இங்கே துலாவு

வெள்ளி, 2 டிசம்பர், 2016

தேவதை நினைவுகள்:

 நீ தூரம் சென்ற பின்பும்;
துரத்துகிறது உனது நினைவுகள்.
சிதரிப்போன நான்;
சிரித்துப்பேச முயல்கின்றேன்!
இனிமையான நினைவுகளை மேளே தூவி;
அழ வைக்கிறது உனது நினைவு!
காயம்படாது இருக்க;
நினைக்கிறேன் உன்னை மரக்க.
உன்னை காட்டும் கண்ணாடி நானென்றாய்;
செள்ளும்போதே உடைத்துவிட்டு தான் சென்றாய்!
உனது சதியை பின்னர்தான் புரிந்து கொண்டேன்!
சிதரிய ஒவ்வொரு சில்லும்
உன்னை முழுமையாய் காட்டுதடி.
அதைப்பார்க்க நீ இல்லை;
நான் தான் பார்த்த படி தவிக்கிறேன்.
கண்ணீர் பசையால் சிதரிய செல்களை சேர்த்துவிடுவேன்,
அதில் மீண்டும் நீ தேவதையாய் தெரிவாய்!
கபுக்கென்றுவரும் கண்ணீரை இமைகளுக்குள்  மரைத்துவிட்டு
உனது திருமனத்தில்  வாழ்த்து சொல்லிவிட்டு;
இருளில் வீடுவந்து அழுவேன்;
ஏன்? எனக்கு கண்கள் இருக்கிறது என்ற வினாவிற்கு
உனது பிரிவு தான் விடை சொல்லியது.
என்ன செய்வது?
தேவதைகளிடம் வரங்கள் கேட்கலாம்;
ஆனால் அந்த தேவதையயே கேட்கலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக