இங்கே துலாவு

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

எல்லோரும் சொல்கிறார்கள்

புத்தகம் படிக்க ஆர்வமிருக்கும்,
வாசித்துக்காட்ட ஆளிருக்காது.

தேர்வுக்கு நன்றாய் படித்திருப்பேன்,
எழுதுவதற்கு ஸ்கிரைப் இருக்காது.
தேர்வெழுத ஸ்கிரைப் இருக்கும்,
சொல்வதை எழுத அவருக்கு ஆர்வமிருக்காது.
பல்வகை திறமைகளைக் காட்டுவேன்,
அதை அங்கிகரிக்க மனமிருக்காது.
இப்படி, எத்தனையோ இருக்காதுகளை
சமாளித்து மேளெழுந்து வந்ததால்தான்,
நான் சாதனையாளனென பலர் பேசுவதை
என் இரு காதால் கேட்க முடிகிறது!

1 கருத்து: