இங்கே துலாவு

வெள்ளி, 10 மே, 2019

அந்தோ பரிதாபம்


 அணிகளின் அறிவிப்பு; சுடரேந்திய சுற்றுப்பயணம். வீரர்களின் பதக்கம் வெல்லும் லட்சியக் கனவு பளிக்கப்போகிறது. ஆம்; ஒலிம்பிக்ஸ் தொடங்கப்போகிறது.


  குளிர்காலத்தில் நடப்பவைதான் ஒலிம்பிக் போட்டிகள்; கோடை காலத்தில் நடந்தால் அவை ஒலிம்பிக்ஸ். (இதில் உள்ள S Summer-ரை குறிக்கும்)

  இந்த ஒலிம்பிக்ஸில் சில இந்தியத் தகவல்கள் உங்களுக்காக.
  *தன் ஊரிலிருந்து 5 மைல் தூர தம் பள்ளிக்கு நடந்தே சென்றான் இவன். படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் சேரச்சென்றான். ராணுவத் தேர்வில் ஓடுதலும் ஒரு அம்சம். 1500 மீ. ஓடவேண்டும். அனைவரும் 4-ஆவது சுற்றுக் வருகையில் இவன் மட்டும் 7 சுற்றுகளை முடித்து  குறித்த தூரத்தைக் கடந்துவிட்டான்.

மீண்டும் உயரதிகாரிகள் முன் ஒரு ஓட்டம். நேரம் கணக்கிடப்பட்டது; முடிவு, அது இன்றுவரை முறியடிக்கப்படாத உலக சாதனை ஆனது. அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். தினமும் 5 மைல் தூரம் ஓடியவனுக்கு 1500 மீ. எம்மாத்திரம்? இதநால் இவருக்கு தொடக்கத்திலெயே மேஜர் பதவி அளிக்கப்பட்டது. அந்த இளைஞந்தான் பறக்கும் சீக்கியர் மில்காசிங்.

  இரண்டு வீரர்கள் ஒரே நேரத்தில் எல்லைக்கோட்டில் கால் பதித்தனர். காற்றில் கலைந்த முடி முன்னோக்கி விழ, முடி முன்விழல் ஆகாதுஎன சீக்கியசமயம் போதித்தது நினைவுக்கு வந்தது மில்காவுக்கு. தலையை கொஞ்சம் பின் சரித்தார்; இந்தியா தங்கத்தை இழந்தது.

  *தனிநபர் போட்டிகளில் இந்தியா முதன்முதலில் தங்கம் பெற்றது 2008-இல்ன். தயான்சந்த் தலைமையிலான ஹாக்கி அணியால் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக 3 தங்கங்கள் கிடைத்தன.

  *டென்னிஸில் பயஸ்-பூபதி இணை நான்கு முறை இணைந்து விளையாடியும் ஒலிம்பிக்ஸில் தங்கம் பெற முடியவில்லை. மீண்டும் இவர்களை இணைந்து விளையாடவைக்க முயன்றபோதுதான் வாய் தர்க்கம் வெடித்தது. “நான் ஐந்தாவது முறையாகவும் மண்ணைக் கவ்வத் தயாராக இல்லைஎன்றார் மகேஷ் பூபதி. இன்னொரு புறம் லியாண்டர் இளம் வீரர்களோடு என்ன்னால் இணைந்து விளையாட முடியாதுஎன்கிரார்.

  *இந்த முறை ஹரியானாவின் குழந்தையான சானியா நேவால் பேட்மிட்டனில் தங்கம் பெற்றுத் தருவார் என உறுதியாக நம்பலாம்.
  120 கோடி மக்கள் வசிக்கும் பாரத நாட்டில் 100-க்கும் குறைவான வீரர்களே ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. சகல விளையாட்டுகளிலும் சாதனை படைத்த நாம் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒரு பதக்கத்திற்காக காத்திருக்கும் பரிதாபம் என்று மாறும்?

விழிச்சவாலின் 2012 ஜூன் மாத இதழுக்காக எழுதிய கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக