இங்கே துலாவு

சனி, 27 ஜூன், 2015

பார்வையற்றொர் விளையாட்டு குறித்த தொடர் முதல் பாகம்:

பார்வையற்றோருக்கான விளையாட்டுக்கள்;
கண்ணாமூச்சி விளையாடி உள்ளீர்களா?
 உங்களுக்கு அது 5 நிமிட விளையாட்டு;
 இவர்களுக்கு நீண்டகால வாழ்க்கை.
 இருலில் தான் நட்சத்திரங்கள்ள் மின்னும் என்பதாலோ!
 நட்சத்திரங்களாய் மார முயர்ச்சிக்கும்
 கூட்டம் ஒன்று மெல்ல வெல்ல நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
 அவர்கள் விளையாட்டாய் நடை
போடவில்லை; விளையாட்டில் நடைபோடுகிண்றனர்
. பார்வையற்றோருக்கான விலையாட்டு பற்றிய வியக்க வைக்கும் பார்வை.
வழிகாட்டும் ஒலி:
ராமாயனத்தில் தசரதன் ஒலியை கேட்டு அம்பெய்தும் ஆற்றல் பெற்றிருந்தான்.
 பாரதத்தில் அருச்சுனனும் அத்தகைய ஆற்றல் பெற்றவந்தான்
 என்று கேட்ட கதைகளை உன்மையாக்குபவர்கள் பார்வையற்றவர்கள்!
 சாப்பிடும்போது கை எப்படி கண்பார்க்காமலே வாயை நோக்கி செல்கிறது?
 தட்டச்சு செய்யும் போது பழக்கத்தின் காரணமாக விரல்கள் கண்நின் அதிக தயவின்றி
 விளையாடுகிறது. இப்படிப்பட்ட நிதானங்களே பார்வையற்றோர்களின் இரண்டாவது கண்கள்.
 3-ஆவதாய் உணர்தல் இரண்டு கண்களை விட
 20 நகக்கண்களும் சேதி சொல்லும்.
 தொடுதல், காள்கள் குட்டி பள்ள மேடுகளையும்
ஒரு குரியாகவைத்துக் கொண்டே செள்ள வேண்டிய இடங்களை நோக்கி நகரமுயல்வர்.
 இந்த விசேசங்கள் பார்வை உள்ளவர்களுக்கும் இருக்கிறதே?
 என கேட்களாம். அவற்றை பார்வை உள்ளவர்கள் குரைவாக பயன்படுத்துகின்றனர். இன்னொன்றையும் சொல்ல வேண்டும் மணம் கூட பிறரை அடையாலம் காண உதவுகிறது. பார்வையற்றோரால் இவைகள்மூலம் சிறப்பாக இயங்க முடியாது என உங்களுக்கு ஐயம் ஏற்பட்டால் சில உதாரணங்களை தருகிறேன்.
தூரத்தில்வரும் உங்கள் காதலியின் கொலுசோசையை கேட்டு திரும்பாமலே வருவது உங்கள் தேவதைதான் என உங்களால் உணரமுடியும்.
 பல பெண்கள் கூட்டமாக கொலுசுபோட்டுவந்தாலும் உங்கள் ஆளின் ஓசையை உனருவீர்கள். அடிக்கிர கப்பை வைத்தே வரும் நன்பனை கண்டுபிடிப்பீர்கள்.
 வாழ்தலுக்கான போராட்டத்தில் அனைவரோடும் போட்டிபோட இன்னும் பல வுத்திகளை கையாலுகின்றனர்.
 மணம், தொடுதல், ஒலி, நிதானம், இவை பொதுவான காரணிகள்.
பார்வையற்றவர்கள் யார்யார்?:
பார்வையற்றவர்கள் என்ற உடன்;
 முழுவதும் பார்வை இழந்தவர்கள் என்ற கருத்து உங்களுக்குல் தோன்றும்.
 பார்வையற்றவர்கள் 3 விதமாக பிரிக்கப்படுகின்றனர்.
 1 முழுவதும் பார்வை இழந்தவர்கள் [b1].
2 மிகுந்த குரைப்பார்வை உடையவர்கள் [b2].
3 குரைவான பார்வை உடையவர்கள் [b3].
இது மருத்துவ ரீதியான பிரிவில்லை பார்வை தெரியும் அளவை வைத்து பிரிக்கப்படுகிறது. விலையாட்டுப்போட்டிகள் இந்த பிரிவுகளை பொருத்து மாருபடும்.
 குழு நிலை போட்டிகள், இம்மூவகையினரையும்
 சரியான விகுதத்தில் களந்து விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக