இங்கே துலாவு

திங்கள், 31 அக்டோபர், 2016

நான் இன்று நடுனிலையாலனாகிவிட்டேன்!

முரசொலி அரக்கட்டலை நடத்திய பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற பரிசு ரூ. 1500-உம் சான்றிதலும்  இன்று எனது கைகளை வந்தடைந்தது.
அம்மாவின் 66-ஆவது பிரந்தநாளின் போது நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் நான் வெற்றி பெற்றதால் ரூ. 6666-உம் சான்றிதலும் கேடயமும் கொடுத்தார்கள்! அது என்னிடம் பத்தரமா இருக்கு.
இப்போ எங்க அம்மாவும் அப்பாவும் மிகுந்த சந்தோசத்துல இருக்குராங்க! எங்க, என ஒரு வார்த்தய சேர்த்துருக்கேன் கவனமா படிங்க!
நாளைக்கே இந்த 2 கச்சியில;
 ஏதேனும் ஒரு கட்சியைச்சேர்ந்த பெரும்புள்ளி எங்க வீட்டுக்கு வந்தாருன்னா.
 எங்க அம்மா பீரோல சத்தமா தொரக்கும். அப்போ எங்க அப்பா அந்த சமிக்கைய புரிஞ்சுக்கிட்டு நம்ம பையன்னு சொல்லி நம்ம பெருமயள்ளாம் சொல்லத்தொடங்குவாரு; சரியான நேரத்துல எங்க அம்மா என்றியாகி சான்றிதலை அந்த பெரும்புள்ளிக்கிட்ட கொடுப்பாங்க! அப்போ எங்க அப்பா, நம்ம கட்சி நடத்தின போட்டியில பையன் பரிசெள்ளாம் வாங்கிருக்கான் எனச்சொன்னவுடன்; வந்தவர் பெரிதும் மகிழ்வார்.
இன்னொரு நால் அதில் இன்னொரு கச்சியச்சேர்ந்த பெரும்புள்ளி வருவார். மீண்டும் அதே நாடகம் நடத்தப்படும்.
நம்ம கச்சி நடத்துன போட்டில நம்ம பையன் பரிசெள்ளாம் வாங்கிருக்கான் எனச்சொன்னதும்; வந்தவரும் பூரித்துப்போவார்!
 இதை எள்ளாம் முன்கூட்டியே அறிந்ததால்தானோ ஜெயலலிதாவும், உதயனிதி ஸ்டாலினும் சிரித்தபடி இருக்கிறார்கள் எங்கள் பீரோலில்!
நீ எந்த கச்சினெள்ளாம் கேட்கக்கூடாது. என்னோட பதில் எப்படி வருமுன்னு தெரியுமுள்ள.
 ஏன்னா? புளிக்கு பிரந்தது பூனையா இருக்காதுள்ள.
 கீழே உள்ள வீடியொவில்  நான் பேச்சுப்போட்டியில் பேசிய உரை இருக்கிறது.
அதில் அக்மார் அதிமுக காரன் போல ஒரு அதிரடி இன்னிங்ஸ் ஆடிருக்கேன். கேட்டு உயீங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக