இங்கே துலாவு

ஞாயிறு, 7 ஜூன், 2015

யாரைக்கேட்டு இப்படி செய்கிறீர்கள்?

     யாரை கேட்டு இப்படி செய்கிறீர்கள்: 
  இன்று பண்பளைகளின் வரவு அதிகரித்தவண்ணம் உள்ளது.
இன்று குரைந்த வயதிலேயே அறிவிப்பாளர்களாக  இலசுகள் மாரி கலக்குகிறார்கள்.
பொய்கள் என்றும் அழகானவை!
 அந்த வகையில்தான் நான் சொன்ன பொய்யும்.
வானொளிகள் புதுமை என்ற பேரில் தொடர்ச்சியாய் 3 பாடல்கள்;
4 பாடல்கள் என ஒளிபரப்பி பரவசப்படுகிறார்கள்.
ஐந்து நிமிட செவ்வியைக்கூட;
 4 மணி நேர நிகழ்ச்சியாய் செய்யும் திறமைய நினைத்தால் எறிச்சல் தான் வருகிறது.
அதற்காக ஒளிபரப்பப்படும் புரோமோக்களை கேட்கும் போது ஊரைவிட்டே ஒடிவிடலாம் போல் இருக்கிறது.
 இன்றய அறிவிப்பாளர்களின் திறன் என்ன?
நிகழ்ச்சி பேரை சொல்வதும், நேரத்தை மட்டும் சொல்வதா.
வானொளி கேட்பவர்கள் எள்ளாம் கிருக்கனா?
இவர்கள் எதை வைத்து இப்படி எள்ளாம் செய்கிறார்கள்.
இன்று வானொளியின் முக்கிய கச்சா பொருளான பாடல்கள் பற்றி என்ன தெரியும்.
முக்கிய குறிப்பு நல்ல அறிவிப்பாலர்கள் பற்றி சொல்ல வில்லை.
இன்று சிறப்பாக அறிவிப்பு செய்பவர்களில் பலர் தங்கள் நடுத்தர வயதை தொட்டவர்களாகவும்;
அவ்வயதை தாண்டியவர்களாகவும் இருக்கின்றனர்.
இன்று வானொளிகளின் பாடல் தெரிவு  திறன் மிகவும் மோசமாக உள்ளது.
பாடலை எழுதியது யார்?
பாடியவர்கள் யார்?
இசை அமைத்தது யார்?
 இப்படி எதையும் சொல்வதில்லை
ரகுமான் பாடலும் இளயராஜா பாடலும் எங்களுக்குத் தெரியாதா?
அதைப் பற்றி மேளதிக விடயங்களை சொல்ல வேண்டாமா?
வாங்கும் ஊதியத்திற்கு நியாயம் செய்ய வேண்டாமா?
இன்று ஸ்க்ரிப்ட் ரையிட்டர்கள் வேறு வந்து விட்டனர்.
அப்படி என்றால் அறிவிப்பாளரின் நிலை என்ன?
இணையத்தில்  பல கட்டுரைகள் கொட்டி கிடக்கின்றன.
அவற்றை படித்து விட்டுக்கூட சுவாரசியமாய்  நிகழ்ச்சிகளை  வளங்களாம்.
தகவள்கள் கொட்டிக்கிடந்தும்.
வரச்சியாய் நிகழ்ச்சிகளை வளங்குவதை நினைத்தால் கடுப்புதான் வருகிறது.
இன்று வானொளிகள்  சினிமா கிசுகிசுக்களை வைத்தே ஒரு நாள் முழுமைக்கும் ஓட்டி விடுகிறார்கள்.
விளையாட்டு பற்றியும் பேசுகிறார்கள் ஆனால் அது ஒரு சாதாரன ரசிகர்களுக்குக்கூட தெரிந்த விடயங்களாக இருக்கிறது.
வானொளியை கேட்பவர்களுக்கு நீதி செய்யும் வகையில் பல வானொளிகளின்  ஒளிபரப்பு இல்லை.
இது போன்ற நிலை நம் வானொளிகள் மீது மதிப்பை கெடுக்கும்.
இப்போது  நம் தமிழ் நாட்டு வானொளிகள்;
நம் மொழியை கொலை செய்யவில்லை!
 படுகொலை தான்
செய்கின்றது.
இப்போது கத்திப்பேசு வது ஒரு ஸ்டெயில் போல கருதப்படுகிறது.
 இப்படி சம்மந்தம் இல்ளாமல் கத்திப்பேசி
 ஒரு தொலைக்காட்சி தொகுப்பாலினி மூக்குடைபட்டது நினைவிருக்கும் என நினைக்கிறேன்.
நேயர் கடிதம் என்ற நிகழ்ச்சி வானொளியில் ஒளிபரப்பப்படும்.
அது போல் ஒளி பரப்பப்பட்டால் பலரின்  வண்டவாளங்கள் வெளியே தெரியும்.
இன்று பலரை தொலைக்காட்சியை நோக்கி ஓட வைத்த பங்கு பண்பளைகளுக்கு உண்டு.
ஒரு பொருளை விரும்ப வேண்டுமானால் அது தணித்துவமாய் இருக்க வேண்டும்.
அப்படி பல வானொளிகளுக்கு என்னமே கிடையாது.
எள்ளாம் ஒரே குட்டையில்  ஊரிய மட்டையாக வேஉள்ளது.
 இப்படி சொல்லுரியே உனக்கென்ன தகுதி இருக்குன்னு கேட்குரீங்களா?
தமிழக முழுமையும் உள்ள வானொளிகளை
கேட்டு கொதிச்சுப்போயித்தான் எழுதுறேன்.
வானொளிகளை வெளிப்படயாகவும் கூற முடியும்
பாவம் பொழச்சுப்போங்கப்பா!
 இனி நானே பாட்ட போட்டு கேட்டுக்கிறேன்.
பண்பளைகளே வேனாம்ப்பா.
 இவங்கல திருத்த முடியாதுன்னு தெரிஞ்சும் எழுதுர என்ன திருத்த முடியுமுன்னு நினைக்கிறீங்க?
வாய்ப்பே இல்ல!
   முக்கியக்குறிப்பு இன்றும்
சிறப்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பண்பளைகள் உள்ளது
 அவர்களுக்கு எனது கோடிக்கணக்கான நன்றிகளும்;
 மேளும் தொடர வாழ்த்துக்களும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக