இங்கே துலாவு

ஞாயிறு, 7 ஜூன், 2015

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது



   ப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது:
 இன்றய சூழல் பலவற்றை மரக்கடித்து;
 சிலவற்றை மட்டும் பற்றிக்கொள்ள வைத்துவிட்டது.
மிருகங்கள், பறவைகள், ஏன் மனிதர்களும் அண்ணியமாகிவிட்டனர்.
குடும்பச்சிக்கல், பழங்கால புணைவு, என கலந்து
வியப்புலகில் ஆழ்த்தும் புத்தகம் s.ராமகிருஸ்நனின் அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது.
    வாழ்க்கை, புணைவு, இவை இரண்டும் வேறா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்வேன் நான்.
புணைவுகலைவிட வாழ்க்கை மிகுந்த சுவாரசியமானது.
இங்கோ நிலமை தழைகீழ், ஒரு பார்வையற்றவன் தொடர்வான கதை என்றால் காகிதமும் கண்ணீர் விடும் அளவிர்க்கு சோகத்தில் நனைத்து தான் கதை சொல்வார்கள்!
ராமகிருஸ்ணன் கதைக் கலங்களை கச்சிதமாக தேர்வு செய்து கதைகளை நகர்த்துகிறார்.
இன்று கற்பனைகள் வரண்டு விட்டனவோ என்ற ஐயம் எழும் போதெள்ளாம்;
இவர் போன்ற எழுத்தாளர்கள் உள்ளேன் என;
 தங்கள் இருப்பை இத்தகய புத்தகங்கள் வழியே உறுதிப்படுத்துகின்றனர்.
அடிமைத்தனம் எத்தனை கொடுரமானது என்பதற்கு இந்நூலின் முதல் கதை சான்று.
இங்கிலாந்து ரானியை மகிழ்விப்பதற்காக
 முத்துகளை பரிசலிக்க நினைத்து ஒரு தீவுக்கு வரும் படைத்தலைவன்;
 அந்த தீவில் உள்ளோரின் தயவின்றி முத்து எடுக்க முடியாது என உணர்கிறான்.
அவர்களை மிறட்டி பார்க்கிறான் அவர்கள் பணியவில்லை.
இப்படியே பல ஆண்டுகள் ஓடி விடுகின்றன.
கடைசியில் முத்தை எடுத்துச் செள்ள
தீவினர் உதவுகின்றனர்.
முத்துக்களை கொண்டுவரும் போது தான்;
அவன் புத்திக்கு ுரைக்கிறது.
 ஒரு தணி நபருக்காக தன் இளமை முழுவதையும் இழந்து விட்டோமென்று.
ஒரு அதிகாரி இடமோ அரசனிடமோ நல்ல பெயர் வாங்குவதற்காக இங்கு பலர் தங்கள் சுயங்களை இழக்கிறார்கள் என சாட்டையடியாய் கதை சொல்கிறது.
      பன்னாட்டு நிறுவனங்களின் வருகை நம் சுயத்தை எப்படி இழக்க வைத்துவிட்டது.
நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது எப்படி?
ஆழுமைத் திறன் வளர்ப்பு வகுப்புகள் எள்ளாம்;
நம் ஆளுமயை வளர்ப்பதில்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைகளை தயார் செய்யும் வேளையைப் பார்க்கின்றன.
மார்கெட்டிங் துறையில் வேளை பார்ப்பவர்கள் எப்படி தன் மனமறிந்தே பொய் சொல்கிறார்கள்.
என்பதை தரமனியில் கரப்பான் பூச்சிகள் என்ற கதை விளக்குகிறது.
இன்று ஏமாற்றுவதற்கு அனைவரும் காத்திருக்கிறோம்.
கரப்பான் பூச்சிகள் கொடுமையானது எனச்சொல்லி;
 அந்த இனத்தை வேரோடு கொன்று குவித்து நிறுவனங்கள் காசு பார்க்கின்றன.
இதுதான் உலக மயமாதலின் பிரச்சனை.
உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குறித்த நிறுவனம் தீர்மானிக்கப்போகிறது.
 சோறு அதிகம் சாப்பிட்டால் சக்கரை வியாதி வரும்.
 போன்ற பிரச்சாரங்கள்;
 நம் மனதில் ஆழமாய் விதைக்கப்பட்டு அதன் பழனை மேற்கத்திய உணவு பண்டங்கள் மூளம் சில நிறுவனங்கள் அறுவடை செய்கின்றன.
இது கூட ஒரு இனச்சுத்திகரிப்பின் படினிலைதான்.
இது போன்று ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தலத்தில் இயங்குகின்றது.
வயதின் கணவுகள் என்ற கதையில்;
 செய்வினைக்கு ரோட்டில் போட்ட காசை ஒரு சிறுவன் ஐஸ் வாங்கித்தின்ன முயர்ச்சிக்கிறான்.
அந்த காசை எடுத்தாள் ரெத்தம் கக்கி இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இங்கு உண்டு.
அதை இன்னொரு சிறுவன் வீட்டில் சொல்ல; வீட்டில் அடிவாங்குகிறான்;
அப்போது  அந்த காசை இன்னொருவன் யாராவது எடுத்திருப்பான்.
அவன் ஐஸ் வாங்கி இருப்பான்;
அந்த சிறுவனுக்கு ஏதேனும் ஆனதா, அதைவாங்கிய ஐஸ் காரனுக்கு என்ன ஆகி இருக்கும் என அவன் நினைக்கிறான்.
இப்படி நாம் சிறுவயதில் புளியமரத்துப்பக்கம் போனதுக்கும்,
சந்தி மரப்பொட்டல் அறுகே விளையாடியதற்கும் திட்டு வாங்கி இறுப்போம்.
மனிதர்களின் இது போன்ற நம்பிக்கை வழியே  நம்மை சிந்திக்க வைத்து கதையை நகர்த்தி இருப்பார்.
கதை என்பது அறிவுரை சொல்லுவதல்ல நம் அறிவை தூண்டுவதாய் இருக்க வேண்டும் என்பதற்கு இக்கதை உதாரனம்.
ரசவாதியின் எளி என்ற கதை அக்காலத்தில் கடவுளின் பெயரால் நடந்த கொடுமைகலை சொல்கிறது.
 இன்று நாம் அனுபவிக்கும் பல விடையங்களுக்கு பலர் தங்கள் உயிரை விளையாக கொடுத்துள்ளனர்.
20 வயதில் நாம் படும்  அவமானங்களை படம்பிடித்து காட்டுகிறது
20 வயதின் அவமானங்கள் என்ற கதை.
பாலியல் சார்ந்த ஈர்ப்பால் வரும் சிக்கலை இக்கதை அலசுகிறது.
இப்படி பல கதைகள் சுருக்கென்று நம் மனதில் தைக்கின்றன.
   புனைதலின் வழியே புது உலகை
இத்தொகுப்பு காட்டுகிறது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக