது அப்பெண்கள் பெரிதாய் இரண்டு உச்சுக்களை கொட்டிவிட்டு கடந்து
சென்றனர். நெற்றியை தேய்த்தபடி நின்று கொண்டே நினைத்தேன்; அந்த பெண்கள் பேச்சை கேட்காமல் நடந்திருந்தால் அக்கம்பி எனது சட்டையில் மட்டும் உரசிய படி சென்றிருந்திருக்கும்.
இன்னொரு சூழலில், அவர்கள் பேச்சை கணக்கில் எடுக்காது நேரே சென்று மோதியதும் உண்டு. இதன் காரணமாகவே நடக்கும்போது பெண்களின் பேச்சைக் கேட்டு பயப்படுவதுமுண்டு.

புதன், 17 ஜனவரி, 2018

பாரா ஒளிம்பிக்

    ஊடக வளர்ச்சியாலும் செய்திகளின் தேவை அதிகரிப்பாலும் இம்முரை நடந்த பாரா ஒளிம்பிக் பெரும் கவனம் பெற்றது.
பாரா ஒலிம்பிக்குக்கான விதை 1948-இல் லண்டனில் நடந்த ஒளிம்பிக் போட்டியின் போதே ஊண்றப்பட்டது.
அப்போட்டியில் கை கால் ஊனமுற்றோருக்கான போட்டி தனியே நடத்தப்பட்டது.
 1960-இல் உத்தியோகபூர்வ பாரா ஒளிம்பிக் போட்டிகள் ரோமில்  நடத்தப்பட்டது.இப்போட்டிகளிலும் கை கால் ஊனமுற்றோர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் 43 நாட்டைச்சேர்ந்த
400 வீரர்கள் பங்கேற்றனர்.
கோடைகால ஒளிம்பிக் குளிர்கால ஒளிம்பிக் என இரு ஒளிம்பிக்குகள்ள் நடத்தப்படுகிறது.
 குளிர்கால பாரா ஒளிம்பிக் 1976-இல் முதல் முரையாக சுவீடனில்  நடத்தப்பட்டது.
இப்போட்டிகளை சர்வதேச பாரா ஒளிம்பிக் சம்மேலனம் நடத்துகிறது. இதன் தலைமையகம் ஜெர்மனியில் உள்ள பார்ன் நகரில் உள்ளது.
இது பல்வகையான ஊனமுற்றோர் விளையாட்டு சம்மேலனங்களை உள்ளடக்கிய அமைப்பாகும்.
1976-இல் தான் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொள்ளுமாரு விதிகள் அமைக்கப்பட்டது.
 1980-இல் மருத்துவரீதியான ஊனத்தின் தன்மைகள் அளக்கப்பட்டு விதிகள் திருத்தப்பட்டன.
அதன்படி  10 வகையான ஊனமுற்றவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதில் 8 வகையான ஊனங்கள் தசை குரைபாடுகளைக்கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.
 கோடைகால  ஒளிம்பிக்கில் 22 வகையான போட்டிகளும் குளிர்கால ஒளிம்பிக்கில் 5 வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
1988-இல் ஒளிம்பிக் போட்டிகளுடன் சேர்த்தே பாரா ஒளிம்பிக்கையும் இனைத்து நடத்தத்தொடங்கினர். 2001-இல் ஒளிம்பிக் சம்மேலனமும் பாரா ஒளிம்பிக் சம்மேலனமும் ஒப்பந்தம்
செய்துகொண்டது. இதன்மூலம் நிதி வளங்களை  இரண்டும் பகிர்ந்துகொள்ளும்.
2008-இல் நடந்த பெய்ஜிங் பாரா ஒளிம்பிக்கில் 126 நாட்டைச் சேர்ந்த 3000 வீரர்கள் கலந்துகொண்டனர் இதுவே அதிக மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட ஒளிம்பிக் போட்டியாகும்!

 பார்வையற்றவர்கள் என்னென்ன போட்டிகளில் பங்கேற்களாம் என பார்ப்போம்!
தடகலம் இப்பிரிவில் உள்ள ஓட்டப்போட்டிகள், வட்டெரிதல், குண்டெரிதல், ஈட்டி எரிதல், நீலம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், என சகலப்போட்டிகலிலும் பங்கேர்க்கலாம்.
பலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், அம்பெய்தல், ஜூடோ, நீச்சல், மிதி வண்டி பந்தையம், போன்ற போட்டிகளிலும் பங்கேற்கலாம்.
இவற்றில் பிர மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ப்பர்.
 பார்வையற்றோருக்கான பிரத்தியேக விளையாட்டுகள்:
 5  பேர் கொண்ட கால்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், ஏர்ஹாக்கி, 9ஸ்பின் பவ்லிங் [Nine-pin bowling}, 10ஸ்பின் பவுலின் [Ten-pin bowling], குரிப்பிட்ட இலக்கை
நோக்கி எரியும் கோல்பால் [golball], டோபால் [torball],பொன்ற போட்டிகளும்;
குளிகால ஒளிம்பிக் போட்டிகலான பனிச்சருக்கு அதனுடன் தொடர்புடைய போட்டிகள் என பார்வையற்றோருக்கான போட்டிகள் வரையருக்கப்பட்டுள்ளது. குரைப்பார்வை உடையவர் [partialy
blind], முழுப்பார்வையற்றவர் [totaly blind], என பார்வையற்றவர்கள் 2  பிரிவாக பிரிக்கப்படுகின்றனர். ஓட்டப்போட்டிகளில் குரைபார்வையற்றோர் உதவியுடன் முழுப்பார்வையற்றோ
கலந்துகொள்கின்றனர். கால்பந்தாட்டத்தில் ஒரு பார்வையுள்ள நபரும் கலந்துகொள்ள அனுமதியுண்டு.

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

காதலிகளுக்கு மத்தியில்

கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவளியால் பீடிக்கப்பட்டு; கடும் துயரத்துடன் பாயில் படுத்துக்கிடக்கிறேன்.
வெரிச்சோடி இருந்த அரையில் பூக்களின் வாசம் பரவத்தொடங்கியது.
எனது சொந்தக்காரர்களில் யாரேனும் வருவார்கள் என எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.
ஆனால்,நடந்ததோ வேரு! எனது முன்னால் காதலிகள் 5 6 பேரும் ஒரே நேரத்தில்
எனது அரைக்குள் நுழைந்தனர்.  பூக்களின் வாசங்கலால் நிறைந்திருந்த அரை, பூக்களின் நேசங்களாலும் நிறையத்தொடங்கியது.
தொடக்கத்தில் நல விசாரிப்புப் படலங்கள் நல்லபடியாய் போய்க்கொண்டிருந்தது.
அவர்களுக்குள் திடீரென யார் என்மீது அதிக அன்பு காட்டுவது என்ற போட்டி தொடங்கிவிட்டது.
ஒருத்தி வாங்கி வந்த பழத்தை நருக்கி என் வாயில் தினித்தால்,
இன்னொருத்தி டீயில் பிரட்டை நனைத்து ஊட்டிவிடத்தொடங்கினால்,
மற்றொருத்தி ஜவம் செய்யத்தொடங்கி விட்டால்,
எஞ்சி இருப்பவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் அக்கரையை குரலில் கூட்டி மீண்டும் நல விசாரிப்பைத் தொடங்கினர்.
இதனால், எனது தலைவளியும் 2 மடங்காக அதிகரிக்கத்தொடங்கியது.
அவன ஒரேயடியா கொன்னுராதீங்க. காத்துவர வழிவிட்டு தல்லி ஒக்காருங்க, என மிரட்டல் குரலில் எனது முதல் காதலி சொன்னதும்
அனைவரும்  அமைதியாகினர்.
உடனே அமர்ந்த அவள் துப்பட்டாவால் எனது வாயைத் துடைத்தால்.
பின் என்ன் தலையை அவள் மடிமீது தூக்கி வைத்துக்கொண்டாள்.
அச்சமயம் யாரோ முதுகில் குத்தியது போலத் தோன்றியது.
வளியும் பயங்கரமாய் இருந்ததால் பதரியடித்து நிமிர்ந்து உக்கார்ந்தேன்.
அப்போது, எனது சீட்டில் அருகிலிருக்கும் நபர் கத்திக்கொண்டிருந்தார்.
ஒனக்கு எத்தன தடவ சொல்லுறது ஏ மேல தூங்கி விழாதென்னு அதுதான் முதுகுல ஒன்னு வச்சேன் என்றார்.
அப்புரம் என்ன செய்வது எஞ்சிய பயன தூரத்தில் தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு
புதுக்கோட்டையில் வந்து இரங்கினேன்.