இங்கே துலாவு

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

அடுத்த கணமே அண்ணனாக மாறிவிடுகிறேன்!


எதிர்பாராது எதிர்ப்பட்ட தருணமொன்றில்;
என் நலம்பற்றி
வாஞ்சையாய் விசாரித்தாய்.


சேராது போனாலும்;
மாறாது உன்மீதான நேசமென,
நிரூபிக்க முயல்கிறாய்.
காய்ந்துபோன காயங்களுக்கு;
களிம்புகள் எதுவும் தேவையில்லை.

நீ பத்துநாள் பேசாததால்;
பதரிப்போய் துடித்தேன்.
பதினோராம் நாள் வந்து ,
பத்திரிக்கை நீட்டி,
திடீரென திருமணம்;
நிச்சயமாகிவிட்டது என்றாய்.

நம் காதல்பற்றி;
வீட்டில் சொன்னாயா?
என வினவினேன்.
கட்டாயம் கல்யாணத்துக்கு வரனும்,
எனச் சொல்லிவிட்டு கடந்துசென்றாய்.

உரக்கம்வராது தவித்தேன்;
படுக்கையில் உருண்டேன் புரண்டேன்;
பின்னர்...........

கள்ளக்காதலிகள் கனவனயே கொல்லத்துணிகிறார்கள்!
ஆனால், நல்ல காதலிகள் பெற்றோர்களிடம்;
தான் காதலிப்பதைக்கூட சொல்லத்துணிவதில்லையே.
நாம் என்னமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?
என முகநூலில் போஸ்ட்போட்டுவிட்டு
உரங்கிப்போனேன்.

இப்போதெல்லாம்என்  மனது;
காதலிகளின் கல்யாணச்செய்தியை,
இயல்பாய் ஏற்றுக்கொள்கிறது.
திருமண
அழைப்பிதழ் கொடுத்த அடுத்த நொடியே;
அண்ணனாக மாறச்சொல்கிறது.


இந்தக் கவிதையை எனது குரலில் கேட்க, கீழே உள்ள லிங்கில் செல்லவும்!இதுதான் என்னுடைய  youtube channel.
அதை சக்ஸ்கிரைப் செய்து. என்னை சர்ப்ரைஸ் அடையச்செய்யவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக