இங்கே துலாவு

புதன், 26 அக்டோபர், 2016

பார்வையற்றோரின் பேருந்துப்பயனம்

நான் அமேரிக்கன் கள்ளூரியில் படித்துக்கொண்டிருந்த போது;
 நாங்கள் பெரியார்னிலையம் சென்று எங்கள் விடுதிக்கு செள்ளும் அழகர்கோவில் பேருந்தில் ஏறுவோம்.
 எங்களில் கொஞ்சம் பார்வை தெரிந்தவன் முத்துத்துரை, பேருந்தை பார்த்துச்சொள்ளும் பொருப்பை அவனே எடுத்துக்கொண்டான்.
 நல்ல படியா அவன் சொன்ன பேருந்தில் ஏரி எங்கள் விடுதியை 2 மாத காலமாய் சரியாக வந்தடைந்தோம். ஒருநாள்
அவன் ஏற்றிவிட்ட பேருந்து அழகர்கோவில் மார்க்கமாய் செள்ளாமால் அது வேறுமார்க்கமாய் செள்ளத்தொடங்கியது.
 விசாரித்ததில் அது அளங்கானல்லூர் செள்ளும்பேருந்து என்பது தெரியவர அடுத்த நிருத்தத்தில் இறங்கி பின் சரியான பேருந்தைப்பிடித்து ஏறிச்சென்றோம்.
 அவனே வாண்டடா வந்து  சாரிப்பா நான் ஒழுங்கா பாக்கல என சரனடைந்தான்.
அடுத்த நாள் மீண்டும் கடமயைச்செய்யப்  புரப்பட்டான்; ஒரு பேருந்தின் முன் உத்துப்பாக்கத்தொடங்கினான்.
பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் சாப்பிடச்சென்றுவிட்டார்.
நீண்ட நேரமாய் போடைப்பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஒருவழியா முதல் எழுத்து அ-வை கண்டுபிடித்துவிட்டான்! அடுத்த எழுத்து என்ன என்பதை கண்டுபிடிக்க கடும் முயர்ச்சி எடுத்துக்கொண்டிருந்தான்.
 சாப்பிட்டுவிட்டு வந்த ஓட்டுனர்
 தம்பி கொஞ்சம் தல்லிக்கப்பா வண்டி எடுக்கனும் என்றார்.
 அவரிடமே  இது அழகர்கோவில் போகுமாண்ணே எனக்கேட்டான். அவரும் ஆமாம் என்றார். கூட்டத்தில் இருந்த வெங்களமூர்த்தி இன்னைக்கு என்ன அழகர்கோவில் பஸ்சயேகானம் எனச்சொல்லிக்கொண்டிருந்தான். பின்னர் நாங்கள் அனைவரும் பேருந்தில் ஏரினோம்.
அப்போது தான் முத்துத்துரை என்னிடம் ஒரு ரகசியம் சொன்னான். அ-வப்பார்த்ததுமே அத அழகர்கோவில் பஸ்சுன்னு அறிவிச்சுடுவேன். அளங்கானல்லூர் பஸ்சும் இதே பிலாட்பாமுல நிக்குமுன்னு எனக்குத்தெரியாது என்றான்.
இத யாருக்கிட்டையும் சொல்லக்கூடாதுன்னும் சொன்னான்.
கடைசிவர அவனுக்கு கொடுத்த வாக்க க்காப்பாத்துவேன்.
இப்படி எங்கள் பேருந்து பயனங்களில் பல சுவாரசியங்கள் துன்பத்தை மரந்து சிரிக்கவைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக