இங்கே துலாவு

வியாழன், 6 டிசம்பர், 2018

ஆர்வக்கோளாறு

இந்திய பார்வை யற்றோர் விளையாட்டு சங்கம் டெல்லியில் டிசம்பர் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களும் பார்வையற்றோருக்கான தடகளப்போட்டிகளை நடத்துகிறது.

 அதில் கலந்துகொள்வதற்காக, தமிழக பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் தமிழகம் சார்பாக 9 நபர்களை தெரிவுசெய்தது.

வீராங்கனை சிவகாமி: இவர் பாரா ஒலிம்பிக்கில் குண்டெறிதலில் தங்கப்பதக்கம் வென்றவர். வட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதலிலும் தன் முத்திரையைப்பதித்தவர். முழுப்பார்வையற்றவரான இவர் பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.

பார்வையற்றோருக்கான விளையாட்டுப்போட்டிகளில், பார்வையற்றவர்கள் 3 பிரிவாகப்பிரிக்கப்படுகின்றனர்.
முழுவதும் பார்வை இல்லாதவர்கள் b.1.,
வெளிச்சத்தைப்பார்க்கக்கூடிய அளவிற்கு பார்வை தெரிந்தவர்கள் b.2.,
b.2.-ஐ விட சற்று கூடுதலாக பார்வைத்திறன் உடையவர்கள் b.3.

பாண்டியராஜ், செல்வமணி b.1. பிரிவிலும்;
சரவணக்குமார், முகேஸ் b.2. பிரிவிலும்;
பிரசாந் b.3. பிரிவிலும்;
அருனாச்சலம் சதுரங்கப்போட்டியில் கலந்துகொள்ளவும்;
பாலகிருஷ்ணன், வசந்த் ஆகியோர் பார்வையற்றோருக்கான புதிய விளையாட்டுகள் தொடர்வான பயிற்சி முகாமில் பங்கேற்க்கவும் செல்கின்றனர்.
இக்குழுவின் கோச்சர் தியாகராஜன்.

இவர்கள் டெல்லியை நோக்கி இன்று புரப்படுகின்றனர்.

டெல்லியில 128 gp பென்றைவெல்லாம் 100 ரூபாய்தான்! ஹாட்டிஸ்க்கெல்லாம் 200 ரூபா தான்! ஒடனே 2, 3-ன்னு என்னப்போல் ஆர்வத்துல வாங்கிறாதீங்க. அத்தனையும் மொட்ட டப்பாவாதான் இருக்கும். கம்மியான ரேட்டுல நல்ல பொருட்களும் கிடைக்கும் விசாரிச்சு வாங்குங்க. அப்படியே எனக்கும் ஏதாச்சும் வாங்கிவாங்க.
நீண்ட இந்த ரயில் பயணத்துல உங்க உடைமைகளை பத்தரமா பாத்துக்கங்க. அப்புரம், ஒங்க ஒடம்பையும் பாத்துக்கங்க.

ரயில் பயணம் மட்டுமல்லாது உங்களது விளையாட்டுப்பயணமும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக