இங்கே துலாவு

சனி, 3 டிசம்பர், 2016

OUT OF THE STATIUM:


  தேசங்களை ஒருங்கிணைக்கும்வண்ணம் உருவானதே உலகக்கிண்ணம். 2011-ன் முக்கிய நிகழ்வான கிரிக்கெட்  உலகக்கிண்ணத்தின் உச்சங்களை ஓராயிரம் பத்திரிக்கைகள் அலசி இருக்கும். சொச்சத்தை; நாங்கள் சொல்கிறோம்.


  இந்திய துணைக் கண்டத்தில் இனிதே தொடங்கியது உலகக்கிண்ணம்.
 பயங்கரவாதத்தை காரணம் காட்டி போட்டி நடத்துவதிலிருந்து கலட்டி விடப்பட்டது பாகிஸ்தான்.
 மைதானத்தில் அணிகள் ஆச்சரியத்தில் ஆழ்த்த, வெளியே பல விநோதங்கள் அரங்கேறின.
   பங்களாதேஷை  அறுபது ஓட்டங்களுக்குள் மேற்கிந்தியத் தீவுகள் வீழ்த்த, வெறிகொண்ட ரசிகர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியை தாக்க முயன்றனர்.
 கோபத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்பது போல ஆட்டமிழந்த கடுப்பில் துடுப்பால் (BAD)  தொலைக்காட்சியை அடித்து உடைத்தார் பிரபல வீரர் ரிக்கி பாண்டிங். அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு பிரச்சனையைத் தந்தது; அபராதத்தை அதுவே கட்டியது.
  அயர்லாந்து வீரரின் அரையிலிருந்து துடுப்பை யாரோ ஆட்டைபோட இந்திய வீரர் யுவராஜ் துடுப்புக் கொடுத்து வீரர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தினார்.
  அரையிறுதியில் பாகிஸ்தான் பாதம் பதிக்க, இந்தியா எதிர்த்து நிற்க அரசியல் ரீதியாக ஏற்பட்டது ஒரு சிறு அணுகூலம். இருநாட்டு தலைவர்களும் ஒன்றாய் அமர்ந்து போட்டியை ரசித்தனர்.
 அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அன்று  வேலை நாளாக இருந்தாலும் பலர் விடுப்பு எடுத்தனர். பெருநகரங்கள் அமைதியில் ஆழ்ந்தன. பங்குச்சந்தை பல புள்ளியை இழந்தது. இத்தனை நடந்தும் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் எல்லோரும் புதைந்து போயினர் தொலைக்காட்சிப் பெட்டிக்குள். இதற்கிடையில் "உலக கோப்பையை இந்தியா வென்றால் வீரர்களுக்கு  நான் நிர்வாணக் காட்சி தருவேன்" பூனம் பாண்டேயின்  அறிவிப்பால் வந்த சர்ச்சை வேறு.
  இறுதி போட்டியில் இந்தியா இலங்கையைச் சந்தித்தது. இலங்கை கிண்ணத்தை இழந்ததால் கிளம்பியது பல சர்ச்சைகள்.
  அர்ஸ்ஜுன ரணதுங்கதான் ஆரம்பித்து வைத்தார். "இலங்கை அணியின் பயிற்சியாளர் ராஷபக்சே தான்" என இந்திய ஊடகத்துக்கு கிண்டலாக ஒரு பேட்டி கொடுத்தார். மேலும், இறுதிப் போட்டியில் இலங்கை பிரமுகர்களுக்கு இருக்கைகள் உரிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் பிரச்சனை தொடர்ந்தது.
  இந்தியா இலங்கையை தோற்கடித்ததுடன் இந்தப் பிரச்சனைகளும் சேர்ந்து இலங்கை மத்தியில் கோபத்தை ஏற்படுத்தின. விளைவு, இந்துமா கடலில் தமிழக மீனவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
  உலக கோப்பை செலவுகளை கணக்குப் பார்த்ததில் உலக்கு கூட மிஞ்சவில்லை இலங்கை கிரிக்கெட் சபைக்கு. பலகோடி ரூபாய் இழப்பு; வீரர்களின் ஊதியம் இன்று வரை நிலுவையில் உள்ளது. அரசிடமும் ICC யிடமும் நிதியுதவி கேட்டு கையேந்தி நிற்கிறது இலங்கை கிரிக்கெட் சபை.
  உலக கோப்பை வாங்கிய மகிழ்ச்சியை நாம் கொண்டாடிய  வேளையில் காதுக்கு விழுந்தது ஒரு இடி. இந்தியாவுக்கு தந்தது உண்மையான உலக க்கிண்ணம் அல்ல; காட்சிக்கு வைத்ததுதான். அதற்குப் பின்புதான் தெரியவந்தது, வருமான வரித் துறைக்கு தண்ணீர் காட்டி ICC வரியை ஏய்ப்பு செய்தது. பின் காதும் காதும் வைத்தாற்போல் கதை முடிக்கப்பட்டது.
  கிரிக்கெட்டின் ஆணி வேர் அன்றாட வாழ்க்கையிலும், அரசியலிலும் ஊடுருவி விட்டது. தேசங்களை ஒருங்கிணைக்கும் உலகக்கிண்ணம் விரோதங்களை சம்பாதித்து விடைபெற்றது.      
2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்த பிரகு விழிச்சவால் என்னும் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக