இங்கே துலாவு

திங்கள், 22 ஜனவரி, 2018

கலர்ஃபுல்

நான் m.a. படிக்கும்போது, பரிச்சை எழுத எனது மாமா மகளை கூட்டி போனேன். பரிச்சை ஹாலில் அந்தப்புள்ள எழுதும்போது, இதுக்கு என்ன கலரு யூஸ்பன்ன? இந்த பாயிண்டுக்கு
என்ன கலர் யூஸ்பன்ன? என்று பரிச்சை வினாவை விட அதிக வினாவை கேட்டது. எனக்கு பரிச்சை எழுதியவர்களெல்லாம், நான் சொன்னதை எழுதுவார்கள்; எழுதாமல் விடுவார்கள். ஆனால்,
இந்ந்தப்புள்ள பாத்து பாத்து டெக்கரேசன் செஞ்சது. அந்த நேரத்துல ஆனந்த கண்ணீரே வந்துரும்போல இருந்தது. பரிச்சப்பேப்பர திருத்திட்டு வாத்தியார் கேட்டார், என்ன
சக்தி விடைத்தாள் கலர்ஃபுள்ளா இருக்கு? என்னோட மாமா பொண்ணு தான் பரிச்ச எழுதித்தந்துச்சுய்யா. உடனே அவர், அப்போ அப்படித்தான் இருக்குமென்றார்.
 #மாமாபொண்ணுநினைப்புகள்

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உரியவரை இப்பதிவு சென்று சேர்ந்ததில் மகிழ்ச்சி!
      தங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்

      நீக்கு