இங்கே துலாவு

புதன், 8 மே, 2019

உள்ளே இருக்கிறேன்


அகழிகள் சுற்றி அமைத்திருந்தேன் அதில்
ஆயிரம் முதலைகள் விட்டிருந்தேன்
அதையும் தாண்டி வருவாயென்று
மின்சார வேலியும் அமைத்திருந்தேன்

வெளிச்சமாய் நீ வரலாம் என்பதால்
ஜன்னல்கள் கூட வைக்கவில்லை
காற்றாய் நீ வருவாய் என்று
வாயில் கதவையும் திறக்கவில்லை
"இனி எப்படி வருவாய்" என நான்
எகத்தாளமாய் கேட்டேன்
இனிமையாய் சொன்னது ஒரு குரல்
"உள்ளேதான் இருக்கிறேன்" என்று

எப்படி நுழைந்தாய் என் மனக்கோட்டைக்குள்?
"பதுங்கி இருக்கும் வேளையிலே
பாதுகாப்பு வளையத்தை இட்டுவிட்டாய்
 வெளியே செல்ல முடியாமல்
வேலிகள் அமைத்து அடைத்துவிட்டாய்
இனி இங்கேதான் தங்குவேன்
இடம் கொடுத்ததற்கு நன்றி" என்றது காதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக