இங்கே துலாவு

வெள்ளி, 2 டிசம்பர், 2016

லியோனியும் நானும்

தமிழகத்தில் பட்டிமன்றத்தை கிராமந்தோரும் கொண்டு சேர்த்ததில் லியோனிக்கு முக்கிய பங்குண்டு!
 தொலைக்காட்சிகள் எட்டிப்பார்க்க தொடங்கிய காலம், டேப்ரெக்காடர்களின் வருகை என தமிழகம் தொழில்னுட்ப யுகத்தில் காலடி வைக்கத்தொடங்கிய காலத்தில்,
ஒலினாடா வழியே எங்களை தனது பட்டிமன்றத்தால் கட்டிப்போட்டார் லியோனி.



திரைப்பாடல்களை மூலதனமாகக்கொண்டு பட்டிமன்றத்தில் அவர் நடத்திய ராஜபாட்டை இனி யாராலும் செய்ய முடியாத சாதனை.
1940-களில் காலூன்றி தொன்னூறுகளில் உள்ள பாடல்களை தொம்சம் செய்யும் பாங்கு அபாரம்!
 வெறுமனே பாடல்களை மட்டும் சொல்லாது அப்போதய அரசியலையும் கிண்டல் செய்து அவர் கொடுக்கும் கௌண்டர்கள் அனாயாசமானவை.
 பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா?, பழையபாடலா? புதியபாடலா?, ஆகிய பட்டிமன்றங்கள் எனக்குப்பிடித்தவை.
 இவரது பட்டிமன்றங்கள் தென்மாவட்ட கிராமப்புரச்சூழலை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
 அதனால் தான் என்னவோ?  ஒவ்வொரு கிராமத்தானுக்கும் லியோனியின் பட்டிமன்றங்கள் மிகவும் நெருக்கமானதாக மாறிவிடுகிறது!
பொதிகை தொலைக்காட்சியின் வயலும் வாழ்வும், ஒலியும் ஒளியும், டேப்ரெக்காடர் உள்ள பேருந்துக்காக காத்திருந்து ஏரியது,
என 20-ஆம் நூற்றாண்டின் எண்டில் உள்ள டிரண்டுகளை ஐயாவின் மன்றங்கள் படம்பிடித்து காட்டுகின்றன!
சில நேரங்களில் வாய்ப்புகள் எங்கிருந்து வருமென்றே தெரியாது!அப்படி ஒரு வாய்ப்பு தான்  லியோனி ஐயா பட்டிமன்றத்தில் பேச எனக்குக்கிடைத்தது!
களைஞர் தொலைக்காட்சியில் லியோனி ஐயா நடத்தும் நல்லாப்பேசுங்க நல்லதயே பேசுங்க என்ற நிகழ்ச்சியில் எனக்கு  பேச வாய்ப்புக்கிடைத்தது!
மிகவும் எளிமையாய், பேசுவதற்கு இனிமையானவராய் அவர் இருந்தது வியப்பாய் இருந்தது!
நான் பேசியது 3 வாரங்கள் ஒளிபரப்பப்பட்டது.
அவற்றின் தொடுப்பை நான் கீழே கொடுத்துள்ளேன்!
பொன்.சக்திவேலாகிய எனது பேச்சையும் கேட்டுத்தான் பாருங்களேன்!
கடைசியாய் ஒன்றையும் சொல்லிவிடுகிறேன்! இன்றும் தமிழ் பாடலுக்கான தலம் விரிந்திருக்கிறது! தொட்டுப்பேசத்தான் ஆளில்லை.
 அரசுப்பணி முடிந்து, அரசியல் பணியில் ஐயா தீவிரமானதால் பழய லியோனி ஐயாவை எங்களால் பட்டிமன்றங்களில் பார்க்க முடியவில்லை!
உங்கள் ரசிகர்கள் காத்திருக்கிறோம்! அதனால், பழய லியோனியாய் திரும்பிவரனும் நீங்க.


2 கருத்துகள்: