இங்கே துலாவு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆனால், நீங்கள்?

இந்த பொதுத்தேர்தலிலும்;
எந்தப் பெரிய கட்சியும்;
மாற்றுத்திறனாளிகளுக்கு சீட் கொடுக்கவில்லை!

இது நான் எதிர்பார்த்தது தான்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
தேர்தல் பிரச்சாரங்களில்;
பேஸ்புக் பதிவுகளில்;
வாட்சாப்வதந்திகளில்;
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தாமல் இருங்கள்.
இன்று...
குருடர்கள்
தொழில்நுட்ப உதவிகொண்டு பார்க்கிறார்கள்;
முடவர்கள்
உதவு உபகரணங்கள் மூலம் நடக்கிறார்கள்;
பைத்தியங்கள்
மனநல சிகிச்சையால் தெளிந்து விட்டார்கள்.
ஆனால், நீங்கள்?????


இக்கவிதையை ஒலிவடிவிலும் கேட்டுப்பாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக