இங்கே துலாவு

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கார்ப்பரேட் முதலாளிகள் மீதான கடுப்புக்கு காரணம்

கார்ப்பரேட் முதலாளிகள் என்றாலே நமக்கு ஏன் இத்தனை கடுப்பு வருகிறது என்ற காரணத்தைக் காலையில் கக்கூசில் அமர்ந்திருக்கும் பொழுதுதான் கண்டுபிடித்தேன்.

நம் சமூகத்தில் பலரது கனவுக் கன்னிகளாக இருந்த கதாநாயகிகளைப் பின்னாளில் ஏதோ ஒரு தொழிலதிபர்தான் கல்யாணம் செய்துகொள்கிறார். கனவுக்கன்னிகளை இழந்த கையறு நிலைதான் ஆழ்மனதில் வெறுப்பாக குடிகொள்கிறது. அந்த ஆழ்மன வெறுப்புதான் கார்ப்பரேட் முதலாளிகள் என்ற வார்த்தையைக் கேட்டதும் கிளர்ந்தெழத் தூண்டுகிறது. ஆண் மகன்களின் மனசாட்சியாக கவுண்டமணி  திரையில் "இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியல" என்று சொல்லும் போது, அது நம்மை கைதட்டி ஆரவாரிக்க சொல்கிறது. 

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

அன்றுதான் பார்வையற்றோருக்கு புத்தக தினம்

சொற்களின் வழியேதான்  ஒரு பார்வையற்றவர் இந்த உலகத்தை அறிந்துகொள்கிறார்.  அதற்கு, வார்த்தைகளின் வாகனமான நூல்கள் பெரிதும் உதவுகின்றன.

"காவிரி ஆற்றில் பாம்பு போல்  நீரலைகள் புரளுகின்றன, நீரானது யானை போல் நகர்ந்து வருகிறது" என்றெல்லாம் )அம்மா வந்தாள்( நாவலில் தீ ஜானகி ராமன் வருணிக்கிறார். அவர் கண்களால் கண்டதை, வார்த்தைகளின் வழியே ஒரு பார்வையற்றவர், நூல் வாயிலாக அதனைத் தரிசிக்கிறார்.

ஒரு பார்வையுள்ளவரோடு நான் ஆற்றிற்குச்  சென்றால், ஆறு வந்துவிட்டது என்று சொல்வதோடு அவர் நிறுத்திக் கொள்வார். ஆனால், ஒரு நூலானது அங்குள்ள காட்சிகளைத் தெளிவாக வர்ணிக்கும். அதனால்தான் புத்தக வாசிப்பு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு அறிவை பெருக்குவதோடு, இந்த உலகைக் கண்டுணரவும் வழிவகை செய்கிறது. இப்படி பெரும் பயன் தரும் புத்தக வாசிப்பு, அவர்களுக்கு எளிதில் கிட்டுவதில்லை.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் மிகச் சில நூல்கள் பிரேயிலில் வந்தாலே பேரதிசயம். இன்று ஒரு சதவீதம் நூல்கள் ஒளி நூலாக வருகின்றன என வைத்துக்கொள்ளலாம். ஐந்து சதவீத நூல்கள் மின்னூலாகத் தோராயமாக வருகின்றன என வைத்துக் கொள்வோம். சுமார் 90% நூல்கள் பார்வையற்றோர் சுயமாகப் படிக்கும் வகையில் வருவதில்லை என்பது மிகப்பெரிய அறிவு புறக்கணிப்பு.

இத்தகைய புறக்கணிப்புகள் இருந்தாலும் பார்வை மாற்றுத் திறனாளிகள் நூல்களை வாங்கவே  முயல்கின்றனர். அந்த நூல் வாங்கும் படலமுங்கூட மிகத் துயர் மிகுந்ததாகவே

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

சூப்பர் சிங்கர் சர்ச்சுகளே...

ஆபத்தில் அலறும் போது

உரிமைக்காக முழங்கும்போது

கஷ்டத்தில் கண்ணீர் விட்டு கதறும் பொழுது

சந்தோசத்தில் சத்தமிடும் பொழுது

 ஸ்ருதி சரியில்லை

லயம் சரி இல்லை

எனச் சொல்லியபடி

எதிர்ப்படாது இருங்கள்

சூப்பர் சிங்கர் சர்ச்சுகளே...

 

சனி, 19 ஆகஸ்ட், 2023

அழகர் கோயில் திருவிழா அக்கப்போர்கள்

அழகர் கோவில் திருவிழா ஆரம்பித்த உடனேயே, மதுரை தெருக்களில் இருவர் மிகவும்  பிஸியாகிவிடுவார்கள். ஒருவர் தேனிசைத் தென்றல் தேவா மற்றொருவர்