இங்கே துலாவு

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

எட்டா கனிகளும் கிட்டாத ருசிகளும்:


 தமிழ் நமக்கு சோருபோடும்;
குழம்பு ஊத்தும் என புழம்பிக்கொண்டிருக்கும் தமிழர்களே!
வயிற்றுப்பசியை தீற்கவும் அறிவு பசியை தீற்கவும் நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
நான் இன்று வயிற்று பசிபற்றி பேச வரவில்லை.
அறிவு பசி பற்றி வினவ வந்திருக்கிறேன்.
பார்வையற்றோர் என்று 3 கோடி பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.
பள்ளிகலிலும், கள்ளூரிகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும், இன்னும் பல இடங்களிலும் நீங்கள் கண்டு கடந்து போயிருப்பீர்கள்.
  அவனது படிப்பு, வாசிப்பு பற்றி ேதேனும் சிந்தித்திருக்கிறீர்களா?
பார்வையற்றோருக்காக தொண்டு செய்யும்/அவர்களை வைத்து தங்கள் வயிற்றை நிறப்பும் நிறுவனங்களே இதைப்பற்றி கவளை படாத போது நீங்கள் என்ன செய்வீர்கள் பொது மக்களே?
பார்வையற்றோருக்கு வாசிக்க கிடைக்கும் புத்தகங்களில் பல
சுய முன்னேற்ற புத்தகங்களாகவும்
பணக்காரர்களான அம்பானி, டாட்டா, இன்னும் கொஞ்ச நாளில் அதானி, மாரன் சகோதரர்கள், பற்றிய வெற்றிக்கதைகளும் தான் விரைவில் அவர்களுக்கு  கிடைக்கின்றன.
பாவம் அப்பாவி பார்வையற்ற ஒருவன் இவற்றை பற்றி கனவு கண்டுவிட்டு தூங்க வேண்டியதுதான்.
தமிழக பாடப்புத்தகங்களை அடித்துத்தரும் சில பிரையில் அச்சகங்கள் இன்னும் புதிய பாடங்களை அச்சிடவில்லை.
பாவம் அவர்களுக்கு நிதிப்பிரச்சனையாக இருக்களாம்!
அதை ஏன் பிறர் தலையிலும் கட்ட வேண்டும்?
  அப்படி என்றால் பார்வையற்றவர்கள் வாசிக்க யாருமே உதவ வில்லையா?
இந்தியாவுக்கே அச்சு ஊடகத்தின் வழி அறிவூட்டிய ஆங்கிளேயர்கள் தான் இதை தொடங்கினர்.
இன்று விவிலியமும்;
 ஆங்கில புத்தகங்கள் பலவும்;
 பிரையிலிலும், ஒளி வடிவிலும் கிடைக்கின்றன!
மென்பொருட்களும் ஆங்கிள புத்தகங்களை வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் தமிழில் எள்ளாம் வினாக்குறியாக வளைந்து நிற்கிறது.
கிழக்குப்பதிப்பகத்தினர் ஒளி புத்தகங்களை மிகுந்த தறமாய் வளங்குகின்றனர்.
இங்கு தரமாய் என்பது அவர்களது துல்லிய ஒளிப்பதிவை குறிக்கும்.
வாசிப்பு நேர்த்தியும் வாசிப்பவர்களும் நம்மை ஈர்க்காமல் போகமாட்டார்கள்.
பாம்பே கண்ணன் பொன்றவர்களின் தனிப்பட்ட முயர்ச்சிகள் பாராட்டத்தக்கதே!
ராமகிருஸ்னா அச்சகப்புத்தகங்கள் நம் வாசிப்பனுபவத்தை புதுமையாக்கின!
  இணையத்தின் வளர்ச்சியால் இன்னும் சில புத்தகங்கள் நம் கைகளில் கிடைத்திருக்கின்றன.
அது ஒரு சொற்பத்தொகையே!
நம்மிடம் உள்ள ஒரு மனோபாவம் இது வந்ததே பெருசு என்று நினைத்துக்கொள்வதுதான்.
இன்னும் வர  பல வழிமுரைகளை   நாமே தாந் கண்டறிய  வேண்டும்.
 இலவசமாக மின்னூல்களை freetamilebook என்ற இணையதலம் தருகிறது.
இவர்கள் வளைப்பூவில் உள்ள தொகுப்புக்களை நூலாகத்தருகின்றனர்.
இத்திட்டத்தில் பணிபுரியும் சீனிவாசன் என்பவரிடம் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களை epup வடிவில் மாற்றித்தருமாறு  கோரிக்கை வைத்திருக்கிறேன்!
தமிழில் நிரைய மின்னூட்களை தன்னகத்தே வைத்திருப்பவர் ஒரத்தநாடு கார்த்திக் அவரிடமும் இதே கோரிக்கையை வைத்தேன்!
இருவருமே சொன்ன பதில் தரமுயர்ச்சிக்கிறோம் என்பதுதான்!
இதை சம்மதம் என்றும் எடுத்துக்கொள்ள முடியாது;
இல்லை என்றும் எடுத்துக்கொள்ள முடியாது.
bookshare இந்த வளைத்தலம் தற்போது சில ஆழ்ந்த வாசிப்புக்கான நூட்களை தன்னகத்தே கொண்டு இயங்குகிறது.
மதுரை திட்டம், சென்னைநூலகம் போன்றவை பலரும் அறிந்ததே!
இன்னும் சில வளைதலங்கலும் நூல்களை பார்வையற்றோர் படிக்கும் வகையில் தருகின்றன.
ஒலிவடிவ புத்தகங்கள் அனைத்துமே தரமானதாகவும் கிடைப்பதில்லை.
சிலவற்றை கேட்கும் போது தூக்கம் வந்துவிடுகின்றது.
மதுரையில் இருக்கும் ஹெலன்கெலர் நூலகத்தில் ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் நாவலை பதியக்கொடுத்தேன்;
அதில் கெட்ட வார்த்தைகள் வருவதால் பதிய முடியாதென்றனர்!
இதன் காரனமாகத்தான் தனி வாசிப்புக்கு
 உகந்த மின்னூல்களை நாட வேண்டி இருக்கிறது.
மின்னூல்கள்ின்று சந்தயில் அதிகம் புழங்குகின்றன;
 அது ptf வடிவில் இருப்பதால் திரை வாசிப்பான்கள் வாசிப்பதில்லை.
இதற்கு பதிப்பகங்கள் மாறவேண்டும்
 இல்லை நம் மென்பொருளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்..
 ஒரு ஆண்டுக்கு 2500 பக்கங்களை நாம் வாசிக்க வேண்டுமென ஐனா சொல்கிறது.
இங்கு இன்னும் பாடத்திட்டங்களுக்கான புத்தகங்களை பதிந்து படிப்பதற்குள்ளே ஆண்டுகள் உருண்டோடிவிடுகின்றன.
பார்வையற்றவனுக்கு தொலை நோக்கு பார்வையைக்கொடுப்பது புத்தகங்கள் தான்.
இங்கு கனிகளே எட்டாமல் இருக்கும் போது அதன் ருசிகள் எப்படி சுவைக்கக்கிட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக