இங்கே துலாவு

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

பேசப் போகிறேன்

டிசம்பர் 3 உலக முழுவதும் ஊனமுற்றோர் தினம். ஆனால்,  தமிழகத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் தினம்.
அதற்கு காரணம் டாக்டர் கலைஞர். அவர் எங்கள் பெயரை மட்டும் மாற்றவில்லை; பல பார்வைமாற்றுத்திறனாளிகளின் வாழ்வையே மாற்றினார்.
அதுகுறித்தும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் அடையாளமான விரல்மொழியர் மின்னிதழ் குறித்தும்,
பெரியார் திடல் மணியம்மை அரங்கில் நடைபெறவிருக்கும்; விரல்மொழியர் கலைஞர் சிறப்பிதழ் அச்சு மற்றும் பிரேயில் நூல் வெளியீட்டு விழாவில்,

பேசுவதற்காய், நான் எனது தம்பியுடன் சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இச்சிறப்பிதழை கனிமொழி அவர்கள் வெளியிட சுப வீரபாண்டியன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். எங்களுக்கான இப்பெரும் மேடையை ஏற்பாடு செய்து கொடுத்த திராவிடம் 2.o குழுவினருக்கு எங்கள் விரல் மொழியர் மின்னிதழ் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நேரம் இருக்கும் நண்பர்கள் விழாவிற்கு வாங்க.
அப்புறம் என்ன, ஒரு செல்ஃபிய கிளிக்கினால் சரியா போச்சு!

4 கருத்துகள்:

  1. சென்னைக்கு வருகின்ற நீங்கள் பார்வையற்ற பட்டதாரிகள் நடத்துகின்ற உரிமை போராட்டத்திலும் கலந்து கொள்ளலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நண்பர்களோடு போராட்டத்தில் கலந்து கொள்ளத்தான் திட்டமிட்டு பயணத்திட்டத்தை தயார் செய்தேன்.
      விரல் மொழியர் அச்சிதழும் பிரெயில் இதழும் எங்கள் கைகளுக்கு வந்து இன்னும் சேரவில்லை. அவற்றை உரிய நபர்களிடம் இருந்து பெற்று விழா அரங்கிற்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழலில் எங்கள் குழு சிக்கி இருக்கிறது.
      எங்கள் குழுவில் இருந்து நான் ஒருவன் மட்டுமே சென்னை வருவதால் பணிகளை முழுவதும் நான் ஒற்றை ஆளாய் செய்ய வேண்டி இருக்கிறது.
      எனவேதான் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை, போராட்டத்திற்கு எங்கள் குழுவின் ஆதரவும் குறிப்பாய் எனது ஆதரவு என்றும் உண்டு.
      நம் போராட்டம் என்றும் வெல்லும்.

      நீக்கு
  2. மேடைகள் ஒன்றும் உங்களுக்கு புதிது இல்லை. பேசுவது உங்களுக்கு கடினம் இல்லை
    தொடரட்டும் வெற்றி பயனம்
    ஒளிரட்டும் விரல்மொழியர் புகழ்.

    பதிலளிநீக்கு