இங்கே துலாவு

செவ்வாய், 26 டிசம்பர், 2017

என் வாழ்வில் 2017

2017-லில் நான் ஏரி அடிச்சிருக்கனா இல்ல அது என்ன ஏரி மிதிச்சிருக்கான்னு பாக்கிற நேரமிது!
மேச ராசி அன்பர்களே: சனி எட்டாம் வீட்டில் இருப்பதால் நீங்க எந்த வீட்டிலும் நிம்மதியாக இருக்கமுடியாது. என்ற
சோசியர்களின் எச்சரிக்கைகளோடே இந்தாண்டு தொடங்கியது. அந்த சோசியர்களுக்குத்தெரியாது அது எள்ளா ஆண்டும் எங்கள் வீட்டிலே இருப்பது.



அதனால், அதை எள்ளாம் ஒரு பொருட்டாவே மதிக்கவில்லை நான்.
“சோகம் ஒரு மேகம்;
அது சொல்லாமலே போகும்”
என்ற, விசை அண்ணாவின் தத்துவத்திற்கினங்க; இந்த ஆண்டில் பட்ட துயரங்களை பட்டியலிடுவோம்.
   எள்ளா வருசத்தப்போல இந்த ஆண்டாவது வேல கிடச்சுரும் என நம்பிக்கையாய் இருந்தேன்.
வைகாசிக்குப் பிறகு வேல கிடச்சுரும், பொரட்டாசிக்குப் பொரகு புகுந்து விளையாடுவ பாரு,
என அம்மா சாதகத்தைப் பார்த்துவிட்டு வந்து சொல்லிக்கிட்டு இருப்பாங்க.
 ஆனா, எனக்கோ சாதகமான முடிவுகள் எதுவும் வந்தபாடில்லை.
 tet தேர்வில் தேர்ச்சியடைந்தோருக்கு பணி வழங்கப்பட்டது. அதில் என் பேர் மிஸ்சிங். இப்ப புதுசா ஒரு அரசானை வந்துருக்கு, ஸ்பெசல் பியேட் முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கச்சொல்லி;
அதுனால ஒங்க பேர் வரல சார்,என்றார்கள்.  வேல கொடுக்காட்டியும் சாருன்னு சொன்னதுனால விட்டுட்டுக்கிழம்பிட்டேன்.
trb தேர்வுக்குப் படிச்சுத் தயாராகிப் போனா; வினாத்தாள் மிகக்கடினமா கேட்கப்பட்டிருந்தது. அப்படி இப்படின்னு குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்தா?
அத்தேர்வு மேள வழக்குப்போட்டு அது இன்னும் நிலுவயில நிக்கிது.
   பாலிடெக்னிக் தேர்வில் பணம் விளையாடியதைப் பார்க்கும்போது தமிழக அரசுப்பணிகளை எதிர்பார்ப்பது வீன் என்ற அச்சம் மனதிற்குள் படரத்தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் net தேர்வு எழுதினேன் 2 மதிப்பெண்ணில் jrf-ஐ இழந்தேன்.
நவம்பருள எழுதப்போனேன், வந்தவருக்கு வினாத்தாளே வாசிக்கத்தெரியல.
செரி, தமிழ்நாடுதான் ஒத்துவரல டெல்லியில் போய் படிப்பதற்கு முடிவு செஞ்சு jnu-வுக்கு விண்ணப்பித்தேன்.
அதில் எனது தம்பி எழுத்துத்தேர்வுக்கான மையத்தை மதுரைக்குப் பதில் மும்பையை தேர்வு செஞ்சு வச்சுருக்கான்.
அப்படியே, எனது டெல்லிக்கனவை சில்லுசில்லா நொருக்கிப்புட்டான்.
இப்படி மனதை உலுக்கிய நிகழ்வுகள் வாழ்வில் கிராசாகிக் கொண்டிருக்கும்போதே, டைபாய்டு வந்து 15 நாள் ஆள படுத்தி எடுத்துருச்சு.
இப்படி என் வாழ்வில் சருக்கல்கள் பல இருந்தாலும், ஏற்றங்களும் இந்த ஆண்டில் இருந்தன!
  பேச்சுப்போட்டிய எடுத்துக்கிட்டா: தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய
மாவட்ட அளவிலான போட்டியில் நான் முதல் பரிசை வென்றேன். பரிசுத் தொகையாக 10000ரூ. கிடைத்தது.
இப்போட்டிக்கு மேடையில் ஏரிய பின்பே தலைப்பு கொடுப்பார்கள்.
  அடுத்ததா, செஞ்சிலுவை சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியிலும் முதலிடத்தை பிடித்தேன்! இவர்கள் புத்தகம் தந்தார்கள்.
நான் 2003-இல் இருந்து பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன். இது எனது 15 ஆம் ஆண்டு. பேச்சுப்போட்டிகளும் எனக்கு போரடித்து விட்டதால்
 இத்தோடு பேச்சுப்போட்டிக்கு ஓய்வை அறிவித்துவிட்டேன்.
  2 ஆண்டுகள் இடைவெலிக்குப்பிறகு, மீண்டும் இந்த ஆண்டு கிரிக்கேட் விளையாட கலம்புகுந்தேன்.
 மானில அளவிலான இப்போட்டியில் எங்கள் அணி 2-ஆம் இடம் பிடித்தது. பந்துவீச்சில் எனது பழய திறமைகள் மழுங்காமல் இருந்தது எனக்கே வியப்பாய் இருந்தது.
30 31 தேதிகளில் மதுரையில் ஒரு டோர்னமெண்ட் இருக்கிறது. ஆண்டு இறுதியை வெற்றியோடு முடிப்போமா எனப்பார்க்கலாம்.
  2013-ஆம் ஆண்டுக்குப்பிறகு எழுதுவதில் நான் மீண்டும் ஃபாமுக்கு திரும்பியுள்ளேன்.
மனதை அழுத்திய துயரங்களிலிருண்து நான் இந்த ஆண்டு வெலிவந்ததே அதற்குக் காரணம்.
என்னுடைய மாஸ்ட்டர்பீஸ்:  பார்வையற்றோருக்கான பாடல்  என்ற கட்டுரை பார்வையற்றோர் பலராலும் பாராட்டப்பட்டது!
அதற்கான லிங் இதோ கீழே.

