இங்கே துலாவு

வியாழன், 18 அக்டோபர், 2018

உங்களுக்கொன்று சொல்கிறேன்


உன் காதல் கவிதைகள் அருமையென
பலர் கைகொடுக்கின்றனர்.
கவிதையில் வரும் காதலி யாரெனக்
கேட்டு பலர் நச்சரிக்கின்றனர்.

அவளின் நிழற்படத்தை
அனுப்பச்சொல்லி சிலர் நிர்ப்பந்திக்கின்றனர்.
அவன் காதலி கொடுத்துவைத்தவளென
எட்டே நின்று கூடி பேசுகின்றனர்.

அவர்களுக்கு ஒருபோதும்
இச்செய்தி தெரியாது.

இறந்த காதளின்
எலும்பைக் குழலாக்கி
இசைக்கின்ற கீதங்கள்தான்
அவையென.

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
      இவ் வலைப்பூவிற்கு தொடர்ந்து வாருங்கள் உங்களது ஆதரவை தாருங்கள்

      நீக்கு