இங்கே துலாவு

சனி, 22 மே, 2021

ஒரு எட்டுப்போய் பாக்கனும்

நான் பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏறினேன். டிக்கேட் எடுப்பதற்காக நடத்துனரின் குரல் வந்த திசையை நோக்கி கையை நீட்டினேன். அப்போது, என் கை அருகில் நின்றுகொண்டிருந்த அம்மாவின் மீது பட்டுவிட்டது. திரும்பி என்னைப் பார்த்ததும்,

"இங்கெ கொடுப்பா நானே எடுத்துத்தாறேன்" என சொல்லி காசைவாங்கி டிக்கேட் எடுத்துக்கொடுத்தாங்க.

குடியக்காரங்கெ, வெட்டிப்பயலுகளுக்கெல்லாம் பொண்ணக் கொடுக்குறத விட; இந்தத் தம்பி மாதிரி கண்ணுதெரியாத புள்ளக்கி நம்ம பொண்ணக்கொடுத்தா நல்லாவச்சுப் பாத்துக்கும்.

அப்போது, பக்கத்தில் நின்ன அம்மா சொன்னுச்சு, "அந்தத் தம்பிக்கி என்ன கொரச்ச? ராசாமாதிரி இருக்குது!"

சிறிது நேரத்தில் அந்த 2 அம்மாக்களும் வல்லத்திறாகோட்டை நிறுத்தத்தில் இறங்கிச் சென்றார்கள்.

அப்பாடி அந்த அம்மாவின் ஊரைக் கண்டுபிடிச்சாச்சு! நாளக்கி ஒரு எட்டுப்போய். அந்த அம்மா பொண்ணக் கட்டுதான்னு கேட்டுட்டு வந்துரனும். இருந்தாலும் ஒரு டவுட்டு இருக்கு. நெசத்துக்குமே அந்த அம்மாவுக்குப் பொண்ணு இருக்கான்னு தெரியல.

எங்க சொந்ந்தக்காரங்கெ நடவடிக்கைகள் நினைவில் வந்து ஒரு பயத்தை ஏற்படுத்துது. எனக்குமட்டும் பொண்ணு இருந்திருந்தா, மருமயனுக்குத்தா கட்டி இருப்பேன்! என்னபன்னுரது? பொறந்தது முனும் ஆணாப்போச்சு! என அயித்தைகள் முத்துதிர்க்க.

எனக்கு மட்டும் ஆச இல்லயா என்ன? தம்பிக்கி என்னோட பொண்ணக் கட்டுரதுக்கு.

இப்பத்தான் பொண்ணு lkg போரா. நீ வெயிட் பன்ன தயாருன்னா நான் கட்டுறேன் என அக்காக்கள் ஜோக்கடிப்பார்கள்.

ஆனா, பெண் வைத்திருக்கும் மாமாக்களோ மிகப் பெரிய கேப்பை மெயிண்டையின் செய்வார்கள்.

அந்த அம்மாவும் முதல் ரகத்தைச் சேர்ந்ததாய்த்தான் இருக்கனும்.

இருந்தாலும் நாளை ஒரு எட்டுப் போய் பாத்துட்டு வந்துருறேன்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக