இங்கே துலாவு

வியாழன், 18 ஜனவரி, 2018

பயணக்கொடுமை

பல ஊர் செல்லும் பேருந்துநிருத்தத்தில் நிற்கும்போது பெண்களின் குரலை கவனிப்பதுண்டு. அதில் இனிமையான குரலை ரசிக்கலாம் என்பது ஒரு நோக்கமாக இருந்தாலும் பெண்கள்
எந்தந்த ஊர் செல்லும் பேருந்துகள் வருகிறது என சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதுவும் ஒரே வகுப்பை சேர்ந்த பெண்களாய் இருந்தால் ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு கதையை
வேறு சொல்வார்கள். அதனால் எனது ஊர் செல்லும் பேருந்துகளில் சரியாக ஏறி பயன்பெற்றதுண்டு. நடந்து செல்லும்பொது என்னைப்பற்றி பின்னால் வருபவர்கள் பேசிக்கொள்வதை
கவனிக்கும் பழக்கம் எனக்குண்டு. அதில் பார்வையற்றவர்கள் எப்படி தனியே நடக்கின்றனர், என்பது பற்றி நானே வியக்கும் வகையில் புதுப்புது விளக்கங்களை சொல்லுவார்கள்.
அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு நூலாகவே எழுதலாம். அது இல்ல நான் சொல்ல வந்த மேட்டர். நான் நடந்து போகும்போது என் பின்னால் வரும் பெண்களை பற்றி சொல்கிறேன். என்னது?
உன் பின்னால் பெண்கள் வருகிறார்களா என நினைத்து வயிறேரிய வேண்டாம் ரோட்டில் நடக்கும்போது பின்னால் என்திளைகளும் வரும் எருமை மாடும் வரும். அந்த பெண்கள் இப்படி
பேசிக்கொள்வார்கள். கம்பி இருக்குது மோதப்போராங்கடி, அதற்கு பக்கத்திலிருக்கும் பெண் சொல்லும். ஆமாடி! கம்பி இருக்குது மோதப்போராங்கடி. அப்புறம் மெதுவான குரலில்
ஐயோ, பாவம், என்றெல்லாம் சொள்ளத்தொடங்குவார்கள். பெண்கள் துயரப்பட்டா என் மனது தாங்காது. நான் கம்பியில் மோதாமல் சென்றால் அவர்கள் துயருற மாட்டார்கள் என்று
சிறுது இடப்புறம் நகர்ந்து நடந்தேன். அப்போதுதான் அக்கம்பி எனது நடு நெற்றியில் மோதியது. அப்போது அப்பெண்கள் பெரிதாய் இரண்டு உச்சுக்களை கொட்டிவிட்டு கடந்து
சென்றனர். நெற்றியை தேய்த்தபடி நின்று கொண்டே நினைத்தேன்; அந்த பெண்கள் பேச்சை கேட்காமல் நடந்திருந்தால் அக்கம்பி எனது சட்டையில் மட்டும் உரசிய படி சென்றிருந்திருக்கும்.
இன்னொரு சூழலில், அவர்கள் பேச்சை கணக்கில் எடுக்காது நேரே சென்று மோதியதும் உண்டு. இதன் காரணமாகவே நடக்கும்போது பெண்களின் பேச்சைக் கேட்டு பயப்படுவதுமுண்டு.

2 கருத்துகள்:

  1. நமக்கு இங்கு பயனும் உண்டு சிக்கலும் உண்டு. அந்தப் பெண்கள் பின்னால் வரும் பேருந்தின் என்னை சொல்வார்கள் நாம் முன்னால் வரும் பேருந்தில் ஏறி செல்வம். அதேபோன்று நமக்கென்று அந்த பேருந்து நிலையத்தில் எந்த ஆண்களும் இருக்கமாட்டார்கள் நம்மால் பெண்களிடம் பேருந்து என்னை கேட்கவும் முடியாது இந்த தவிப்பு இருக்கின்றது கொடுமையின் உச்சம். அனுபவத்தை அழகு தமிழில் அருமையாக எழுதுகின்ற தம்பி பார்வையற்றவனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோன்ற பல கொடுமைகளை சொல்லிமாலாது. மிக்க நன்றி அண்ணே உங்களது பின்னூட்டத்திற்கு

      நீக்கு