இங்கே துலாவு

வெள்ளி, 15 டிசம்பர், 2017

காதல் அட்றாசிட்டிகள்

எங்கள் விடுதியில் காதலிக்க அனுமதி இல்லை என்றாலும்;
காதலோ யார் அனுமதியையும் கேட்காமல் வந்துகொண்டுதான் இருந்தது. அங்கு பலரும் அதன் மாய கரங்களால் ஆட்டு விக்கப்பட்டுக் கொண்டிருந்தோம்.
கால ஓட்டத்தில் காட்சிகள் மாறின. ஆனால், நினைவுகளோ நிலைத்துவிட்டன.
 6-ஆம் வகுப்புப் படிக்கும் போதெள்ளாம் எங்கள் வகுப்பில் அமைதியாகத்
தான் இருப்பேன்.
நொண்டிச்சாமி, வேலுச்சாமி, பாண்டிமல்லையன், காலிரத்தினம் என
பயல்கள் பட்டாலம், அந்த பொன்னோட மனதில் முட்டி மோதி இடம்பிடிக்க

போராடிக்கொண்டிருந்தனர்.
அந்த பிள்ளையின் பேர்வரும் பாடலாய் தேர்ந்தெடுத்து வகுப்பில் பாடுவதும், ஹரிஹரன் பாடல் வரிகளை கவிதையாய் ஒப்பிப்பதும் என அவர்களது பெர்ப்பாமென்சுகள் தூல் பரந்தன.
நானோ காதலென்றால் காத தூரம் தல்லி ஓடிவிடுவேன்.
காதலை நான் ஒரு கெட்ட வார்த்தையாகவே கருதினேன்.
அந்த நேரத்தில் நான் எவ்வலவு வெகுலியாக இருந்ந்தேன் என்றால்,
ஒரு பய, பேச்சுவாக்கில் புருசன் பொண்டாட்டி என்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டான்;
உடனே நான், நரம்புகள் புடைக்க டீச்சர், இவன் புருசன் பொண்டாட்டின்னெள்ளாம் சொல்லுரான் என கம்பிலேண்ட் செய்தேன்.
உடனே, அந்த டீச்சரும், இந்த வயசுல பேசுரபேச்சான்னு;
அடி வெலுத்துக்கட்டிட்டாங்க. பின் எனது பெருமையை விடுதி முழுவதும் பரப்பினேன்.
அதில் கொடுமை என்னவென்றால்? அவன் ஒருமுறை சொன்ன புருசன் பொண்டாட்டி என்ற சொற்களை நான் அன்று மட்டு 100-க்கும்மேற்பட்ட முறை சொல்லிருப்பேன்.
அமைதியாய், அதிர்ந்து பேசினால் அழுதுவிடுபவனாய், என்னேரமும் புத்தகமும் கையுமாய், வகுப்பின் மூலையில் அப்பாவியாய் அமர்ந்திருப்பேன்.
ஆனா, அந்தப்புள்ள எனக்கிட்டதான் பேசுச்சு! அப்படியே காதலும் மலர்ந்துச்சு.
நா காதலில் மிதக்கத் தொடங்கிய ஒடனே; அந்த பொன்னோட பேர, என்னோட நோட்டுல எழுதிப்பாக்கனுமுன்னு ஆசப்பட்டேன். அங்கே தான், எனக்கொரு சந்தேகம் வந்துச்சு.
 அந்த பொன்னோட  பேருக்கு,  சின்ன ராவருமா பெரிய றா வருமா? அந்த சந்தேகத்த எப்படித் தீர்ப்பது என யோசித்துக் கொண்டிருந்தேன்.
அன்று இரவு எங்கள் விடுதியின் வழிபாட்டுக் கூட்டத்தில்  தன்னிடம் தெரிவிக்கப்பட்ட புகாரை வாடன் விசாரிக்கத்தொடங்கினார்.
அந்த புகார் இதுதான், கண்ணதாசன்அண்ணன் தன்னோட காதலியின், பிறந்தநாள் வயது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளஆசைப்பட்டார்.
பார்வையற்றோர்கள் தொடர்வண்டியில் கட்டனச் சலுகை பெர ஒரு அடையால அட்டை காட்ட வேண்டும். அந்த அட்டய அந்த அக்கா வகுப்புக்கு கொண்டுவந்துருக்கு. இங்கே கொடுப்பாத்துட்டுத் தாரேன், என வாங்கியவர்; அதில் உள்ள பிறந்தநாள் விவரங்களை பார்த்துட்டு; சொன்னது போலவே கொடுத்துட்டார்.
இவர் நோட் செஞ்சத இன்னொருத்தனும் நோட் செஞ்சான். அப்பனா ஒரே பொன்ன ரெண்டு பேர் காதலிச்சாங்களான்னு கேட்க்கக் கூடாது. அவர் அட்டய வாங்கி என்ன செயிராருங்கிறத, இன்னொருத்தன் நோட் செஞ்சு வாடன் காதுல ஓதிட்டான்.
ஞாயமா அவர் என்ன சொல்லிருக்கனும்? பள்ளிக்கூடம் என்னோட கண்றோலுல வராது. விடுதிதான் நம்ம லிமிட்டுன்னு சொல்லிருக்கனும். ஆனா, அவரோ ஒரு ஆக்சன் பிலாக் மாட்டிருச்சுன்னு வெழுத்து வாங்கிட்டாரு.
இந்த கம்லேண்டிலிருந்து எனக்கான ஐடியாவப்புடிச்சேன். வகுப்பில் ஒருமதிப்பெண் தேர்வு வச்சா பாண்டிமல்லையன் தான் விடைத்தாள்களைவாங்கி மேசையில் அடுக்குவான்.
எத்தன நாளுதாண்டா நீயே வாங்கியடுக்கி சிரமப்படுவ?
 இனிமே, நீ ஒரு மாசம் நா ஒரு மாசம் பொருப்ப எடுத்துக்குவோம். எனக்கூரி அவனை ஐஸ் வைத்து பொருப்பை வாங்கி, அந்த புள்ளையோட பேருக்கு என்ன ரா வரும் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்.
 அப்போது, பிலேம் போட்டுப் பார்ப்பது பேமசாய் இருந்தது.
தமிழே ததீங்கினத்தோம் போடுது! ஆங்கில அறிவு சுத்தம். எனவே அந்த பொருப்பை செவ்வனே ஆற்றியதால் ஸ்பெல்லிங்கையும் கண்டுபிடித்துவிட்டேன்.  பிலேம் போட்டுப்பார்த்ததில் மேரேஜ் என ரிசல்ட்டும் வந்தது.
அப்படியே காலங்கள் உருண்டோடின.
   சத்தி இங்க வாயா என அழைத்த காந்தரூபன், கடச்சனேந்தலிலிருந்து வாங்கி வந்த சிக்கன், கொத்துப்பொரோட்டா என அனைத்தையும் என்னிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
 ஒன்னும் புரியாமல் அதை வாங்கிய போது, அவன் சொன்னான், ஒரு புள்ள என்ன காதலிக்கிறேன்னு சொல்லிருச்சுயா. இன்னைக்கி நீ என்னவேனுமோ கேழு நா வாங்கித்தாரேன் எனச்சொல்லியவன்; மகிழ்ச்சியில் துல்லிக்குதித்துக்கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்த பின், மொட்டைமாடிக்குச் சென்று பயல்களிடம் இதை விவரித்துக்கொண்டிருந்தேன். கூட்டத்திலிருந்த சசிகுமார் மட்டும், விழுந்துவிழுந்து சிரித்தான்.
சொல்லிட்டு சிரி, என அவனிடம் சொன்னோம். நாந்தாண்டா அவங்கிட்ட போனுல பொம்புல கொரலுல பேசுனேன்.
 அந்த கண்றாவிக்கொரலயுமா அவன் கண்டுபுடிக்கல?
 என்ன செய்ரது சத்தி? காதல் கண்ண மரச்சுருச்சுபோல. ஆனா, நீ எல்லாம் நல்லாருக்க மாட்டடா. வெதபோடுரவன் ஒருத்தன் பழம் திங்கிறது நீயா? எனச் சொல்லியவாறு நொந்துகொண்டான்.
       எங்கள் விடுதியில் எத்தனை காதல் ஜோடிகள் இருக்கின்றன என்பதை விருந்ந்துச் சாப்பாட்டின்போது கண்டுபிடித்துவிடலாம்.
விருந்தில் பரிமாரப்படும் லட்டு, வாழைப்பழம், ஐஸ்கிரீம் என எள்ளாவற்றையுமோ, அல்லது அதில் சிலவற்றையோ; தங்கள் காதலனுக்கு 6, 7-ஆம் வகுப்பு சிறுவர்களிடம் கொடுத்து  கொடுக்கச் சொல்வார்கள். இப்படித்தான் எங்கள் விடுதிப் பிள்ளைகள் உச்சபட்ச அன்பை பரிமாரிக்கொண்டனர்.
அந்த சிறுவர்களை கண்கானித்தும், நேரடியாய் கண்டவற்றையும், செவிவழியாய் கேட்டவற்றையும் கொண்டு டாப்டென்  ஜோடிகளை வரிசைப்படுத்தி,  நாங்கள் மாதந்தோரும் வெளியிட்டு வந்தோம்.
 அப்படி ஒவ்வொர் மாதமும் போக்கஸ்லைட் ஜோடிதான் முதலிடம் பிடிக்கும்.
எங்கள் நிறுவநத்தின் பேர் பதித்த கோபுரம் இருக்கும் அதற்கு 2 லைட் போடப்பட்டிருக்கும். அதற்கு நாங்கள் போக்கஸ்லைட் என்று பெயரிட்டிருந்தோம்.
அதற்கு கீழே இருக்கும் பெஞ்சியில்தான் அந்த ஜோடி எப்போதும் அமர்ந்து பேசிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருக்கும்.
 அதனால் தான் அதற்கு அந்த பெயர்.
இருவரும் சிறப்பாக படிக்கக் கூடியவர்கள். நாங்கள் கொடுத்த முதலிடம் சரி என்பது போல்தான் அவர்களது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அமைந்திருந்தன!
இருவருமே ஒரே மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.
 ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில்  பள்ளியில் முதலிடம் பிடிப்பவரின் பெயர் ஒரு பெரிய போடில் எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும்.
அப்படி அந்த போடில் இருவரது பெயரும் அருகருகே இடம்பிடித்துவிட்டது. அவர்களைத் தவிர வேரு யாரும் i.a.b. பள்ளி வரலாற்றில் இதுவரை இருவராக முதல் மதிப்பெண் எடுத்ததில்லை!
i.a.b. பள்ளிக்குச் சென்றால் நீங்கள் அவர்களது பெயர்களை பார்க்கலாம். i.a.b-யை இழுத்து மூடும்வரை அவர்களது பெயர் இடம்பெற்றிருக்கும்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக