இங்கே துலாவு

வியாழன், 16 மே, 2019

சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாள்

இன்று சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாள்.
உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். எனவே, கணினி திறன்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை, அவர்களும் கையாளும் வகையில் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே மாதத்தின் மூன்றாவது வியாழனை சர்வதேச அணுகல்தன்மை விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வருகின்றனர்.
இத்தினத்தில் மென்பொருள் தயாரிப்பாளர்கள், மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் இடையே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், சில பன்னாட்டு கணிநி நிறுவனங்கள் இந்நாளில் 15 நிமிடங்களுக்கு மவுசை பயன்படுத்தாமல் கணினியில் அனைத்து வேலைகளையும் செய்ய பனிக்கின்றன.
இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முதல்முறையாக இந்நாள் பற்றி தமிழ் இணையவெளியில் பதிவு செய்தது நான் தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் வரலாறு முக்கியம். அணுகல்தன்மை குறித்து ஒரு நாள் விரிவாக எழுதுகிறேன்.
#சர்வதேச_அணுகல்தன்மை_விழிப்புணர்வு_நாள்
#Global_Accessibility_Awareness_Day

3 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி! நானும் மாற்றுத்திறனாளிதான். இந்தச் செய்தியைப் பதிவு செய்தமைக்காக வாழ்த்தும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார். தாமதமான பின்னூட்டத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

      நீக்கு
    2. அதனாலென்ன, இருக்கட்டும் நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்!

      நீக்கு