இங்கே துலாவு

வெள்ளி, 31 மே, 2019

தமிழகத்தில் பார்வையற்றோருக்கான விளையாட்டின் போக்கும் எதிர்காலமும்:

பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடே விளையாட்டு. அது விளையாடுபவருக்கு மட்டுமல்லாது காண்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத்தரும் இயல்புடையது. அதனால்தான் தொல்காப்பியர்
         “செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
         அல்லல் நீத்த உவகை நான்கே“[1]
 என உவகை பிறக்கும் நிலைக்கலன்களுள் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிடுகிறார். இன்று விளையாட்டு தொழிலாக வளர்ச்சியடைந்திருக்கிறது. விளையாட்டிற்கு உடற்தகுதியும், பார்வைத்திறனும் முதன்மையானவை. எனவே, பார்வையற்றவர்கள் விளையாடமாட்டார்கள் என்ற முடிவிற்குப் பலரும் வந்துவிடுகின்றனர்.

வியாழன், 16 மே, 2019

சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாள்

இன்று சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாள்.
உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். எனவே, கணினி திறன்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை, அவர்களும் கையாளும் வகையில் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே மாதத்தின் மூன்றாவது வியாழனை சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வருகின்றனர்.
இத்தினத்தில் மென்பொருள் தயாரிப்பாளர்கள், மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் இடையே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், சில பன்னாட்டு கணிநி நிறுவனங்கள் இந்நாளில் 15 நிமிடங்களுக்கு மவுசை பயன்படுத்தாமல் கணினியில் அனைத்து வேலைகளையும் செய்ய பனிக்கின்றன.
இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முதல்முறையாக இந்நாள் பற்றி தமிழ் இணையவெளியில் பதிவு செய்தது நான் தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் வரலாறு முக்கியம். அணுகல்தன்மை குறித்து ஒரு நாள் விரிவாக எழுதுகிறேன்.
#சர்வதேச_அணுகல்தன்மை_விழிப்புணர்வு_நாள்
#Global_Accessibility_Awareness_Day

ஞாயிறு, 12 மே, 2019

சொல்லிவிடாதே


பனிக்கட்டியாய்  உறைந்தேன்
உன்  பார்வை படும்போது

இறகுகள்  வருடும்  சுகம்
உன்  நிழல்கள்  படும்போது