இங்கே துலாவு

ஞாயிறு, 28 ஜூன், 2015

பார்வையற்றோருக்கான விளையாட்டு பற்றிய தொடர் பாகம்-2


நாங்களும் விளையாடுவோம்!:
பலருக்கும் பார்வையற்றோர் விளையாடுகிறார்கள் என்று சொன்னால் வியக்கிறார்கள்;
 அல்லது நம்ப மருக்கிறார்கள்;
 இல்லா விட்டால் சிறு குழந்தைகள் விளையாடும் மைதானங்களின்
அதாவது சிரு இடத்தில் விலையாடுவார்களோ என்ற என்னம் தான் அவர்களிடையே ஏற்படுகிறது. நடக்கும் போது தடுமாரும் இவர்களால் தடம் மாராமல் ஓட முடியுமா? என்ற வினாவும்
எழும். இத்தகைய ஐயம் மாரவேண்டுமென்றால் பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகளை பார்த்தி
ருக்க வேண்டும் அல்லது அது பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கண்கட்டி வித்தை:
1992 ஒலிம்பிக்கில் ஆன்றோ ருபல்லோ என்ற வீரர் கண்ணை கட்டிக்கொண்டு
 அம்பேய்தி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
அவர் முழு பார்வையற்ற வில்வித்தை வீரர். அவரால் எவ்வாறு அப்படி சாதிக்க முடிந்தது; எள்ளாருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கிறது என்பது வெரும் வாக்கியமள்ள அது
ஒரு வாழ்க்கையின் தத்துவம். பார்வையற்றோருக்கான விளையாட்டுகள் ஒலியை மையமாகக்கொண்டும் இருக்கும், சிரு அடையாலங்களை கொண்டு இருக்கும்.
 உதாரனமாக ஓடும் தலங்களில்
செங்கள் பதிக்கப்பட்டு இருக்கும். குறை பார்வை உடையவர்களுக்காக பட்டையான சுண்ணாம்புக்கோடுகள் போடப்பட்டிருக்கும்.
 பார்வை உள்ளவர்கள் விலையாடும் அனேக விளையாட்டுகள்
பார்வையற்றோருக்கும் உண்டு.
செய்தி ஊடகங்கள்:
தமிழகத்தில் செய்தி ஊடகங்கள் அதிகம் வரத்தொடங்கியது. அவர்களுக்கு புதுமையான செய்திகள் தேவைப்பட்டது. அந்த தேவைகளின் பலனாய் பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகளை
கேமராக்கள் படம்பிடித்து சாதாரன மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தனர். செய்தித்தாள்கலும் மக்களிடம் இந்த விளையாட்டை சேர்க்க பெரும் பங்காற்றி வருகின்றன. முழுமையாக
மக்களை சேர்ந்துள்ளதா என்றால் இல்லை என்றே கூறலாம். முன்பைவிட கூடுதலான பேருக்கே தெரியும். அரசுக்குக்கூட அதிக விளிப்புணர்வு இல்லை.
மைதானங்களின் இயல்பு:
இவர்களுக்கான மைதானங்கள் அதிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வெடிகுண்டுகள் இருக்கும் அதனால் அதிக காவலர்களை நிருத்தும் பாதுகாப்பு இல்லை. குண்டும்குழியுமாய்
இருத்தல் கூடாது. மைதானத்தின் நடுவே கம்பிகள் போன்றவை இருத்தல் கூடாது. மைதானத்தை சுற்றி அதிக இரைச்சல் இருக்ககூடாது. எள்ளை கோடுகள் கால்களால் உணரும் படியும்,
கண்ணில் தெரியும் வகையில் வண்ணங்களை பயன்படுத்தி அமைத்தல் வேண்டும். உல்லரங்க விலையாட்டு என்றால் அதிக வெளிச்சம் இருக்கும் வகையில் அமைத்தல் வேண்டும். கண்ணாடிப்பொருட்கள்
இருக்கும் இடங்களில் விலையாட்டுப்போட்டிகளை நடத்துதலை தவிர்க்கலாம். கம்பிகள் இருக்கும் பச்சத்தில் அதில் பஞ்சு போன்ற துனிகளை சுற்றி வைக்கலாம். மைதானத்தை சுற்றி
வளை அமைத்தாலும் நலம். இது  முழுப்பார்வையற்றோர் மைதானத்தின் எள்ளைகளை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

   தொடரும்,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக