இங்கே துலாவு

வியாழன், 18 அக்டோபர், 2018

உங்களுக்கொன்று சொல்கிறேன்


உன் காதல் கவிதைகள் அருமையென
பலர் கைகொடுக்கின்றனர்.
கவிதையில் வரும் காதலி யாரெனக்
கேட்டு பலர் நச்சரிக்கின்றனர்.

புதன், 17 அக்டோபர், 2018

இன்னுங்கொஞ்சம் நீளாதா?

எனது mphil பட்டப்படிப்பை இனிமையாக்கியவர்கள் எனது வகுப்பு இருபால் தோழர்கள். உரிய நேரத்தில் உதவிக்கரங்களை நீட்டி என்னையும் உடனழைத்துச்சென்றவர்கள் அவர்கள்.என்னுடன் படித்த இரண்டு ஆண்களுமே தங்கமான பசங்க. தப்பித்தவறிக்கூட வகுப்புப்பக்கம் எட்டிப்பாத்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தனர். எஞ்சி இருந்த 12 பிள்ளைகளால் நான் பட்டபாடுருக்கே? அதை ஒரு பெருங்காப்பியமாகவே எழுதலாம்.
அன்று ஏகாந்தமாய் என் காதலியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். கொஞ்சக் காலமாகவே எங்களுக்குள் எந்தச் சண்டையுமில்லாமல் சுமுகமாய் போய்க்கொண்டிருந்ததால் மகிழ்ச்சியில் வானத்தில் மிதந்துகொண்டிருந்தேன். வேகமாய் வகுப்பிற்குள் நுழைந்த பிள்ளை ஒன்று செல்லக்குடுண்ணே, அவசரம் செல்லக்குடுண்ணே எனக்கேட்டவாறே; கையிலிருந்து செல்லை பரித்துப் பேசிக்கொண்டிருந்த அழைப்பையும் துண்டித்துவிட்டது. ஏதோ முக்கியமான விசயமா பேசனும்போல என நினைத்தேன். யாருடனும் பேசாமல் செல்லைத் திருப்பிக்கொடுத்தது. எதற்குச் செல்ல வாங்கின எனக் கேட்டேன். செல்லு புதுசா இருக்குள்ள அதுனால முகம்பாக்க வாங்கினேன் என கூலாக பதில் சொல்லிவிட்டுச் சென்றது.
இப்பதிலைக் கேட்டதும் எனக்குக் கோபம் வந்தாலும், எனது காதலியை நினைத்ததும் கை காலெல்லாம் நடுங்கத்தொடங்கியது. மீண்டும் காதலிக்கு அழைப்பெடுத்தேன். மறுமுனையில் அவள், என்னோட பேச்சு ஐயாவுக்குப் போரடுச்சுருச்சுபோல? ஒங்க கிலாஸ் புள்ளங்கெ வந்ததுமே கட்பண்ணுரல்ல. இனி அந்த புள்ளங்கெளோடயே பேசிக்கோ எனக்கு ஃபோன்செஞ்சுறாத. எனக்குப் பேச வாய்ப்புக் கொடுக்காமலேயே அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
யாருக்காவது தொலைபேசி பேச வாங்கிருந்தாவது என் மனசு ஆரியிருக்கும். ஆனா, முகம் பார்க்குறதுக்காக, என்னோட காதலுல வெளயாண்டத நெனச்சாதான் துக்கம் தொண்டையை அடைத்தது. என்னுடைய இடைவிடாத போராட்டத்தால் 3 மாதங்கள் கடந்த பிறகே அவள் பேசத்தொடங்கினால்.
அண்ணே நானே சமச்சது. நல்லாவே இல்ல சாப்புட்டுப்பாருங்களே எனச்சொல்லி கொண்டாந்து கொடுத்தது ஒரு புள்ள. ஹாஸ்ட்டல் சாப்பாட்டைவிட கொடுமயாவா இருக்கப்போகிறதென்று வாங்கினேன். முதல்வாய் எடுத்துவைத்த போதே என் எண்ணமெல்லாம் தவிடுபொடியானது. உலகத்தில் இத்தனை கொடூரமாகவும் சமைக்கமுடியும் என அவ்வுணவு உணர்த்தியது. என்னால சாப்பிட முடியல போய் கொட்டிடுவோம் என்றேன். அதுக்கு அந்தப் புள்ள சீரியஸ்சா ஒரு தத்துவம் சொன்னுச்சு, இந்த உலகத்திலேயே எனக்குப் புடிக்காதவங்க யாருன்னா? சாப்பாட்டை வேஸ்ட்டாக்குறவங்கதான் என்றது. அப்படியா? நல்லதாப்போச்சு என்றபடி சாப்பாட்டைக் கொட்டிவிட்டு வந்தேன்.
வகுப்பிற்குள் வந்ததும் மற்ற பிள்ளைக சொல்லுதுக, உங்களுக்குச் சகிப்புத்தன்மை அதிகந்தாண்ணே. அந்த சாப்பாட்டை 3 வாய் சாப்புட்டிங்களே! எனச்சொல்லிக் கிண்டல் செஞ்சுதுங்க.
இன்னொருநாள், அறுமையான சாப்பாட்டை வகுப்பிற்குக் கொண்டுவந்திருந்தது ஒரு புள்ள. அதன் வாசனயே சாப்பிட வாங்க என அழைத்தது. மதிய உணவு இடைவேளையில் அந்த புள்ளயிடம் நானும் சாப்பிட வரவா எனக்கேட்டேன். முன்னமே கேட்டுறுக்கக்கூடாதா? நான் சாப்பாட்டுல கைவச்சுட்டேனே எனச்சொல்லியவாறே அப்போதுதான் டிப்பன்பாக்சைத் திறந்தது. மற்ற பிள்ளைகளெல்லாம் ஓகோ அப்படியா? எனச் சொல்லி அந்தப் புள்ளயை ஓட்டத்தொடங்கினர்.
இப்படிப் பல இனிய நினைவுகளைக் கொடுத்த, உங்களுடனான ஓராண்டு mphil பயணம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைக்கும்போது, இப்பயணம் இன்னும் கொஞ்சம் நீளக்கூடாதா என ஏக்கம் பிறக்கிறது. உங்களுடனான இனிய நினைவுகளும், உங்கள் மீதான நேசங்களும் என்றும் என் நெஞ்சிலிருக்கும்.

செவ்வாய், 16 அக்டோபர், 2018

இளையராஜா என்ன தொக்கா?


இது ஒரு சுய தம்பட்ட பதிவு என்பதைக் கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

2012 அன்று இதே நாள் பத்திரிக்கையாளர் மாலனை சந்தித்தேன். புதிய தலைமுறை செய்தியாளர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்வை நடத்தியது. எனவே செய்தியாளர்களை தெரிவுசெய்வதற்கான  நேர்முகத்தேர்வு நடத்த அவர் வந்திருந்தார். கட்டுரை எழுதுதல், பொது

திங்கள், 15 அக்டோபர், 2018

வெண்கோலின் வரலாறு history of white cane

சின்ன வயசுல எங்க அம்மா சொல்லுவாங்க, பெரிய பையனா ஆன பொறவு அந்த குச்சிய வைச்சுக்கிட்டு நடக்கக்கூடாது. அத பாக்க அசிங்கமா இருக்கும். இப்போதெல்லாம் நான் எங்கு பயணம் புரப்பட்டாலும், மரந்துரலயே அந்த குச்சிய எடுத்துவச்சுருக்க தானே?