பார்வையற்றோருக்கான பாடல் கல்விப் பரப்பில் நான் இந்த ஆண்டு: யுனிவர்சிட்டி 3-ஆம் ரேங் பெற்றேன்!
இது எனக்கு முக்கியமானதுதான் என்றாலும்; நான் படித்த கல்லூரியில் பார்வையற்றோர்களும்
நன்றாக படிக்கக் கூடியவர்கள் என்ற என்னத்தை விதைக்க இது உதவும்.
தொழில்னுட்பத்தைப் பொருத்தவரை, இந்த ஆண்டு கிண்டிலின் உதவியால் பல முக்கியமான புத்தகங்களை படிக்க முடிந்தது.
கொஞ்ச நாட்கள் கூகுல் மேப்பில் இடத்தை சேர்ப்பதில் ஆர்வமாய் இருந்தேன்.
எங்கள் ஊர் பேருந்து நிறுத்தங்களை இதில் சேர்த்துவிட்டால்; எலிதில் இனைய உதவியுடன், எங்கள் ஊர் நிறுத்தங்களை கண்டுபிடிக்கலாம் என நினைத்தேன்.
ஆனால், பேருந்து நிறுத்தங்களை நாம் சேர்க்க முடியாது என்று அறிந்ததும்; அந்த ஆர்வம் தலையை தொங்கப்போட்டுக் கொண்டது.
  காந்திகிராமத்தில் நடந்த மலயக தமிழ் இலக்கிய பன்நாட்டு கருத்தறங்கும், இயக்குனர் அமித்கோங்கர் கலந்துகொண்ட ஆவனப்படவிழாவும், எனக்கு முக்கிய நிகழ்வுகளாக அமைந்தன.
வாவுசி இல்லம், பாரதியார் இல்லம், பாஞ்சாலங்குரிச்சி கோட்டை, எட்டையபுர அரன்மனை, உமருபுளவர் சமாதி போன்றவை இந்த ஆண்டில் நான் பார்த்த முக்கிய இடங்கள்.
வருமாண்டு தரப்போவது என்ன? விடையறிந்துகொள்ள காத்திருக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக