இங்கே துலாவு

வெள்ளி, 26 ஜனவரி, 2018

சீரியல் கொடுமை

அது தீபாவளி நேரம் என்பதால், விடுமுறைக்கு ஒருநாள் முன்னமே வகுப்புக்கு விடுப்பெடுத்துவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டுக்குக் கிழம்பினேன். அப்போது வகுப்பிலிருந்த புள்ளங்கெல்லாம் போகாதிங்கன்னா என்றனர்.
இந்நக்கி வேண்டாம் நாளைக்குப்  போங்கண்ணா என்றது ஒரு புள்ள. இன்னொரு புள்ள வகுப்பின் வாசலை மறைத்துக்கொண்டு நான் வழிய விடமுடியாது என்றது. இப்படிப் படிப்பு மேல பொறுப்பில்லாம வீட்டுக்குக் கெளம்புறது
சரி இல்லன்னா என்று அக்கறையாய் கண்டித்தது ஒரு புள்ள.
இப்படி அக்கறை என்னும் சக்கரையை வகுப்பில் உள்ள புள்ளங்கெல்லாம் என் மேலே கொட்ட; பெருமையில் வானத்தில்
பரக்கத்தொடங்கினேன்! ஒரு ௧௦ அடி மேலே சென்றிருப்பேன், அப்போது இன்னொரு புள்ள கேட்டது. ஏன்னா இப்பவே கட்டாயம் வீட்டுக்கு போயியாகனுமா? பிளிச்ன்னா நாலக்கிப்போங்களேன்.
அதற்கு நான் நாளை bus கூட்டமா இருக்கும் என்னால எடம் பிடிக்க முடியாது என எனது பிரச்சனையைச் சொன்னேன்.
அப்போது, புள்ளங்கெல்லாம் சோகமாய் சொன்னுச்சுங்க; நீங்க செல்ல கொண்டுட்டுப்போய்ட்டா எப்படிண்ணா நாங்க ராஜா ராணி சீரியல் பார்க்கிறது?
அதைக் கேட்டதும், பெருமையில் ஆகாயத்தில் பரந்த நான்; இடறி, பாதாளத்தில் விழுந்தேன்!

#எம்பில்அப்டேட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக