இங்கே துலாவு

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

உடையும் வின்பம்+

பெண்களுடன் பேசுவது பெருங்குற்றம். என்று சொல்லும் பள்ளியில் படித்தவன் நான். தப்பித்தவறி ஒரு பிள்ளை பேசிவிட்டால், அது ஒன்னோட ஆளுதானே? என்று பையன்கள் கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஒரு பையனிடம் ஒரு புள்ளை பேசுகிறதென்றால் காதல் என்றுதான் நாங்கள் நம்பினோம். நான் வேறு, நல்ல பையன் என்று பெயரெடுத்திருந்ததால், பெண்களுடன் பேசுவதைத் தவிர்த்தே வந்தேன்.

கேப்ரங்ஹால், மங்கையர்க்கரசி, பள்ளிகளிலிருந்தும், லேடிட்டோ கல்லூரியிலிருந்தும் பிள்ளைகள் எங்களது நிறுவனத்திற்கு வாசித்துக்காட்ட வருவார்கள். நாளை வாசித்துக்காட்ட வருகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததுமே நாங்கள் வானத்தில் பரக்கத் தொடங்கிவிடுவோம். அந்தப் புள்ளங்கெகிட்ட புக்கக்கொண்டுபோய் கொடுத்துக் கொஞ்ச நேரம் வாசிக்கச் சொல்லிட்டு. நீண்ட நேரம் கதை பேசனும் என்று கிழம்பும் கூட்டத்தில் நானும் ஒருவனாகக் கிழம்புவேன்.
பார்வை விண்ணை அளந்தாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்! என்பது போல், பிள்ளைகள் கூட்டத்திற்குள் சென்றதுமே; வார்த்தைகள் வர மருத்து விடும். பின் கொண்டுபோன புத்தகத்தை முழுமையாகப் படித்துவிட்டுத் திரும்பிவிடுவேன்.

இது நமக்கு ஒத்துவராது என்று அந்த கூட்டத்தைவிட்டும் விலகிவிட்டேன். பயகலோடமட்டும்  கும்மியடித்துக் கொண்டிருந்த எனக்கும் முதுகளை வகுப்பு ஒரு பெரிய டுவிஸ்ட் வைத்திருந்தது.

அந்த வகுப்பில் நான் ஒருவன் மட்டுமே ஆண் பிரதிநிதி. புது இடம் என்பதா்ல் எனக்கு ஒன்றும் தெரியாது. பொண்ணுக கிட்டே எப்படி உதவி கேட்கிறதுங்கிற தயக்கம். ஆனால், என்னை நல்லாவே பாத்துக்கிட்டாங்க. கல்லூரியில் எந்தெந்த இடங்கள் எங்கெங்கு இருக்கு, அங்கு  எப்படிப் போகனும் என்பதை எள்ளாம் கூட்டிச் சென்று காட்டி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். 

கல்யாணம், காதணி விழா, திருவிழா, போன்றவற்றுக்கு எனது குடும்பத்தினரோடோ, மிகவும் நெருக்கமான நண்பர்களோடோ மட்டுமே செல்வேன். வேறு நபர்களோடு செல்வதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். ஏனெனில், கூட்டங்களுக்குள்
செல்லும்போது நாம் அவர்களுக்குச் சுமையாகத் தெரியக்கூடும். ஆனால், என் வகுப்பு பிள்ளைகளோடு, எல்லாவற்றிற்கும் சென்றிருக்கிறேன்.

எனது வகுப்பு பொண்ணின் கல்யாணத்திற்கு,எங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் கிழம்பினர். இந்த கிப்ட கொடுத்திருங்க என்று பிள்ளைகளிடம் கொடுத்தேன். நீங்க வர்லயாண்ணெ என்று கேட்டுச்சுங்க. முடிஞ்சா வருரேன் என்றேன். கூட்டிக்கிட்டுப்போக யாரு இல்லன்னுதானே வரலங்கிறீங்க. நாங்க கூட்டிக்கிட்டு ப்போக மாட்டோமா? எனக் கேட்ட புள்ளங்கெ நாளக்கிக் கெழம்பி வாங்க வரளேன்னா வீட்டுக்கே
வந்து கூட்டிக்கிட்டு போவோம் என்று சொல்லுச்சுங்க. 5 பொண்ணுங்களோட ஊரு எங்க ஊரத்தாண்டிதான் இருக்கு. அதுனால அவர்கள் வீட்டுக்கே வரக்கூடும் என்பதால் கிழம்பிச் சென்றேன்.

ஆண் நண்பர்களோடு செல்லும்போது ஏற்படும் இணக்கத்தை அப்பில்லைகளோடு செல்லும்போதும் உணர்ந்தேன். பின் பல பயனங்கள் என் வகுப்புத்தோழிகளோடு சென்றேன்.அவையெள்ளாம் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களாய் நிழலாடுகின்றன.

பெண் என்றதுமே காதலி என்ற வின்பம் மட்டுமே என் மனதில் எழும். ஆனால், முதுகளை வகுப்புகள் தோழிகளையும், அவர்களது
தோழமை உணர்வுகளையும் எனக்கு அடையாளங்காட்டின.
#முதுகலை_நினைவுகள்
    

2 கருத்துகள்: