இங்கே துலாவு

திங்கள், 15 அக்டோபர், 2018

வெண்கோலின் வரலாறு history of white cane

சின்ன வயசுல எங்க அம்மா சொல்லுவாங்க, பெரிய பையனா ஆன பொறவு அந்த குச்சிய வைச்சுக்கிட்டு நடக்கக்கூடாது. அத பாக்க அசிங்கமா இருக்கும். இப்போதெல்லாம் நான் எங்கு பயணம் புரப்பட்டாலும், மரந்துரலயே அந்த குச்சிய எடுத்துவச்சுருக்க தானே?
டவுனுக்குள்ளயும் ரோட்டுலயும் குச்சியில்லாம நடக்கக்கூடாது தெரியுதா? என என்னை எச்சரிக்குமளவிற்கு இப்போது அவருக்கு ஸ்டிக் பற்றி நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது.

எனது பயணங்களை இனிமையாக்கும் உற்ற நன்பனாய் வெண்கோல் திகழ்கிறது. இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால், இன்று உலக வெண்கோல் தினம். அதைப்பற்றி டீட்டேலாய் இந்தக் காணொலியில் சொல்கின்றனர், புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் நடுனிலைப்பள்ளி மாணவர்கள்.

இவ்வாக்கத்தை எழுதி, மாணவர்களுக்கு பயிர்ச்சியளித்து, பேசவைத்து, பின்னணி ஒலிகளைச் சிறப்புறச் சேர்த்து, அப்பள்ளிக்கான யூடூப்ச்சேனலான Govt. School for Visually Imppaired Pudukottai –இல் பதிவேற்றியிருக்கிறார் அப்பள்ளியின் சிறப்பாசிரியர் ப.சரவணமணிகண்டன். மேலும் இப்பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளும் இச்சேனலில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. எனவே இச்சேனலுக்கு குழுசேர்ந்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சாலையைக் கடக்கவோ, இன்னொரு இடத்திற்கு செல்லவோ உங்களிடம் உதவி கேட்கும் அல்லது நீங்களாகவே உதவச்செல்லுமுன் அவர்கள் கையில் வெண்கோல் இருக்கிறதா எனப் பாருங்கள். அவர்களிடம் இல்லாதபச்சத்தில், அதன் முக்கியத்துவத்தை நீங்களே கூறுங்கள். அப்படி அவர்களுக்கு சொல்ல, அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதற்காக இந்த காணொலிக்கு செவிகொடுங்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக