இங்கே துலாவு

ஞாயிறு, 5 மே, 2019

என்ன தான் நடந்துச்சு 2011-ல்


  2011-ல் நடந்த விளையாட்டு நிகழ்வுகளைத் தொகுத்துத் தருகிறது  இம்மாத ஆட்டக்களம்.
 --2011-ஐ அறிமுக வீரர்களின் ஆண்டு என்று கூறலாம். காயங்களால் வீரர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் நுழைந்து அசத்திவிட்டனர் அறிமுகவீரர்கள்.

  இந்த ஆண்டில் கிரிக்கெட்டில் ஐந்து அறிமுக சதங்கள் பெறப்பட்டன. பெட்டிங்சன், பிலாந்தர், லங்கே முதலிய வேகபந்து வீச்சாளர்களும், அஸ்வின், நேத்தன் லியோன்,  இல்லியாசனி போன்ற சுழல் பந்து வீச்சாளர்களும் அறிமுகப் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தனர்.
  பிரேசில் கால்பந்து அணி ஒரே நாளில் ஐந்து வீரர்களை அறிமுகப்படுத்தியது. அனைவரும் சிறப்பாக விளையாடினர்.      
  முரளிதரன், ஜெயசூரிய, கால்பந்து வீரர் ரொனால்டோ-இவர்கள் இநத ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.  இந்திய அணிக்கு வெளிநாடுகளில் வெற்றிபெற கற்றுத்தந்த கிரிக்கெட் அணித்தலைவர் நவாப் பட்டோடி உலகை விட்டு விடைபெற்றதும் இந்த ஆண்டில்தான்.
  *பாகிஸ்தான் மும்மூர்த்திகளின் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம், இழுபறியில் இயங்கும் இலங்கை கிரிக்கெட் சபை, சபைமேலாண்மைக்குக் கட்டுப்படாத மேற்கிந்திய அணி, பரபரப்பு கிளப்பும் பாகிஸ்தான் சபை, தலைவர் கிலார்க்குக்குப் பிடிக்காததால் ஆஸ்திரேலியாவால் தள்ளிவைக்கப்பட்ட சைமன் கேட்டிச், இலங்கை கிரிக்கெட்டில் விளையாடும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டிய சங்ககாரவின் லாட்ஸ் உரை, மந்திரம் மூலம் சிகிச்சை தந்த மருத்துவர் இலியந்தா ஒயிட் உபில் தரங்காவை ஊக்க மருந்து உட்கொள்ளச் செய்த விவகாரம், ஹபிசின் சகல துறை திறமை, ஒரு நாள் போட்டியில் சேவாக்கின் இரட்டை சதம், கோவாட்டில் நடந்த 2000-மாவது டெஸ்ட், உலககிண்ண இறுதிப் போட்டிக்கு வந்த இரு அணிகளும் அடிமேல் அடிவாங்கியது, அயல் மண்ணில் 100-வது சதம் அடிக்காமல் சருக்கிவரும் சச்சின்-இவையே கிரிக்கெட்டில் நடந்த சர்ச்சைகளும் சாதனைகளும்.
  * 2011-ஐ உலக கிண்ணங்களின் ஆண்டு என்றே  கூறலாம். அமிர்தசரஸில் நடைபெற்ற கபடி உலக கிண்ணத்தை ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் இந்தியா வென்றது. நியூசிலாந்தில் நடந்த ரக்பி உலக கிண்ணத்தை நியூசிலாந்தே ஸ்வீகரித்துக் கொண்டது. கைப்பந்தில் (Hand bal) சுவீடனில் நடந்த ஆண்கள் போட்டியில் பிரான்சும், பிரேசிலில் நடைபெற்ற பெண்கள் போட்டியில் ஸ்பெயினும் வென்றன. கிரான் பிரிக்ஸ் எனப்படும் கரப்பந்து ஆட்டத்தில் (Volley Ball)  ஆடவர் பிரிவில் அமெரிக்காவும், பெண்கள் பிரிவில் இத்தாலியும் வென்றன.
  கால்பந்தாட்ட பெண்கள் உலக கிண்ணம் ஜெர்மனியில் நடந்தது; அதை ஜப்பான் வென்றது. இந்த ஆண்டில் காலபந்து ரசிகர்களின் உதடுகள் உச்சரித்த ஒரே பெயர் பாசிலோனா. கால்பந்து உலகத்தை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் இங்கிலாந்து கழகங்களை ஆட்டம் காணச் செய்தது இந்நாடு. ஐரோப்பிய கிண்ணத்தை வென்றும் பசியடங்காத பாசிலோனா, கழகங்களுக்கு  இடையிலான உலக கிண்ணத்தையும் வென்று வரலாறு படைத்தது.
 *டென்னிஸ் போட்டிகளில் நடால் மற்றும் ஃபெடரரையும்  தாண்டி ஜொலித்தார் ஜங்கோவிச். 150-வது விம்பில்டன் போட்டிகள் 2011-ல் தான் நடந்தேறின.
  பகிரங்க (open) டென்னிஸ் போட்டிகளில் கிராண்ட ஸ்லாம் வென்ற முதலாவது ஆசிய மங்கையாக மின்னினார் சீனாவின்
நாலி .
*உலக மெய்வல்லுநர் போட்டிகள் (Atheletics) தென்கொரியாவில் நிகழ்ந்தது,
* பொதுநலவாய (common wealth) போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கை நழுவிப் போனது,
* ஃபார்முலா-1 கார் பந்தயம்  முதன் முறையாக இந்தியாவின் நொய்டா பகுதியில் நிகழ்ந்தது,
*குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்த ஆண்டில் தொடர்ச்சியாக வென்று வந்த உக்ரேனின் விட்டலி க்ளிச்கோ ஆகியவை இந்த ஆண்டில் நடந்த இன்னும் சில முக்கிய நிகழ்வுகள்.
   மொத்தத்தில் 2011 விளையாட்டுக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது.

இது விழிச்சவால்
2012 ஜனவரி இதழுக்காக எழுதிய கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக