இங்கே துலாவு

வெள்ளி, 16 அக்டோபர், 2015

நான் ரசித்த அழகு!

வானவில் அழகை வர்ணித்தான்;
நான் அமைதியாய் இருந்தேன்.
பௌர்னமி அழகை பாராட்டினான்;
நான் மௌனமாய் இருந்தேன்.

பருவப்பெண்கள் அழகென்றான்;
நான் பதில் பேசவில்லை.
பசுமையான தாவறங்களென்னே அழகு!
காண கண்கோடி வேண்டுமென்றான்;
நான் கண்டுகொள்ளாமல் இருந்தேன்.
கடலில் அலை எழுவதை பார்!
அது கவின் மிகு காட்சி என்றான்;
எவ்வித சலனமும் என்னிடமில்லை.
ிதழ் விரித்த மலர்கள்;
குழந்தையின் குருநகை முகம்;
விண்ணில் தவழும் நட்சத்திரம்;
காலை கதிரவனின் காட்சி;
இன்னும் நீண்டது அவன் பட்டியல்
எள்ளாம் எவ்வளவு அழகு என வியந்து சொன்னான்.
நான் எதுவும் சொல்லவில்லை.
ரசனை கெட்டவனே வாயைத்திர!
என கோபமாய் கொந்தலித்தான்.
நான் அவனிடம் கேட்டேன்;
உன் மனைவியை விட
கதானாயகிகள் அழகுதானே?
ஆமாம் என்றான்.
உனது ரசனையை விட என் ரசனை
கீழ்த்தரமானதில்லை என்றேன்.
கண்களை மூடு;
ஏன்? எனக்கேட்டான்.
இருள் மிகவும் அழகானது என்றேன்.
கவர்ச்சி கரைந்து
அறிவு அம்பலப்படுத்திக்கொள்ளும் இடம்.
எப்போதும் நீங்கள் வெளிச்சத்தைக் கொண்டு
 இருளை விரட்ட  நினைக்கிறீர்கள்;
இப்போது அமைதியாய் அவநிருந்தான்.
நீங்கள் இருளை வெருக்கிறீர்கள்;
அதனால் உங்களை உங்களுக்கே அடயாலம் தெரிவதில்லை.
நான் இருளில் வாழ்கிறேன்;
அதனால் அனைவருக்கும் நம்பிக்கை தீபமாய் தெரிகிறேன்.
அவன் தன் கண்களை களட்டி வைத்துவிட்டு;
எனது கைகளை பற்றிக்கொண்டான்.
இருவரும் நடந்தோம்
இருளின் அழகை ரசித்தவாரே!!!!!

இக்கவிதையை எனது குரலில் கேட்டுப்பாருங்கள்


2 கருத்துகள்: